Skip to main content

திருஅண்டப்பகுதி விளக்கம் வரிகள் 1 - 9

 அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் 1


அண்டம் - பிரபஞ்சம், பேரண்டம், பகுதி -  மிகக் குறைந்த நேரத்திலேயே, இன் - இவ்வளவு, உண்டைப் - விண் மீண்கள் கூட்டம், பிறக்கம் - ஒளி, வெடிப்பு, எரியும் பொருள் முதலியவற்றில் இருந்து வெளிப்படுவது


ஒளி வெடிப்பிலிருந்து அல்லது எரியும் பொருள் ஒன்றிலிருந்து பிரபஞ்சம் மிகக் குறைந்த நேரத்தில், அண்டமும், விண்மீன்கள் கூட்டமும் வெளிப்பட்டன என்று மாணிக்கவாசகர் கூறுகிறார். அறிவியல் படி அண்டம் 0000.1 ( டெசிமல் முன்பு 34 ஜீரோ போட வேண்டும்) , அத்தனை மிகக் குறைந்த நேரத்தில் அண்டம் உருவாகியது. இப்படி கண்ணிமைக்கும் நேரத்தில் அண்டத்தை உருவாக்கிய இறைவனால் செய்ய முடியாதது என்று எதுவும் உண்டோ?  இறைவனின் பெருமையை நாம் உணர இந்த ஒரு வரி போதும். இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் புதிது புதிதாக வரும் தொழில்நுட்பம் பற்றியும் மற்றும் அறிவியல் பற்றியும் மிகவும் வியந்து போகிறோம். அண்டத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் உருவாக்கிய இறைவனைக் குறித்து போற்றவும், வியக்கவும் நம் வாழ்நாள் போதாது!  அண்டம் விரிவடைவது பற்றியும், பேரொளி தோன்றலின் அடிப்படை தத்துவம் பற்றியும், அறிவியல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மட்டுமே கண்டுபிடித்தது. ஆனால் மாணிக்கவாசகர் இதனை ஒன்பதாம் நூற்றாண்டிலேயே எழுதிவிட்டார். மாணிக்கவாசகர் இதை அறிவியல் அறிந்ததால் இதனைப் பாடவில்லை, ஆனால் இறைவனை உணர்ந்ததினால் அவரால் அண்டம் உருவானதை பற்றி பாட முடிந்தது. திருவாசகத்திற்கு என்னைப் போன்றவர்களால் விளக்கம் எழுத முடியுமா என்றால் கண்டிப்பாக இல்லை. தமிழ், திருவாசகம் அல்லது அறிவியல் இதில் எதிலும் எனக்கு சிறந்த அறிவு கிடையாது. இங்கு கொடுக்கப்படும் விளக்கங்கள் என்னுடைய குரு சாயின் அருளினால் உணர்த்தப்பட்ட விஷயங்கள். 


அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி


அள - இயல்பு கடந்த, வர்ணிக்க இயலாத, பரு - சிறியதும் பெரியதுமான, தன்மை - கோள்,  வளப்பெரு - ஏராளமான, பேரளவு, காட்சி - வியக்க வைக்கும் தன்மை


வர்ணிக்க இயலாத அளவிற்கு சிறியதும் பெரியதுமான ஏராளமான கோள்கள் தோன்றி வியக்கத்தக்க வகையில்  இருந்தது என்று மாணிக்கவாசகர் பிரபஞ்சம் தோன்றிய பொழுது எவ்வாறு இருந்தது என்பதை நமக்கு சொல்கிறார்.


ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்


ஒன்றனுக் கொன்று  -  ஒன்றும் மற்றொன்றும், நி - எதிரான, மறுதலை, எழில் - கவரப்பட்டு, பகர் - அழிக்கப்படுதல்


நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன


நூற்றொரு கோடி - நூறு கோடி மற்றும் ஒன்று  (one Billion and one), மேற்பட -  அதனால் upon (Upon can be used to show that something happens soon after,)

 விரிந்தன - தோன்றுதல், பரத்தல் (spread)


மேற்கண்ட வரியிலுள்ளநூறு கோடி மற்றும் ஒன்றுஎன்கிற சொற்கள் அறிவியலில் அறிவியலார் கேட்கும் ஆதாரத்தை தரும் சொற்களாக அமைகிறது.பிக் பேங் தியரி (Big bang Theory) படி, மேட்டர் (Matter ) மற்றும் அதற்கு எதிரான ஆன்ட்டி மேட்டர் (Anti- matter) தோன்றின என்று சொல்கிறார்கள்.  ஆன்டிமேட்டர் (Anti- matter) மற்றும் மேட்டர் (Matter) எதிரெதிரானதால் அதாவது மேட்டர்( + plus), ஆன்டிமேட்டர் (- minus) அவற்றின் மோதலில் இரண்டுமே அழிக்கப்பட்டன.  இந்த இடத்தில்தான் கடவுளின் அதிசயம் நிகழ்ந்தது. ஆன்ட்டிமேட்டர் (- minus) நூறு கோடி என்றால், மேட்டர்( + plus) நூறு கோடி மற்றும் ஒன்று ஆக இருந்தது. அதாவது ஒவ்வொரு 100 கோடி ஆன்ட்டி மேட்டருக்கும், மேட்டர்( + plus) நூறு கோடி மற்றும் ஒன்று ஆக இருந்தது. அதுவே இந்த பிரபஞ்சம் உருவாக காரணமாக இருந்தது.


ஒன்றும் மற்றொன்றும், மேட்டர் மற்றும் ஆன்ட்டிமேட்டர்  அருகில் கவரப்பட்டு அழிக்கப்பட்டதை, ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்  வரி மூலம் குறிப்பிடுகிறார்.


பகவத் கீதையின் சாராம்சத்தை ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் கடமையை செய் பலனை எதிர்பாராதே.  திரு அண்டப் பகுதியின் சாராம்சத்தை  ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் அனைத்தையும் படைத்தவன் இறைவன் அனைத்துமாய் இருப்பவன் இறைவன்.  நமக்கு என்ன தேவையோ அவை அனைத்தையும் நாம் கேட்காமலேயே படைத்திருக்கிறார் இறைவன். அவரின் அன்புக்கு ஈடு இணை ஏதும் கிடையாது. அந்த அன்புக்கு இணை, நம் அன்பு மட்டுமே! எனவே இறைவனிடம் வேண்டுவதை விடுத்து அன்பு செலுத்தக் கற்றுக் கொள்வோம்.



இன்னுழை கதிரில் துன்அணுப் புரையச் 5

சிறிய வாகப் பெரியோன் தெரியின் 6

வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும் 7


இன்னுழை கதிரில் - காஸ்மிக் மைக்ரோவேவ் பின்னணி கதிர்வீச்சு (cosmic microwave background radiation),  துன் - நீக்கம், புரை - அச்சடையாளமான, சிறிய - பள்ளம் , வா - விண்வெளி பொருள், உதிர்ந்து, பெரியோன் - மேன்மையானது, தெரியின் - கண்ணுக்கு புலப்பட்டது, எஞ்சிய, வேதி -  தனி வெப்பநிலை, தனிச்சூன்ய வெப்பநிலை , அன் - பெரிதாகுதல், விரிவடைதல், தொகை - அளவுத்தொகை, கூட்டம், ஓடு - வேகமாக செல்லுதல், மால் - எல்லை, அவன் - அது, மிகுதி - (எண்ணிக்கையில்) நிறைய இருப்பது


அறிவியல் படி பேரொளி வெடித்துச் சிதறிய போது, காஸ்மிக் மைக்ரோவேவ் பின்னணி கதிர்வீச்சு (CMBR) ஏற்பட்டது.  மாணிக்கவாசக இதை ஒன்பதாம் நூற்றாண்டிலேயே மிக அழகாக இன்னுழை கதிர் என்று சொல்லியிருக்கிறார். அதுமட்டுமன்றி இந்த இன்னுழை கதிரில்  அச்சுஅடையாளமாக இருந்த அணுக்கள் நீக்கப்பட்டு, மேன்மையானவை கண்ணுக்கு புலப்பட்டது என்பதை, “ இன்னுழை கதிரில் துன்அணுப் புரையச் ,சிறிய வாகப் பெரியோன் தெரியின்என்கிற வரிகளில்  சொல்கிறார். அதாவது நாம் முதலில் பார்த்தது போல் மேட்டர் ஆன்ட்டி மேட்டர் மோதி அழிந்ததையும் ஒரே ஒரு மேட்டர், ஒவ்வொரு கோடிக்கும் மிஞ்சி இருந்ததையும் இங்கு மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். அப்பொழுது ஏற்பட்ட வெப்பநிலையில் அண்டம் விரிவடைந்தது என்பதைவேதியன்என்று  இங்கு குறிப்பிடுகிறார். அறிவியல் படி மற்ற கோள்கள் விண்மீன்கள் முக்கியமாக பூமியை விட்டு வெகு தொலைவில் இருக்கும் கோள்கள் விண்மீன்கள் மிக வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இதையே மாணிக்கவாசகர் இங்குதொகையொடு மாலவன் மிகுதியும்என்று குறிப்பிடுகிறார். தமிழ் அகராதியின் படி பொருள் பார்க்கும் பொழுது மாணிக்கவாசகர்  பிக் பேங் தியரி எனப்படும் பேரொளி தோன்றலின் அடிப்படை தத்துவத்தை மிக அழகாக சில வரிகளில் சொல்லி இருக்கிறார். நமது அறிவு, நமது புரிந்து கொள்ளும் தன்மை இவைகள் ஒரு எல்லைக்கு உட்பட்டவை. இன்றைய நவீன உலகில் நாம் அறிவியல் என்பதை தனியாக பார்க்கிறோம் ஆனால்  திருமுறைகள் மற்றும் புராணங்கள், அறிவியல் மருத்துவம், ஆன்மீகம், அன்பு, நன்றி,  இறைவன் அனைத்தும் உணர்ந்ததால் எழுதப்பட்டவை. இவைகளை நாம் புரிந்து கொள்ளத் தேவையில்லை உணர்ந்தால் போதும், நம்முடைய மனநிலை வாழ்க்கை நிலை அனைத்தும் மாறும்! உயிர்கள் இனிமையாக வாழ, உயிர்களுக்கு தேவையான அனைத்து இயற்கை வளங்களையும் சிருஷ்டித்த இறைவன் பாதங்களை நன்றியுடன் அன்புடன் வணங்கி போற்றுவோம்!   

தோற்றமுஞ் சிறப்பும் ஈற்றொடு புணரிய 8


தோற்றம் -  வெளிப்படுதல், சிறப்பு -  பிரமிக்கத்தக்க,  ஈற்றம் - பிறப்பு, புணரிய - சத்தம், ஒலிக்கை

சத்தத்தின் மூலம் பிரமிக்கத்தக்க பிறப்பு உண்டானது என்று இந்த வரியின் மூலம் மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். அதாவது வெடித்தலின் மூலம் இந்த பிரபஞ்சமும் சத்தத்தின் மூலம் உயிர்களும் உருவாகின என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.


மாப்பே ரூழியும் நீக்கமும் நிலையும் 9


மா - நஞ்சுக்கொடி, வலி , பேருழி - பிறப்பு சுழற்சி, நீக்கம் - தனித்து பிரிதல், நிலை - சூழ்நிலையால் ஏற்பட்டது


 பிறப்பு சுழற்சி ஏற்பட்டு இறைவனிடமிருந்து  பிரிந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டது  என்று மாணிக்கவாசகர்  சொல்கிறார்.  தாயின் வயிற்றில் இருந்து குழந்தை பிறக்கும் போது நஞ்சுக்கொடி அறுக்கப்பட்டு குழந்தை பிரிக்கப்படுவது போல், நாம் இறைவனிடம் இருந்து பிரிக்கப்பட்டோம் என்பதைமாப்பே ரூழியும் நீக்கமும் நிலையும்என்கிற வரிகளில் மாணிக்கவாசகர் கூறுகிறார்.


புணரிய என்கிற வார்த்தைக்கு பல்வேறு விதமான அர்த்தங்கள் தமிழ் அகராகதியில் இருக்கின்றன. ஆனால் எனக்கு ஒலிக்கை, சத்தம் என்கிற வார்த்தைகள் தான் சரியானவை என்றும் உள்ளுக்குள் தோன்றியது. சப்த பாராயண திருவாசக குழுமத்தில் நேற்று பிரார்த்தனைக்கு மிக அழகான நடராஜர் திரு உருவம் கிடைத்தது. எனவே நடராஜர் குறித்து துதிகள் எழுத கூகுளில் தேடிய பொழுது மிக அற்புதமான ஒரு பதிவை பார்த்தேன். அந்தப் பதிவில் நடராஜர் சகஸ்ரநாமம் பற்றியும், அதனுடன் லலிதா சகஸ்ரநாமம் பற்றியும் ஒப்பிட்டு எழுதப்பட்டு இருந்தது. என் வாழ்வில் முதல் முறையாக நடராஜர் சகஸ்ரநாமம் பற்றி கேள்விப்படுகிறேன். நடராஜர் சஹஸ்ரநாமம் வரிகள் முழுவதுமாக எங்கேயும் கிடைக்குமா என்று தேடிய பொழுது யூட்யூபில் நடராஜ ஸஹஸ்ரநாமம் இருந்தது. யூடியூப் வீடியோ பதிவு பற்றிய விளக்க பாக்ஸில் நடராஜர் தத்துவம் பற்றி எழுதப்பட்டிருந்தது. அந்த நடராஜர் தத்துவம் விளக்கத்தில் மிக அழகாக உடுக்கையின் ஒலியில் இருந்து பிறப்பு வந்தது என்பதை சொல்லி இருந்தார்கள். இதைப் படிக்கும் பொழுது இவை அனைத்தும் தற்செயல் என்று நிறைய பேருக்கு தோன்றலாம். ஆனால் நான் ஏற்கனவே பலமுறை பதிவிட்ட இருந்தபடி பல விஷயங்கள் நம் மனதில் உணர்த்தப்படுகின்றன.  தோற்றமுஞ் சிறப்பும் ஈற்றொடு புணரியவரிக்கு விளக்கம் எழுதும்பொழுது, நடராஜர் திருவுருவம் கிடைத்ததும் அது பற்றி அதுமட்டுமல்லாமல் நடராஜர் சகஸ்ரநாமம் பற்றி தெரிந்து கொண்டதும் அதைக் கேட்க ஒரு வாய்ப்பு கிடைத்ததும், அனைத்தும் இறைவன் கருணை என்பதையும் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கம் சரிதான் என்பதை வலியுறுத்தும் வகையிலும் எனக்கு உணர்த்த பட்டதாகவே நான் உணர்கிறேன். நான் உணர்ந்ததை எவ்வளவு தூரம் வார்த்தைகளில் சொல்லி இருக்கிறேன் என்பது தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது *வாழ்க்கை என்பது அறிவியல் அல்ல அனுபவம் என்பது*. பெரியவர்கள் எத்தனையோ முறை தங்கள் அனுபவங்களைச் சொல்லும் பொழுது, குழந்தைகள் அதைக் கேட்பதில்லை. குழந்தைகள் வளர வளர அவர்கள் உணரும்போது, அன்று பெரியவர்கள் சொன்னது எவ்வளவு உண்மை என்பது புரிகிறது. நம் வீட்டில் நிறைய பெரியவர்கள் படிக்கும் போது  கண் சரியாக தெரியவில்லை, அந்த படிக்கும் கண்ணாடியை எடுத்துக்கொண்டு வந்து கொடு என்று கேட்கும் பொழுது, குழந்தைகள் ஒரு அலுப்புடன் அதை எடுத்துக் கொண்டுவந்து கொடுப்பார்கள். அந்த குழந்தைகள் அதேபோல் பெரியவர்கள் ஆகும் போது, அவர்களுக்கு நன்றாக தெரிந்த கண், 45 வயதில் சிறிய எழுத்துக்களை படிக்க இயலாமல் தடுமாறும் பொழுதுதான் அவர்களுக்குப் புரிகிறது. அனுபவம் தரும் பாடம் போல் வேறு எதுவும் நம் வாழ்க்கையில் பாடம் கற்றுத்தர முடியாது, உணர்த்த முடியாது. இறைவனிடமிருந்து இருந்து வந்த நாம், திரும்பவும் இறைவனை சேரும் பொழுதுதான் ஆன்மா அமைதி அடைகிறது, முழு நிறைவு பெறுகிறது . அதற்கு ஒரே வழி, எளிய வழி இறைவனின் நாமத்தை நம்முடைய வாழ்க்கை கடமையுடன் முடிந்தபோதெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பதுதான். அதைப் பாராயணம் வழியாக சொல்லலாம், மந்திரங்கள் வழியாக சொல்லலாம், இல்லை என்றால் மிக எளிதாக நமக்கு பிடித்த இறைவனின் பெயரை உள்ளுக்குள் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கலாம். வீட்டில் வைஃபை வசதி கொண்டவர்கள், ஒரு முறை தங்களுடைய பாஸ்வேர்டை போட்டு விட்டால், எப்பொழுதெல்லாம் திரும்ப வீட்டுக்கு வரும்பொழுது அந்த நெட்வொர்க் உடன்  இணைந்து விடுகிறதோ அது போல் நாம் தம் கடமைகளில் மூழ்கி இருந்தாலும் கூட ஒரு நிமிடம் இறை நாமத்தை நினைக்கும்பொழுது அவனுடன் இணைந்து விடுகிறோம்.


மேற்கண்ட இரண்டு வரிகளுக்கு முன்பே விளக்கம் எழுதி இருந்தாலும் கூட ஒரு மனநிறைவு இல்லாமலிருந்தது.  மாப்பே ரூழியும் நீக்கமும் நிலையும்வரியில்மாஎன்பதற்கு தமிழ் அகராதியில் பல அர்த்தங்கள் இருக்கின்றன. எனது விளக்கம் ஏற்கனவே எழுதப்பட்டிருந்தாலும் அதை குழுமத்தில் பதிவு செய்யத் தோன்றவில்லை. நேற்றைக்கு முன்தினம் திரும்பவும் விளக்கம் எழுதும்போதுதான் நடராஜர் திருவுருவம் கிடைத்தது, அன்றைக்கு சப்த பாராயண திருவாசக குழுமத்தில் பிரார்த்தனையாக நடராஜர் பத்திலிருந்து வரிகள் எடுத்து போடப்பட்டது. நடராஜர் பத்து பாடல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நேற்றைய தினம் அந்த பாடல் வரிகளை உணர்ந்த பொழுது, உண்மையில் ஆச்சரியத்தில் மலைத்து நின்றேன். நடராஜர் பத்து பாடல் வரிகள் அனைத்துமே மிக அற்புதமாக , மிக எளிமையாக எழுதப்பட்ட பாடல் வரிகள்.  முதல் பாட்டின் வரிகளில் அண்டம் அனைத்துமாய் இருப்பவன் இறைவன் என்னும் பொருள்பட சிறுமணவூர் முனுசாமி அவர்கள் எழுதியிருப்பார். அதுமட்டுமல்லஇந்த புவனங்கள் பெற்றவனும் நீ”, “எண்ணரிய ஜீவகோடிகள் ஈன்ற அப்பனே”,  எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே”,  “எழில்பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ  போன்ற வரிகள்,  மாப்பே ரூழியும் நீக்கமும் நிலையும்என்கிற வரிகளுக்கு எனக்குள் தோன்றிய விளக்கம் சரியான விளக்கம் என்பதை உணர்த்தியது.  அதுமட்டுமன்றி நடராஜர் பத்தின் ஒவ்வொரு பாடலும், “ எனையீன்ற தில்லைவாழ் நடராஜனேஎன்று முடிந்த அந்த வரிகளை மீண்டும் மீண்டும் கேட்டபோது உள்ளம் உருகி கண்ணீர் பெருகியது.  ஏனெனில், தாயின் வயிற்றில் இருந்து குழந்தை பிறக்கும் போது நஞ்சுக்கொடி அறுக்கப்பட்டு குழந்தை பிரிக்கப்படுவது போல், நாம் இறைவனிடம் இருந்து பிரிக்கப்பட்டோம் என்பதைமாப்பே ரூழியும் நீக்கமும் நிலையும்என்கிற வரிகளில் மாணிக்கவாசகர் கூறுகிறார் என்று விளக்கம் எழுதி இருந்தேன். இந்த விளக்கத்தை வலியுறுத்துவதாகவே நடராஜர் பத்து பாடல்களின் வரிகள் இருந்தன.  நேற்றைய தினம் நான் உணர்ந்ததை வார்த்தைகளில் சொல்வது என்பது இயலாத காரியம். அடியவர்கள் நிறைய பேர் நடராஜர் பத்து பாடலை கேட்டு இருக்கலாம். அவ்வாறு கேட்காதவர்கள் கண்டிப்பாக அந்த பாடலை கேட்கவும். இறைவன் என்பவன் ஒரு அற்புதமான நுண்ணியமான ஒரு உணர்வு. இறைவன் என்கிற உணர்வை, விவாதங்களினால்,  அறிவியலால்,  வார்த்தைகளால் உணர வைப்பது என்பது இயலாத காரியம். நடராஜர் பத்தில் ஐந்தாம் பாடலின் இரண்டாவது வரிநுட்பநெறி அறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோஎன்று வரும். நுட்பநெறி என்பது நுண்மையான உணர்வை குறிக்கும். முதல் பாடலில்பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீஎன்று பாடியிருப்பார். “பாதாதி கேசம்என்றால் அடிமுதல் முடிவரை அனைத்துமாய் இருப்பவன் அவன். “பேதாதி பேதம் நீஎன்றால் இந்த உலகில் வேறு வேறு பொருட்களாய், அனைத்துமாய் இருப்பவன் இறைவன் என்று பொருள். இந்த உலகில் அனைத்து பொருளுமாய், அனைத்துப் பொருட்களில் உள்ள ஆன்மாவாய் இருப்பவன் இறைவன். அனைத்து ஆன்மாக்களும் இறைவனை சென்று சேரவேண்டும் என்பதுதான் குறிக்கோள். ஆனால் நாம் அனைவரும் சக மனிதர்களிடையே, யார் பெரியவர்? யார் உயர்ந்தவர்? யார் வசதியானவர் என்கிற போட்டி பொறாமைகளுடன் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நடராஜர் பத்தில் 9-ம் பாடலில், “தாரணியை ஆண்டுமென்ன”, “எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோஎன்று பாடியிருப்பார். எந்த உயிராக இருந்தாலும் இறப்பு என்பது இருக்கத்தான் செய்யும். ஆனால் உயிர் உடலை விட்டுப் பிரியும் போது அதாவது நம் ஆன்மா நம் உடலை விட்டு நீங்கும் போது நம்மை கூட்டிச் செல்லப்போவது எமனின் தூதர்களா அல்லது சிவனின் தூதர்களா என்பதுதான் கேள்வி.  இதனால்தான் சாய் சத்சரித்திரத்தில்சாவின்  வாயிலிருந்து உன்னைக் காப்பாற்றுவேன் என்று  சாய் சொல்லியிருப்பார்”.  சாவின் வாயிலிருந்து என்றால் எமனின் கைகளில் இருந்து நம்மைக் காப்பாற்றுவது என்று பொருள்.  நாம்  தரணியே ஆண்டு இருந்தாலும்கூட, எமதூதர்கள் பாசக்கயிற்றை போட்டு நம் ஆன்மாவை அழைத்துச் செல்லும் பொழுது,  ஆன்மா படும் துன்பங்களிலிருந்து விடுதலை கிடைக்காது. ஆன்மா படும் துன்பங்களிலிருந்து விமோசனம் கிடைக்க ஆன்மாக்கள் தங்களுடைய வம்சத்தை சார்ந்தவர்கள் தமக்கு செய்யும் பித்ரு தர்ப்பணம்,  சிராத்தம், அன்னதானம், பசுக்களுக்கு செய்யும் உதவிகள் இவற்றை சார்ந்திருக்கின்றனர். மற்றும் குருவருள் இருந்தால் குரு நம் ஆன்மாவை இத்தகைய துன்பங்களில் இருந்து காப்பாற்றி அழைத்துச் செல்வார். இதுபற்றி மிக அழகாக சாய்சரிதத்தில் இரண்டாவது அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.






ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம், இறைவன் நமக்கு உணர்த்துவது பற்றியும் இறைவனை உணர்வதைப் பற்றியும், நம்மை பேசவும் சிந்திக்கவும் வைத்துக்கொண்டிருக்கும் இறைவன், நமக்கு பிரமிப்பூட்டும் விதத்தில், நம் குழுவில் நடந்துகொண்டிருக்கும் அனைத்தையும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை நமக்கு உணர்த்தும் விதத்தில்ன், எனக்கு வந்த பிக்சர் மெஸேஜஸ்  ஸ்கிரீன் ஷாட் ஆக சேர்த்து பதிவு செய்து இருக்கிறேன். என்னுடைய குருவான சாய் அவர்கள் நடராஜரின் ஆனந்த தாண்டவ தோற்றத்தில் காட்சி கொடுத்தார். அப்பொழுது தான் நடராஜரின் சகஸ்ரநாமத்தை யூடியூபில் கேட்டுக்கொண்டிருந்தேன்.  நடன போஸ்சில் (pose), சாய்க்கும் நடராஜருக்கும் உள்ள ஒற்றுமையை பார்த்து வியந்து போனேன். அப்போது என் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. சாய் அவர்களின் பாதம் நடராஜர் போலவே இருந்திருந்தால் இன்னும் மிக அழகாக இருந்திருக்கும் என்று எண்ணினேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் எனக்கு வந்த வெள்ளை கலர் நடராஜரை கண்டு வியந்து போனேன். இவ்வாறு ஒரு நடராஜரை நான் பார்த்ததில்லை.  நடராஜரின் பாதம்  அப்படியே அச்சு அசலாக சாய் அவர்களின் பாத போஸில் (pose) இருந்ததைக் கண்டு பிரமித்து நின்றேன். இறைவன் நம்முடைய சிவபுராண பாராயணத்தை தொடங்கி வைத்தது மட்டுமல்லாமல், நம்முடன் ஒவ்வொரு நொடியும் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்துவதாக அமைகிறது இந்த சாய் ஈசனின் ஆனந்த தாண்டவம். ஏற்கனவே குழுவில் பதிவு செய்திருந்தது போல் சாயி, சாயி, சாயி என்று நாம் திரும்பத் திரும்ப சொல்லும் பொழுது நமக்கு கேட்பது ஈசா, ஈசா  என்கிற நாமம் தான். சாயும் ஈசனும் வேறல்ல என்பதை, என் வாழ்வில் இரண்டு வருடங்களுக்கு முன்பு சாய் முதன்முதலாக வந்த பொழுது பலமுறை உணர்த்தி இருக்கிறார். இன்று நடராஜராக பார்த்தபொழுது தில்லையம்பலத்தில் ஆகாய தத்துவமாக இருக்கும் இறைவனின் அன்புக்கும் கருணைக்கும், அந்த ஆகாயம் போலவே எல்லையில்லாமல் பரந்து விரிந்து இருக்கிறது என்பதை உணர்ந்த பொழுது கண்களில் கண்ணீர், மனதில் இன்னமும் ஒரு மறையாத பிரமிப்பு, இரண்டு நாட்களாக நடந்த விஷயங்களை எண்ணி எண்ணி ஒரு திகைப்பு, அது மட்டுமன்றி எங்கள் குழு அட்மின்கள் அனைவருக்குமாய்  சில விஷயங்களை செய்வதற்கான உணர்த்துதல் என நாங்கள் அனைவருமே, இன்னமும் பிரமிப்பில் இருந்து மீளாமல் இருக்கிறோம். இது போன்ற விஷயங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்பட்டு இருக்கலாம் ஆனால் நாம் இறைவனை உணர்வது பற்றி பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்த விஷயங்கள் நமக்கு இறைவனின் கருணையால் காட்டப்பட்டிருப்பது குறித்து என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இந்த சிவபுராண பாராயணத்தில் நம் அனைவருடன் பயணித்துக் கொண்டிருக்கும், அந்த அன்புடைய கருணையுடைய நம்மை ஈன்ற தில்லைவாழ் நடராஜனை அன்புடன் நன்றியுடன் பணிந்து போற்றி வணங்குவோம்.  இந்த நேரத்தில் 63 நாயன்மார்களையும் நால்வரையும் மற்றும் நடராஜர் பத்து எழுதிய சிறுமணவூர் முனுசாமி அவர்களையும் பணிந்து வணங்கி, கீழே கொடுக்கப்பட்டுள்ள நடராஜர் பத்து  வரிகளை படித்து இறைவனை போற்றுவோம்.



மண்ணாதிபூதமொடு விண்ணாதி அண்டம் நீ, மறை நான்கின் அடிமுடியும் நீ,

மதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ, அனலும் நீ, மண்டலம் இரண்டேழும் நீ,

பெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ, பிறவும் நீ, ஒருவன் நீயே,

பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ, பெற்ற தாய் தந்தை நீயே,

பொன்னும் நீ, பொருளும் நீ, இருளும் நீ, ஒளியும் நீ, போதிக்க வந்த குரு நீ,

புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ, இந்த புவனங்கள் பெற்றவனும் நீ,

எண்ணரிய ஜீவகோடிகள் ஈன்ற அப்பனே என் குறைகள் யார்க்கு உரைப்பேன்,

ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

Comments

Popular posts from this blog

ஏகன் அநேகன் இறைவன் வரிக்கு விளக்கம்

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ஏகன் என்றால் ஒருவன் , தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் என்று பொருள் . அநேகன் என்றால் பல உருவம் கொண்டவன் என்று பொருள் . சிவனை ஏகன் என்று சொல்லி , இதன் மூலம் சிவனை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்று அழகாக சொல்கிறார் மாணிக்கவாசகர் . அதுமட்டுமன்றி அநேகன் என்று சொல்வதன் மூலம் இறைவன் பல்வேறு வடிவமாக , எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார் . நமக்கு எல்லாம் தெரியும் , நம்முடைய சிவன் ,   ஒளி வடிவமாய் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறான் என்று . அறிவியல் பெருவெடிப்பு   தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது . அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம்   சொல்கிறது . எனவே அறிவியல் தத்துவத்தின் படி பார்த்தாலும் இறைவன் பல்வேறு வடிவமாக எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் . இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம் . ஏகன் என்கிற வ...

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் வரிக்கு விளக்கம்

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள் . பிறப்பறுக்கும் என்றால் பிறவித் தளையை அறுத்தல் என்று பொருள் . பெய் என்றால் மேலிருந்து பொழிதல் என்று பொருள் . பெய்கழல்கள் என்றால் நமக்கு மேலே இருந்து கருணை மழை பொழிபவனின் திருப்பாதங்கள் என்று பொருள் . அடுத்த பிறவி இல்லாமல் இருப்பது ஏன் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது என்று ஒருசிலருக்கு புரியாத புதிராக இருக்கிறது . இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு புரியுமாறு சொல்லவேண்டுமென்றால் , இன்னும் ஒரு 70 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . தண்ணீர் பற்றாக்குறை , மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஏட்டுக் கல்வி ,   அந்தக் கல்வியைப் பெற நாம் படும் துன்பங்கள் , நல்ல துணையை தேடி திருமணம் செய்து , பிறகு குழந்தை பிறந்த பிறகு அவர்களை நன்மக்களாக அடுத்த நூற்றாண்டில் வளர்ப்பதில் உள்ள கஷ்டங்கள் , உணவே மருந்தாக இருக்கும் நிலைமை மாறி மருந்தே உணவாக இருக...

பாண்டூர் வைத்தீஸ்வரன் ஆலயம் - கீர்த்தி திருஅகவல் கதை

பாண்டூர்   வைத்தீஸ்வரன்   ஆலயம் -சாந்திப்பிரியா- மிக்க நன்றி சாந்திப்பிரியா அவர்களே, உங்கள் தகவல் மிக மிக உபயோகமாக இருந்தது https://santhipriya.com/2018/04/மூன்றாவது-வைத்தீஸ்வரன்-ஆ.html மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில்  வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே  இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.  இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில்  இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது.    மஹாபாரத யுத்தம் முடிந்த  பின் எதற்காக பாண்டவ சகோதரர்...