யானை எய்த படலம்! தகவல்கள் எடுக்கப்பட்ட வலைத்தளம். நன்றிகள் பல அந்த வலைத்தளத்திற்கு. விக்ரமப்பாண்டியனின் ஆட்சியில் தர்மம் தழைத்தது. மக்கள் இல்லை என்ற சொல்லையே அறியாமல் வாழ்ந்தனர். சைவத்தை வளர்த்த மன்னன் பிற மதங்களின் வளர்ச்சியை தடை செய்து விட்டான். இதனால் எங்கும் தேவாரம் ஒலித்தது. தர்மமும், பக்திமார்க்கமும் உள்ள நாட்டை யாரால் அசைக்க முடியும்? வீரத்தின் விளைநிலமான விக்ரமன் பல தேசங்களுக்கும் படையெடுத்துச் சென்றான். அந்த மன்னர்களையெல்லாம் தோற்கடித் தான். அனைத்து தேச மன்னர்களும் பாண்டியநாட்டுக்கு கப்பம் கட்ட வேண்டுமென உத்தரவு பிறப்பித்து வந்தான். விக்கிரமனால் பாதிக்கப்பட்ட மன்னன் ஒருவன் காஞ்சிபுரத்தில் இருந்தான். அவனால் தனது தோல்வியைத் தாங்கவே முடியவில்லை. எப்படியாவது விக்ரமனைக் கொன்றே தீருவதென சபதமெடுத்தான். வீரத்தால் அவனைச் சாய்ப்பது கடினம் என்பதால், மதக்கலவரம் மூலமாக அவனைச் சாய்த்து விட திட்டம் போட்டான். அக்காலத்தில், சைவ சமயத்தினருக்கும், சமண சமயத்தினருக்கும் தீராத சண்டை நடக்கும். சமணர்கள் மந்திர தந்திரங் களில் கைதேர்ந்தவர்கள். மந்திரம், பில்லி, சூன்யம் மூலமாக விக்ரமனை அழித்து வி...