Skip to main content

மோட்ச தீபம் குறித்த விஷயங்கள்!

 


ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் பித்ரு தர்ப்பணம்பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் போன்றவற்றை குறித்து ஒரு பதிவு  பார்த்தோம்அதைத்தொடர்ந்து மோட்சதீபம் குறித்து இந்தப்   பதிவில் பார்ப்போம்இந்தப் பதிவுஎனது குரு சாய் அவர்களினால் 

உணர்த்தப்பட்ட ஒரு பதிவு பித்ருக்களுக்கு செய்யும் கடமைகள் 

அல்லது பித்ரு தோஷம் குறித்து செய்யப்படும் பரிகாரங்கள் 

அனைத்தும் செய்பவருக்கு நல்லது நடக்கும் என்கிற ஒரு 

கண்ணோட்டத்தில் மட்டுமே செய்யப்படுகிறதுஅதாவது 

சுயநலத்தோடு செய்யப்படுகிறதுஇந்தக் கண்ணோட்டத்தில் பித்ரு கடமைகள் செய்யும் பொழுது அல்லது பித்ரு தோஷ நிவர்த்தி 

செய்யப்படும் பொழுது அதனுடைய முழு பலன்கள் செய்பவருக்கு 

சென்றடைவதில்லைபித்ரு கடமை அல்லது பித்ருதோஷம் 

நிவர்த்திகள் செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் நம்முடைய 

முன்னோர்களின் ஆன்மாக்கள் ஏதேனும் கஷ்டத்தில் இருந்தால் 

அதிலிருந்து அவர்களுக்கு விடுபட நாம் செய்யும் பித்ரு தர்ப்பணம்

சிரார்த்தம் அல்லது தெவசம் மற்றும் மோட்சதீபம் போன்றவை உதவிசெய்யும்அவ்வாறு நாம் உதவி செய்யும் பொழுதுஅந்த 

ஆன்மாக்கள் தங்கள் படுகின்ற கஷ்டங்களில் இருந்து 

துன்பங்களிலிருந்து விடுதலை பெறும் பொழுதுஅவர்கள் நம்மை 

மனமார வாழ்த்துவார்கள்அந்த வாழ்த்துஅந்த ஆசீர்வாதம் நம் 

தலைமுறையையும் அடுத்து வரும் தலைமுறைகளையும் 

பாதுகாக்கும். ஆனால் இன்றைய நடைமுறையில் பெரும்பாலும் பித்ரு கடமைகள் அல்லது பித்ரு தோஷ நிவர்த்தி ஒரு சடங்காக பாவிக்கப்பட்டு 

செய்யப்படுகிறதுஇந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் 

கஷ்டங்களுக்கு நிவர்த்தியாக பித்ரு தோஷ நிவர்த்தி அமையாதா 

என்கிற கோணத்தில் மட்டுமே இந்த கடமைகள் செய்யப்படுகின்றனஇந்த கண்ணோட்டம் மாற வேண்டும்பித்ருக்களுக்கு நாம் ஏன் 

செய்யவேண்டும்என்பதை நாம் உணர்ந்து செய்ய வேண்டும்அதை நம் குழந்தைகளுக்கும் அடுத்த தலைமுறைக்கும் புரியவைக்க 

வேண்டும்அவ்வாறு செய்யும் பொழுதுநாம் இந்த உடலை விட்டு 

நீங்கும் பொழுதுநாம் பித்ருக்களாக மாறும்பொழுதுநமக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஆத்மார்த்தமாக செய்யப்படும்இந்த 

வாழ்க்கையில் அனைத்தும் சுழற்சியேநாம் என்ன செய்கிறோமோ அது நமக்கு திரும்பி வருகிறதுஎனவே நாம் முதலில் இதை 

உணர்ந்து நாம் செய்யும் பூஜைகள் ஆக இருந்தாலும் சரிநம்முடைய கடமைகளாக இருந்தாலும் சரிமற்றவர்களுக்கு செய்யும் 

உதவிகள் ஆக இருந்தாலும் சரிநம்முடைய பித்ருக்களுக்கு 

செய்யும் கடமைகளாக இருந்தாலும் சரி அனைத்தையும் 

ஆத்மார்த்தமாக செய்தல் வேண்டும்அதாவது சுயநலமின்றி 

செய்தல்வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் நாம் சுயநலமின்றி  

ஆத்மார்த்தமாக உணர்ந்து செய்யும் பொழுது அது நமக்கு 

அடிப்படையான சில விஷயங்களை உணர்த்துகிறதுஉணர்ந்த 

அந்த விஷயங்கள் நம் வாழ்க்கையின் பாதையை மாற்றியமைத்து

நம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைகிறதுமோட்ச தீபம் என்பது பித்ருக்களுக்கு ஏதோ ஒரு வகையில் அவர்களின் கஷ்டங்களில் 

இருந்து விடுபட உதவுகிறதுநம்முடைய முன்னோர்களின் 

ஆன்மாவிற்கு உதவும் என்கிற நோக்கத்துடன் ஆத்மார்த்தமாக 

மோட்ச தீபம் ஏற்றுவது பற்றி தெரிந்துகொண்டு நாம் ஏற்றும் 

பொழுது நம் வாழ்வின் துன்பங்களும் விலக வாய்ப்புள்ளது

பித்ருக்களுக்கு செய்வது குறித்து நாம் அனைவரும் நம் 

குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுப்போம். அப்பொழுதுதான் நம் காலத்திற்கு பிறகு நம் ஆன்மாவிற்கு உய்வு கிடைக்கும்.


மோட்ச தீபம் ஏற்றுவதற்கான வழிமுறை:


21 தலைமுறை பாவங்கள் தோஷங்கள் சாபங்கள் நிவர்த்தியாகும்

ஒருவர் இறந்துவிட்டாலோஅல்லது மருத்துவ துறையில் 

இருப்பவர்கள்கண்டிப்பாக "மோக்ஷ தீபம்கோவிலில் ஏற்ற 

வேண்டும் என ஒரு தொகுப்பில் அகத்தியப் பெருமான் கூறியிருந்தார்.


பலரும் அது சம்பந்தமாக விசாரிக்கதேடியும் கிடைக்கவில்லை

சமீபத்தில்நாடி வாசிப்பில் வந்தததை படித்த பொழுதுஅதற்கான 

பதில் கிடைத்தது. "சித்தன் அருளைவாசிக்கும் அனைவரும் தெரிந்து கொள்வதற்காக கீழே அதை தருகிறேன்.


தேவையானவை:-

*******************


வாழை இலை

பச்சை கற்பூரம்

சீரகம்

பருத்திக் கொட்டை

கல் உப்பு

மிளகு

நவ தான்யங்கள்

கோதுமை

நெல் (அவிக்காதது)

முழு துவரை

முழு பச்சை பயிறு

கொண்ட கடலை

மஞ்சள் (ஹைப்ரிட் அல்லாதது)

முழு வெள்ளை மொச்சை

கருப்பு எள்

முழு கொள்ளு

முழு கருப்பு உளுந்து

விளக்கு (200 மில்லி கொள்ளளவு) - 42

தூய பருத்தி துணி - (கை குட்டை அளவு) - 21


செய்யும் முறை:-

*******************


எல்லா பொருட்களையும் சுத்தமான நீரில் கழுவி (உப்பு உட்படபூ 

தவிரநல்ல வெயிலில் காய வைக்க வேண்டும்.


துணியினையும் சுத்தமாக துவைத்து மஞ்சளில் நனைத்து காய 

வைக்க வேண்டும்தீபம் ஏற்ற உகந்த நேரம் மாலை 6 மணிஎல்லா விளக்குகளையும் நன்றாக கழுவிநல்ல வெயிலில் காய வைக்க 

வேண்டும்.


மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும்எந்த ஆலயத்தில் 

தீபம் எற்றுகிறோமோ அந்த ஆலயத்தில் முன்பாகவே முறைப்படி 

அனுமதி பெற வேண்டும்.


எந்த ஆலயத்தில் வேண்டுமானாலும் ஏற்றலாம்முடிந்த வரை 

ஈசானிய மூலையில் (வடகிழக்குநன்கு உயர்ந்த இடத்தில் 

ஏற்றுவது சிறப்புமுதிலில் திரி தயாரிக்க வேண்டும்நல்ல சுத்தமான பருத்தி துணியில் பச்சை கற்பூரம்கருப்பு எள்சீரகம்பருத்தி 

கோட்டைகல் உப்புமிளகு ஆகியவற்றை முடிச்சுப்போட்டுக் 

கொள்ள வேண்டும்.


இந்த முடிச்சின் மறுமுனைதான் நமக்கு திரியாக பயன்படப் 

போகிறது.


ஆலயத்தில் இதற்கு என்று தேர்வு செய்யப் பட்ட இடத்தில்தலை 

வாழை இலையினை வைக்க வேண்டும்அதன் மேல்

 நவதானியங்களை பரப்ப வேண்டும்.


பிறகு 21 விளக்குகளையும் தனித்தனியாக வைத்து அதனுள் எள் 

நிரப்ப வேண்டும்.அதன் மேல் ஒவ்வொரு விளக்குக்கும்ஒரு 

விளக்காக மீதம் உள்ள விளக்குகளையும் வைக்க வேண்டும்.


நெய் நன்றாக நிரப்பப்பட வேண்டும்பின்னர் முன் செய்த திரியினை இதனுள் நன்றாக நனைக்க வேண்டும்சரியாக நடுவில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.


தீபம் மேல் நோக்கி மட்டுமே எரிய வேண்டும். (எந்த திசை நோக்கியும் இருக்ககூடாது). பார்ப்பதற்கு லிங்கம்

 போல் காட்சி கிடைக்கும்பிறகு பஞ்சாட்சர மந்திரத்தை குறைந்தது நூற்றி எட்டு முறை ஜெபிக்க வேண்டும் (விஷ்ணு ஆலயமாக இருந்தால் அஷ்டாட்சர மந்திரம்).


இறுதியாக இறைவனிடம் "இறைவாஇப்பூவுலகில் பிறந்துஇறந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இந்த பூசை பலனை 

சமர்ப்பிக்கிறோம்இந்த பலனால் அந்த ஆன்மாக்கள் நற்கதி

சற்கதி அடைய பிரார்த்தனை செய்கிறோம்.


மேலும் இந்த பூசையை செய்வதும்செய்ய வைப்பதும் இறைவனும் சித்தர்களுமேநாங்கள் வெறும் கருவிகளேஎன்று பிரார்த்தனை செய்ய வேண்டும்வேண்டுமானால்உங்கள் முன்னோர்களிடம் மானசீகமாக ஆசி வேண்டலாம்.

மறுநாள் நாம் பூசை செய்த விளக்குகள் (இலை நவ தானியம் உட்படஒரு துளி கூட சிந்தாமல் அனைத்து பொருட்களையும் நதியில் 

சேர்த்து விட வேண்டும்.


இது கட்டாயம்.

****************


ஒரு அருள் வாக்கில் அகத்தியப் பெருமான் ஒவ்வொரு பொருளும் 

ஏன் ஒவ்வொரு எள்ளும் கூட ஒரு ஆத்மா என்று கூறி உள்ளார்

அதனால்கண்டிப்பாக ஆற்றில் சேர்க்கவும்.



மோட்ச தீபம் குறித்து சில உபயோகமான பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

https://tut-temple.blogspot.com/search/label/மோட்ச%20தீப%20வழிபாடு


நோக்கிய தீபம் நம் முன்னோர்களுக்கு நாம் ஏற்ற வேண்டும் என்று நினைத்தாலும் கூட அது எல்லோராலும் ஏற்று இயலாது என்று சொல்லப்படுகிறது அதற்கான நேரம் வரும் பொழுது மட்டுமே நம்மால் ஏற்ற முடியும் என்றும் சொல்லப்படுகிறது. ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

Comments

  1. கடவுள் அந்த நிலையை தக்க சூழ்நிலையை தருவார் என்று நம்புவோம்
    ஓம் நமசிவாய

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கீர்த்தி திருஅகவல் விளக்கம் - 5 (வரிகள் 71- 86)

தேவூர் தென்பால் திகழ்தரு தீவிற் கோவார் கோலங் கொண்ட கொள்கையும் தேவூர்   - தேவூர் என்னும் திருத்தலம் , தென்பால்   - தென் பகுதி , திகழ் - மிகச் சிறப்பான ,   தீவி - கல் , வெளிநாட்டு செடிவகை , கோவார் ( கோ + வார் )   கோ - பசு , வார் - முலைக்கச்சு , கோலம் - வேடம் , தோற்றம் , கொள்கை - நிகச்சி தேவூர் என்னும் திருத்தலத்தில் தென்பகுதியில் சிறப்புமிக்க மரமான கல்லில் , பசுவின் முலையாக , அதாவது கன்றுக்கு பால் கொடுக்கும் வேடத்தில் தோன்றிய நிகழ்ச்சியும் என்று பொருள் . தேவூர் திருத்தலம் பற்றிய தகவல்கள்   தேனமர் சோலைத் திருவா ரூரில் ஞானந் தன்னை நல்கிய நன்மையும் தே - கடவுள் , இறைவன் , அமர் - விரும்பி , இருக்கும் , சோலை - அழகிய , திருவா ரூரில் - திருவாரூர் என்னும் திருத்தலத்தில் , ஞாலம் - பூமி , தன்னை - இறைவனை , நல்கிய - அருள் செய்கின்ற , நன்மை - சிறப்பும் இறைவன் விரும்பி இருக்கும் அழகிய திருவாரூர் எனும் திருத்தலத்தில் , பூமியாக இறைவன் இருந்து அருள் செய்கின்ற சிறப்பும் என்று பொருள் . ...

திருஅண்டப்பகுதி விளக்கம் வரிகள் 10 - 14

சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்   தெறியது வளியின் கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும் சூக்கம் - மிகவும் சிறிதாக , நுட்பமாக , தூலம் - விஷம் , சூறை - கழுத்தின் பின்குழி , மாருதம் - கோதை , பெண் , தெறி - விரலால் உந்துவது , வளி - சிறிது நேரம் , கொட்குதல் - மூர்ச்சித்தல் , மயக்கமடைதல்   பெயர் - தள்ளி விடுதல் , குழகன் - சிவன் , முழுவதும் - ஒப்பில்லாத பரம்பொருள் உலகத்தை காப்பாற்ற ஆலகால விஷத்தை மிகச்சிறியதாக , நுட்பமானதாக மாற்றி , அதை விழுங்கி , ஒப்பில்லாத பரம்பொருளான சிவன் சிறிது நேரம் மயக்கமடைந்தார் . உமையம்மை அந்த விஷத்தை விரலால் கழுத்தின் குழிப் பகுதியில் தள்ளிவிட்டார்   என்று மாணிக்கவாசகர் இங்கு குறிப்பிடுகிறார் . சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலுக்கு , 1977- ம் ஆண்டு காஞ்சி பெரியவர்   விஜயம் செய்தபோது , இக்கோவில் , விக்கிரகம் பற்றிய சிறப்புகளை எடுத்துக் கூறி அருளாசி வழங்கினார் . பள்ளி கொண்டிருக்கும் பரமேஸ்வரின் திருவுருவம் அபூர்வம் என்றும் , தாம் கண்ட கண்கொள்ளாக் காட்சியை அனைவரும் கண்டு தரிசிக்க ...

சிநேகிதனுக்காக சிவபெருமானே பிச்சை எடுத்த அற்புதம்!

சுந்தரரின் பசியை போக்க சிவபெருமானே திருவோடு ஏந்தி பிச்சை எடுத்த திருத்தலம் திருக்கச்சூர் ஆகும். சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது மறைமலைநகர். இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது  திருக்கச்சூர் . சிங்கபெருமாள் கோவிலில் இருந்தும் திருக்கச்சூருக்கு வரலாம். இங்கே பிரமாண்டமான ஆலயத்தில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் சிவனார். இவரின் திருநாமம்  ஸ்ரீகச்சபேஸ்வரர் . அம்பாள் ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மை. உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீதியாகேசப் பெருமான். சுந்தரர்  இந்தத் தலத்துக்கு வந்தபோது, பசியால் களைத்து மயக்கத்துடன் அமர்ந்தார். அப்போது வயோதிகராக வந்த சிவனார், என்ன வேண்டும் எனக் கேட்டார். ‘பசிக்கிறது. உணவுதான் வேண்டும்’ என்றார் சுந்தரர். உடனே திருவோடை எடுத்துக் கொண்டு, வயோதிகத் தோற்றத்திலேயே, வீடுவீடாகச் சென்று, ‘சிவனடியார் சுந்தரர் வந்திருக்கிறார். அன்னம் வழங்குங்கள்’ என்று கேட்டு, பிக்ஷை எடுத்து, உணவு கொண்டு வந்து கொடுத்தார். பிறகு பசியாறிய சுந்தரருக்கு, சிவனார், உமையவளுடன் ரிஷபாரூடராகக் காட்சி அளித்தார். கச்சபேஸ்வரர் மூலவராகவும் தியாகேசர் உ...