இந்த இணையதளத்தில் இருந்துதான் தகவல்கள் எடுக்கப்பட்டன,இந்த இணையதளத்திற்கு நன்றி ! மன்றலங் கொந்து மிசை'' எனத் துவங்கும் திருப்பரங்குன்றத் திருப்புகழ்ப் பாடலில் ""பன்றி அம் கொம்பு கமடம் புயங்கம் சுரர்கள் பண்டையென்பு அங்கம் அணிபவர் சேயே!'' என்று வரும் அடிகளில் மூன்று புராண நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகிறார் அருணகிரிநாதர். இரணியாக்கன் என்ற அசுரன் பிரம்மனை நோக்கிக் கடும்தவம் புரிந்து ஏராளமான வரங்களைப் பெற்று விட்டான். அந்தக் கர்வத்தில் தனக்கு மிஞ்சிய வல்லமை படைத்தவன் மூவுலகிலும் இல்லை என்று கொக்கரித்து இந்தப் பரந்த உலகை ஒரு பாயைச் சுருட்டுவதுபோல் சுருட்டி கடலின் அடியில் மறைத்து விட்டான்! இதைக் கண்டு நடுங்கிய தேவர்கள் திருமாலிடம் சென்று உலகை மீட்டுத் தர வேண்டினார்கள். திருமால் அப்போதுதான் வராக (பன்றி) அவதாரம் எடுக்கிறார். மகா பயங்கரமான உருவம். இரண்டு மலை உயரமும், இரு கால்களுக்கு இடையே ஆயிரம் காதம் விசாலம் வடவா முகாக்கனி போன்ற கொடும் பார்வை (வடவா முகாக்கினி என்பது கடல்நீர் அதிகமாகாமலும், குறையாமலும் வைத்திருக்கும் கடலின் உள்ளேயே இருக்கும் ஒரு நெருப்பு என்பத...