ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் பித்ரு தர்ப்பணம் , பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் போன்றவற்றை குறித்து ஒரு பதிவு பார்த்தோம் . அதைத்தொடர்ந்து மோட்சதீபம் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம் . இந்தப் பதிவு , எனது குரு சாய் அவர்களினால் உணர்த்தப்பட்ட ஒரு பதிவு . பித்ருக்களுக்கு செய்யும் கடமைகள் அல்லது பித்ரு தோஷம் குறித்து செய்யப்படும் பரிகாரங்கள் அனைத்தும் செய்பவருக்கு நல்லது நடக்கும் என்கிற ஒரு கண்ணோட்டத்தில் மட்டுமே செய்யப்படுகிறது . அதாவது சுயநலத்தோடு செய்யப்படுகிறது . இந்தக் கண்ணோட்டத்தில் பித்ரு கடமைகள் செய்யும் பொழுது அல்லது பித்ரு தோஷ நிவர்த்தி செய்யப்படும்...