சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்
தெறியது வளியின்
கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும்
சூக்கம் - மிகவும் சிறிதாக, நுட்பமாக, தூலம் - விஷம், சூறை - கழுத்தின் பின்குழி, மாருதம் - கோதை, பெண், தெறி - விரலால் உந்துவது, வளி - சிறிது நேரம், கொட்குதல் - மூர்ச்சித்தல்,மயக்கமடைதல் பெயர் - தள்ளி விடுதல், குழகன் - சிவன், முழுவதும் - ஒப்பில்லாத பரம்பொருள்
உலகத்தை காப்பாற்ற ஆலகால விஷத்தை மிகச்சிறியதாக, நுட்பமானதாக மாற்றி, அதை விழுங்கி, ஒப்பில்லாத பரம்பொருளான சிவன் சிறிது நேரம் மயக்கமடைந்தார். உமையம்மை அந்த விஷத்தை விரலால் கழுத்தின் குழிப் பகுதியில் தள்ளிவிட்டார் என்று மாணிக்கவாசகர் இங்கு குறிப்பிடுகிறார்.
சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலுக்கு, 1977-ம் ஆண்டு காஞ்சி பெரியவர் விஜயம் செய்தபோது, இக்கோவில், விக்கிரகம் பற்றிய சிறப்புகளை எடுத்துக் கூறி அருளாசி வழங்கினார். பள்ளி கொண்டிருக்கும் பரமேஸ்வரின் திருவுருவம் அபூர்வம் என்றும், தாம் கண்ட கண்கொள்ளாக் காட்சியை அனைவரும் கண்டு தரிசிக்க வேண்டும் என்றும் அனுக்கிரகம் செய்தார். சுருட்டப்பள்ளி கோவிலில் பதினைந்து நாட்கள் தங்கியிருந்தளி, இறைவனை தியானித்து தவம் இருந்தார். பள்ளி கொண்டீஸ்வர பெருமானை தரிசித்த சுவாமிகள் அப்போதே சுலோகம் ஒன்றை இயற்றி அர்ப்பணம் செய்தார்.
தேவ்யூரு ஸயனம் தேவம்
ஸ்ரீபாணம் ஸ்வார்ந்த விக்ரஹம்
ப்ருக்வாதி வந்திதம் தேவம்
லோகஷேமார்த்த மாஸ்ரயே
அதன் பொருள் வருமாறு: “விஷத்தை உண்ட களைப்பில் அம்பாளின் மடியில் ஈஸ்வரன் பள்ளி கொண்டிருக்கிறார். உலக நன்மைக்காக விஷம் உண்ட சிவனை காண தேவரும், பிருகு முதலிய ரிஷிகளும் வந்திருக்கிறார்கள். சயனத்தில் உள்ள ஈசுவரனை வணங்கி பயன் பெறுவோம்”.
கடமையை செய் ! பலனை எதிர்பாராதே ! என்பதற்கு முதல் உதாரணம் நம்முடைய சிவன். உலகை காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு சுயநலமின்றி, இறைவன் சற்றும் யோசிக்காமல் ஆலகால விஷத்தை உண்டார்.
இறைவன் அவதாரங்களாக எத்தனையோ மகான்கள், சத்குருக்கள் அவதரித்து தன்னை நம்பியவர்களுக்காக, எந்த சுயநலமும் இன்றி, அவர்களுடைய வினைகளை தாங்கள் வாங்கிக் கொள்கிறார்கள். இத்தகைய மகான்களுக்கு, அவர்களுடைய கடைசி காலத்தில் உடல்நிலை சரியில்லாமல் சென்றால், நம்மில் பலர் அவர் மகான் என்றால் அவருடைய உடல்நிலையை ஏன் அவரால் குணப்படுத்த இயலவில்லை என்று கேட்கிறார்கள். அவ்வாறு அவர்கள் தங்களை குணப்படுத்திக் கொள்ள அவர்களுக்கு கண்ணிமைக்கும் நேரம் ஆகாது. ஆனால் அவர்கள் வாங்கிக்கொண்ட கர்மவினைகளை அவர்கள் அனுபவித்துதான் ஆகவேண்டும் ஆகவேண்டும். எனவே தங்களுடைய கடைசி காலத்தில் அவற்றை அனுபவித்து விட்டு தங்களுடைய உடலை விட்டு அவர்கள் நீங்குகிறார்கள். அதேபோல் வீட்டில் பெரியவர்கள் யாரேனும் தங்களுடைய கடைசி காலத்தில் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களுடைய வினைகளை இறைவன் இந்தப் பிறவியிலேயே கழித்த பிறகு இந்த உடலை விட்டு அவர்கள் ஆன்மாவை நீங்குமாறு செய்கிறான். அவ்வாறு உடல் நிலை சரியில்லாத அந்தப் பெரியவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்பவர்களான மகன், மருமகள் அல்லது மற்றவர்கள் இவர்களுக்கு உதவுவதன் மூலம், தங்களுடைய கர்மவினைகளைத்தயும் கழித்து விடுகிறார்கள். இது புரியாமல் இன்றைக்கு நிறைய பேர் தங்களுடைய கடமைகளை தட்டிக் கழிப்பதன் மூலம் மேலும் வினைகளை சேர்த்துக் கொள்கிறார்கள். ஒருவருக்கு ஒரு உதவி செய்வதன் மூலம் கண்டிப்பாக நம்முடைய கர்மவினைகள் கழிக்கப்படுகிறது. நாம் ஒரு பொருளை மற்றவர்களிடம் இருந்து இலவசமாக பெரும் பொழுதும் அல்லது நாம் மற்றவர்களுக்கு உதவியாக கொடுக்கும் பொழுதும் இதுபோன்ற கர்மவினை பரிமாற்றங்கள் ஏற்படுகின்றன. நடராஜர் பத்து, எட்டாம் பாடலில், “தாயாருடன் பிறவிக்கென்ன வினை செய்தனோ” என்கிற வரி வரும். இந்த வரியின் பொருள் என்னவென்றால், நாம் ஒருவருக்கு குழந்தையாக பிறக்கின்றோம் என்றால் அவர்களுடைய வினைகளை தீர்ப்பதற்காகவே அவர்களுக்கு குழந்தையாக பிறக்கிறோம் என்று பொருள். எனவே ஒரு பெற்றோருக்கு ஒரு குழந்தை நல்லவனாக, கெட்டவனாக, அறிவு உள்ளவனாக, நோய் உள்ள குழந்தையாக பிறப்பது அனைத்தும் அவர்களுடைய வினைகளை தீர்ப்பதற்காக என்பதை உணரும் பொழுது, மன வேதனை குறையும். மற்றும் அந்த உணர்தலினால், இந்தப் பிறவியில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் இறைவனுக்கு சமர்ப்பித்து மனசாட்சியுடன், விழிப்புணர்வுடனும் செய்வோம். எனவே எந்த ஒரு பொருளையும் இலவசமாக பெறும் முன் நாம் கண்டிப்பாக யோசிக்க வேண்டும் ஏனெனில் மற்றவர் வினைகளை நாம் வாங்கிக் கொள்ள நேரிடும். அதுபோல் நாம் எந்த ஒரு தானம் செய்யும் பொழுதும், நாம் தானம் செய்வது நம்முடைய பொருட்களை மட்டுமல்ல, பணத்தை மட்டுமல்ல, நம்முடைய கர்ம வினைகளையும் நாம் தானம் செய்கிறோம். நம்முடைய தமிழ்நாட்டில் பல்வேறு பழைய கோவில்கள் மிகவும் சிதிலமடைந்து இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் அத்தகைய கோவில்களுக்கு உதவி செய்வதன் மூலம் நம்முடைய கர்மவினை கழிகிறது. எனவே பழைய கோவில்களை புதுப்பிக்கும் செயல்களுக்கு, இறைவனை ஆத்மார்த்தமாக நினைத்து, நாம் முந்தைய பிறவிகளில் தெரிந்தும் தெரியாமலும் செய்த அனைத்து வினைகளுக்கும், ஆத்மார்த்தமாக மனமுருகி, மன்னிப்பு கேட்டு, இறைவனை அந்த வினைகளை தீர்க்குமாறு வேண்டிக்கொண்டு கோவிலை புதுப்பிக்கும் காரியங்களுக்கு உதவி செய்வோம். நடராஜர் பத்தில், எட்டாம் பாட்டில், பல்வேறு வினைகளைப் பற்றி மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லுங்கள் அது மிகவும் நல்லது என்று பலர் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். விஷ்ணு சகஸ்ர நாமத்தின் கடைசி 4 வரிகளின், தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
உடலாலே மற்றும் மனதாலே செய்யும்
புத்தியின் இயல்பாய், பூமியில் கருமம்
தினம் நடக்கும் செயல்கள் எல்லாம்
நாராயணன் பாதம் சமர்ப்பிக்கிறேன்!
மேலே சொல்லப்பட்டது போல் தினமும் சாப்பிடும் பொழுதும் மற்ற செயல்களை செய்யும் பொழுதும் இறைவனை நினைத்து சிவார்ப்பணம் என்று மனதிற்குள் சொல்லி செய்யும் பொழுது நம்மை வினைகள் அண்டாது. அவ்வாறு சிவனை நினைத்து செய்யும் பழக்கம் நமக்கு வரும்பொழுது, நம்மால் மனசாட்சிக்கு விரோதமாக எந்தச செயலையும் செய்ய இயலாது. இந்த உலகில் அனைத்தும் சுழற்சியே ! நன்மை தீமை எது செய்தாலும் அவைகள் திரும்பவும் நம்மை வந்து சேரும். நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் இறைவனை நினைத்து செய்யும் பொழுது நன்மை தீமை இரு வினைகளும் நம்மை சேராது! நம்முடைய பிறவி சுழற்சிக்கு ஒரு முடிவு கிடைக்கும்! மிக எளிய வழியில் ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் *சுயநலமின்றி நம்முடைய கடமைகளை நாம் இறைவனை நினைத்து செய்யும் பொழுது, நமக்கு நல்வினை தீவினை இரண்டும் அழிக்கப்படுகிறது. இதையே இருவினை ஒப்பு என்று சைவசித்தாந்தத்தில் சொல்வார்கள். இதுவே பிறவா நிலைக்கு உதவும்.
படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை 13
படைப்போற் - பூமியில் படைத்தலை செய்யக்கூடிய உயிரிகளுக்கு,
படை - ஆதார உயிரி, பழையோன் - தொன்மையானவன், படைத்தவை - உருவாக்குதல்
பூமியில் படைத்தலை செய்யக்கூடிய உயிரிகளுக்கு வேண்டிய ஆதார உயிரியை (கரு முட்டை, விந்து) உருவாக்கியவன், மிகவும் தொன்மையான இறைவன் என்று மேற்கண்ட வரி மூலம் மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்
காப்போற் காக்குங் கடவுள் காப்பவை 14
காப்போற் - பெண்கள், கா - receptacle (one that receives and contains something : CONTAINER), கடவுள் - உள்ளே நுழைத்து, காப்பவை - பாதுகாத்தல்
பெண்களின் கருப்பையின் உள்ளே நுழைத்து பாதுகாத்தல் என்கிற பொருளில் மேற்கண்ட வரி வருகிறது. அதாவது ஆன்மாக்கள் மீண்டும் பூமியில் உடலெடுத்து பிறக்கும் பொழுது பாதுகாப்பாக கருப்பையின் உள்ளே நுழைத்து பாதுகாக்கிறான் என்கிற பொருளில் மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.
கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்கிற ஒரு தேவையற்ற விவாதத்தை நாம் பலமுறை, பல பேர் செய்ய கேட்டிருப்போம். இறைவன் மற்றும் இறைவனின் சக்தி எல்லையற்றது, அது ஆகாயத்தைப் போல் பரந்து விரிந்து கொண்டே இருக்கிறது. இறைவன் இந்த அண்டத்திற்கு நன்மை என்றால், இறைவனால் முதலில் முட்டையையும் கொண்டு வர முடியும் இல்லையெனில் கோழியும் முதலில் கொண்டுவர முடியும். இன்றைய தொழில்நுட்பத்தில் வரக்கூடிய புதுவிதமான அத்தனை கைத்தொலைபேசிகளின் தொழில்நுட்பத்தை பற்றி வியந்து பார்க்கிறோம், பேசுகிறோம். புதிதாக ஏதேனும் ரோபோட் உருவாகி, அந்த ரோபோ செய்யும் அனைத்து செயல்களையும் பற்றி வியந்து, ஆச்சரியப்பட்டுப் போகிறோம். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களையும் எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்வோம். ஒரு மீனை எடுத்துக் கொண்டால், அது தண்ணீரில் வாழ்வதற்கு ஏற்ப உடலமைப்பு அதனுடைய உள் உறுப்புக்கள் அமைந்திருக்கின்றன. அதுபோல் பறவைகளுக்கு விலங்குகளுக்கு செடி கொடிகளுக்கு மரங்களுக்கு மனிதர்களுக்கு என ஒவ்வொரு உயிருக்கும் மிக அழகாக அந்த உயிர்களுக்கு தேவையான உடல் அமைப்பையும் அதன் உள்ளுறுப்புகளையும் படைத்தவன் அதாவது வடிவமைத்தவன் இறைவன். ஒவ்வொரு உயிர்களுக்கும் இயற்கை விதியான கர்ம விதிகளை உருவாக்கி அதன் அடிப்படையில் அனைத்தையும் இயக்கிக் கொண்டு இருப்பவன் இறைவன். உயிர்கள் உடலெடுத்து உருவாகும் பொழுது அவற்றை பாதுகாப்பதற்கு என்று கருப்பை, பிறந்தபிறகு பாதுகாப்பதற்கான அம்மா அப்பா என அனைத்தையும் மிக அழகாக உருவாக்கியவன் இறைவன். “கடமையை செய், பலனை எதிர்பாராதே” என்கிற வாழ்க்கை தத்துவத்தை நம் உடலைக் கொண்டு இறைவன் உணர்த்துகிறார். நாம் என்ன சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்து சாப்பிடும் வரை மட்டும்தான் நம் கையில் இருக்கிறது. நாம் சாப்பிட்ட சாப்பாடு வயிற்றுக்குள் சென்ற பிறகு, எப்படி ஜீரணமாகிறது? எவையெல்லாம், நம் உடலுக்கு சக்தியாக செல்கிறது? எவையெல்லாம் வீணாக போகிறது? என்பதை அனைத்தும் நம்மால் முடிவு செய்யப்படுபவை அல்ல. நாம் சாப்பிடும் சாப்பாடு நமக்கு ஒவ்வாமையாக போகலாம், நாம் சாப்பிடும் சாப்பாட்டின் சக்தி நம் உடலுக்கு சென்று சேராமலே போகலாம், இப்படி ஒவ்வொரு உயிருக்கும் உடலுக்கும் ஏற்ப பல விஷயங்கள் மாறுபடுகிறது. ஒருமுறை மகான் ராகவேந்திரருக்கு, ஒரு நவாப் தனக்கு பிடிக்கும் என்று மாட்டுக்கறியை, ஒரு தட்டில் மூடி எடுத்துக்கொண்டு சென்று கொடுப்பான். மகான் ராகவேந்திரர் ஒரு புன்சிரிப்புடன் அதை திறக்கும் பொழுது அவை அனைத்தும் மிக அழகான பூக்கள் ஆக மாறியிருக்கும் . ஒவ்வொரு மனிதனும் பிறந்த பிறகு வளர்ந்து கல்வி கற்று அந்த கல்வியில் அல்லது வேலையில் மேன்மை பெற சில வருடங்கள் அல்லது பல வருடங்கள் கற்ற பின்பு தான், அதாவது பல வருட அனுபவங்கள் கிடைத்த பின்பு தான் செய்யும் தொழிலில் தேர்ச்சி பெறுகிறான். ஆனால் இறைவன் கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்து அண்டங்களையும் உருவாக்கி, அனைத்து உயிரினங்களையும் உருவாக்கி, அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ்வதற்கான அனைத்து வளங்களையும் கொடுத்த இறைவனின் வடிவமைப்பு திறனை (Design skills) ஆக்கத்திறனை (Creative skills) நாம் என்றேனும் எண்ணிப் பார்த்து இருக்கிறோமா? நாம் அதனை எண்ணிப் பார்ப்பது இல்லை ஏனெனில் நாம் இறைவனின் அளப்பரிய தன்மையை நாம் உணரவில்லை. திருவாசகம் எழுதிய மாணிக்கவாசகர் நடராஜர் பத்து எழுதிய சிறுமணவூர் முனுசாமி போன்றவர்கள் உணர்ந்து இருப்பதினால் அவர்களால் அதனை தங்களால் முடிந்த அளவு , வரும் தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டியாக இந்த பாடல்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள். ஒரு விஷயம் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது அதாவது வாழ்க்கை என்பது அறிவியல் அல்ல அது ஒரு அனுபவம். திருவாசகம், நடராஜர் பத்து போன்றவை அனைத்துமே ஒரு அனுபவப் பகிர்வாகத்தான் இருக்கிறது. நம்மை உணர்வதற்கு நம் ஆன்மாவில் உள்ள இறைவனை உணர்வதற்கு சாஸ்திரங்கள் மிக எளிய வழியை நமக்கு கொடுத்திருக்கின்றன. சாய் சத்சரிதம் ஒன்பதாம் அத்தியாயத்தில் இதுபற்றி சொல்லப்பட்டிருக்கும். அதனுடைய ஸ்கிரீன்ஷாட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நாம் தினமும் சாப்பிடும் பொழுது இறைவனுக்கு சமர்ப்பித்தல், நம்முடைய பித்ருக்களுக்கு சமர்ப்பித்தல், தேவதைகளான குலதெய்வத்திற்கு சமர்ப்பித்தல், ஜந்துக்களுக்கும் மிருகங்களுக்கும் சமர்ப்பித்தல், மற்றும் மனிதர்களான அதாவது அழைக்கப்படாத விருந்தாளிகளுக்கு கொடுத்தல் என ஐந்து வகையான தர்மங்கள் இருக்கின்றது. இந்த தர்மங்கள் எதற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் இவற்றை செய்வதன்மூலம், இறைவனை உணர்தல், பிற உயிர்களை மதித்தல், பித்ருக்களுக்கு செய்வதன்மூலம் ஆன்மாக்கள் என்று ஒன்று இருக்கின்றன அவைகள் கஷ்டப்பட நேரிடலாம் என்பதை உணர்தல் என்பதை உணரும் வகையில் இந்த ஐந்து தர்மங்கள் மனிதர்களுக்கு சொல்லப்பட்டிருக்கின்றன. அறிவியல் என்பது புரிதலின் அடிப்படையில் இருக்கிறது நமக்கு புரிய புரிய மேற்கொண்டு பல்வேறு விதமான கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். ஆனால் ஒரு விஷயத்தை நாம் உணர்ந்தோம் என்றால் அங்கு கிடைக்கக்கூடியது ஒரு மனநிறைவு. அந்த மனநிறைவு கிடைக்காத வரையில் நமக்குள் பல்வேறு விதமான கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும் அந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்வதற்காக நாம் ஓடிக்கொண்டே இருப்போம். நாம் இன்றைய வாழ்க்கையில் பலவற்றை தேடி ஓடிக்கொண்டே இருப்பது, மன நிறைவு இல்லாமல் இருப்பதினால் தான். மனநிறைவு பெற்றவர்கள் தங்களுக்கு இருப்பதை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் ஒரு நிறைவை பெற்றிருப்பார்கள். இறைவனை உணர்வதன் மூலம் நமக்கு கிடைப்பது அந்த ஒரு மன நிறைவு. நாம் செய்யும் பாராயணங்கள் நமக்கு அந்த இறைவனை உணர்வதற்கு அருள் புரியட்டும் என்கிற பிரார்த்தனையுடன் இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன்.
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

Comments
Post a Comment