* கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி * நுதல் என்றால் நெற்றி என்று பொருள் . கண் நுதலான் என்றால் நெற்றியிலே கண்ணுடைய பெருமான் என்று பொருள் . எய்தி என்றால் அணுகுதல் என்று பொருள் . கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி என்றால் நெற்றியிலே கண்ணுடைய பெருமான் தன் கருணையை காட்ட என்னை அணுகியபோது என்று அர்த்தம் . * எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி * எண்ணுதல் என்றால் மதிப்பிடுதல் , எட்டா என்றால் இயலாத , எழில் என்றால் தோற்றப்பொலிவு , ஆர் என்றால் அழகு மற்றும் அரிய என்று பொருள் . கழல் என்றால் பாதம் திருவடி என்று பொருள் , இறைஞ்சி என்றால் மரவுரி என்று பொருள் . எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி என்றால் மரவுரி அணிந்த , அழகான , அரிய பாதங்களை உடையவன் , என்னால் மதிப்பிடவே முடியாத தோற்றப்பொலிவு உடையவன் என்று பொருள் . * விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய் , விளங்கு ஒளியாய் * விண் நிறைந்தும் என்றால் விண்ணுலகம் முழுவதும் என்று பொருள் , மண் என்ற...