திருக்கழுக்குன்றம் – யுகம் யுகமாய் வரும் இரண்டு வெள்ளை கழுகுகள் நன்றிகள் பல இந்த இணைய தளத்திற்கும் இந்த கட்டுரையை எழுதிய நிரஞ்சனா அவர்களுக்கும் மாமல்லபுரம் செல்லும் வழியில் திருக்கழுக்குன்றம் இருக்கிறது. திருக்கழுக்குன்றம் என்கிற பெயர் வந்த காரணம், இன்று வரை இந்த பகுதிக்கு இரண்டு வெள்ளை கழுகுகள் மதிய வேளையில் வருகிறது. சிறு குழந்தைக்கு உணவு ஊட்டுவது போல் அந்த இரண்டு கழுகுகளுக்கு பண்டாரங்கள் உணவு ஊட்டுவார்கள். யார் இந்த கழுகுகள்? பிரம்ம புத்திரர்கள் எட்டு பேர், சாரூப பதவி வேண்டி கடும் தவம் இருந்தார்கள். சிவபெருமானும் இவர்களின் தவத்தை மெச்சி காட்சி கொடுத்தார். தங்கள் தவத்தை ஏற்று சிவன் வந்ததை கண்டு பேரானந்தம் அடைந்து, பதட்டத்தில் சாரூப பதவி வேண்டும் என்று கேட்பதற்கு பதிலாக சாயுச்சிய பதவி வேண்டும் என்று கேட்டுவிட்டார்கள். “நீங்கள் 8 பேர். இரண்டு இரண்டு பேர்களாக பிறந்து இறைவனுக்கு பணி செய்வீர்கள்.” என்று சிவன் இவர்களுக்கு வரம் தந்தார். இவர்கள்தான் முந்தய யுகங்களில் சண்டன், பிரசண்டன் எனவும், சம்பாதி, சடாயு எனவும், சம்புகுந்தன், மாகுத்தன எனவும் இரண்டு இரண்டு பேராக...