வெய்யாய் , தணியாய் , இயமானனாம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே வெய்யாய் - விரும்புதற்குரிய, தணியாய் - மனதின் வேகத்தை தணித்து, இயமானன்- ஆன்மா, அகக்கடவுள், ஆம் -தங்கியுள்ள, விமலா - மாசற்றவன், குற்றமற்றவன், தூயவன் பொய் - மாயை, அகல - விலகுதல், நீங்குதல் , மெய்- உண்மை, ஞானம் - அறிவு, மெய்ச்சுடரே- கடவுளை ஒளியாய் வர்ணித்தல், எஞ்ஞானம் - எந்த ஒரு அறிவும், இல்லாதேன் - இல்லாத எனக்கு, இன்பப் பெருமானேகம்= இ + அப்பெருமானே, இ என்றால் விளக்கமற்ற, தெளிவற்ற, குழப்பமான, நுண்மையாய் மறைந்திருக்கிற என்கிற பொருள். (In English, appear dark, gloomy or indistinct) அஞ்ஞானம் = அந்த + ஞானம்...