நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும் ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி பாண்டியன் தனக்குப் பரிமாவிற்று ஈண்டு கனகம் இசையப் பெறாஅது ஆண்டான் எம்கோன் அருள்வழி இருப்பத் 40 தூண்டு சோதி தோற்றிய தொன்மையும் அந்தணன் ஆகி ஆண்டுகொண்டருளி இந்திர ஞாலம் காட்டிய இயல்பும் மதுரைப் பெருநன் மாநகர் இருந்து குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் 45 நன்மையும் - நல்லருள் , உதவி , ஆண்டுகொள் - ஆட்கொள்ளுதல் உறு - மிக்க , திருவடி - இறைவன் , கடவுள் , பாண்டியன் - பாண்டிய மன்னன் , பரிமா - குதிரை , விற்று - விற்பனை செய்து , ஈண்டு - சேர்த்து , கனகம் - பொன் , தங்கம் , இசையப் - லாபம் , பெறாது - பெற்றுக்கொள்ளாமல் , ஆண்டான் - முதலாளி , மன்னன் , எம்கோன் - எம்பிரான் , அருள்வ ழி - அருள் நெறியில் , ஆன்மீக வழியில் , இருப்பத் - நிலைத்திருக்க , தூண்டு - தூண்டி , வழிகாட்டி , சோதி - சுடர் , ஒளி , தோற்றிய - தோற்றமளித்த , காண்பித்த தொன்மையும் - தன்மை , ஆண்டுகொண்டருளி - ஆட்கொள்ளுதல் , இந்திர ஞாலம் - கண் கட்டு வித்தை , மாயவித்தை இய...