தத்தாத்ரேய குரு அவதாரங்கள் தத்தாத்ரேய குரு அவதாரங்கள் யார் என்பதைப் பற்றியும் அந்த அவதாரங்களின் நோக்கம் மற்றும் மகத்துவத்தைப் பற்றி சொல்வதாக இந்தப் பதிவு அமைகிறது . தத்தாத்ரேய குரு அவதாரங்களை புரிந்து கொள்வதற்கு முதலில் அவதாரம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்வோம் . அவதாரம் எனபதற்கு இறங்கி வருதல் என்று பொருள் . மனிதன் மற்றும் அனைத்து ஜீவராசிகளும் பூமியில் கர்ம வினை காரணமாக பிறப்பெடுக்கிறது . ஆனால் இறைவன் எவ்வித கர்ம வினையின்றி அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டவே பூமியில் அவதாரம் எடுக்கிறார் . அவதாரம் என்பது மனித உடல் அல்லது மனித மற்றும் விலங்கு உடல் கொண்டு அல்லது விலங்கு உடலாகவோ இருக்கலாம் . அவ்வாறு விஷ்ணு எடுத்த அவதாரங்கள்தான் தசாவதாரங்கள் . மும்மூர்த்திகளும் இணைந்து கலியுகத்தில் மக்களை உய்விப்பதற்காக தெய்வ குரு அவதாரமாக வந்தவர் ஸ்ரீ தத்தாத்ரேயர் . தெய்வ குருவாக தத்தாத்ரேயரை மகா பெரியவர் தன்னுடைய தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதியில் குறிப்பிட்டிருக்கிறார் . “ குரு பரம...