அருக்கனிற் சோதி அமைத்தோன் திருத்தகு 20 மதியின் தண்மை வைத்தோன் திண்திறல் தீயின் வெம்மை செய்தோன் பொய்தீர் வானிற் கலப்பு வைத்தோன் மேதகு காலின் ஊக்கங் கண்டோன் நிழல்திகழ் நீரின் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட 25 மண்ணின் திண்மை வைத்தோன் என்றென்று எனைப்பல கோடி யெனைப் பல பிறவும் அனைத்தனைத் தவ்வயின் அடைத்தோன் அஃதான்று அருக்கன் - சூரியன் , சோதி - ஒளி , அமைத்தோன் - சிருஷ்டித்தல் , திருத்தகு - பரிசுத்தமான , மதி - நிலவு , தண்மை - குளுமை , வைத்தோன் - கொடுத்தவன் , திண்திறல் - பிழம்பு , தீ - அக்னி , வெம்மை - வெப்பம் , ஒளி செய்தோன் - வைத்தவன் , பொய்தீர் - முடிவே இல்லாத , வான் - ஆகாயம் , கலப்பு - விரிவடையும் தன்மை , கால் - காற்று , பூக்கள் , ஊக்கம் - உற்சாகம் , நிழல்திகழ் - இயற்கையாகவே குளிர்ச்சியாக உள்ள , நீர் - தண்ணி , இன்சுவை - இனிய சுவை , நிகழ்ந்தோன் - ஏற்பட வைத்தவன் , வெளிப்பட - பரந்து இருக்கும் , திண்மை - வலிமை , என்றென்று - இவற்றையெல்லாம் பற்றி சொல்லிக்கொண்டே இருந்தால் என்றென்றும் சொல்லிக்கொண்டே இர...