பூவல மதனிற் பொலிந்தினி தருளிப் பாவ நாச மாக்கிய பரிசும் தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து நன்னீர்ச் சேவக னாகிய நன்மையும் பூ - பிறவி , வலம் - மலம் , ஆணவம் , பொலிந்தினி - ( பொலி + இந்து + இனி ) பொலி - மொத்த விளைவு , இந்து - கரி , இனி - உடனடியாக , கணத்தில் , தண்ணீர் - அலைக்கழித்து , ஏமாற்று , பந்தர் - முற்பிறப்பில் செய்த தீவினையால் ஞானம் பெறாத பாசத்திற்கு உள்ளானவர்கள் , சயம் - சிதைத்து , பெற - தக்க காலத்தில் , வைத்து - காரணமான , நன்னீர் - நல்ல , சேவகனாய் - ஊழியஞ் செய்பவனாய் , நன்மை - நல்லருள் , கடவுள் பிறவி ஆணவம் போன்றவற்றின் மொத்த விளைவுகளை , ஒருகணத்தில் கரியாக்கி அருளி , பாவத்தை அழித்த பேறும் , முற்பிறப்பில் செய்த தீவினையால் ஞானம் பெறாது பாசத்திற்கு உள்ளானவர்கள் அலைகழிய காரணமானவற்றை தக்க காலத்தில் சிதைத்து , நல்ல ஊழியஞ் செய்பவனாய் நல்லருள் செய்தவன் இறைவன் என்று இங்கு மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார் . குறிப்பு : மேற்கண்ட நான்கு வரிகள் குறித்து பல விளக்கங்கள் இணையத...