விருந்தின னாகி வெண்காடதனில் குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும் பட்ட மங்கையில் பாங்காய் இருந்து அங்கு அட்ட மாசித்தி அருளிய அதுவும் வேடுவன் ஆகி வேண்டு உருக் கொண்டு காடது தன்னில் கரந்த கள்ளமும் விருந்தம் - பூவின் காம்பு , அணண் - கடவுள் , இறைவன் , வெண்காடு - முருந்தம் , வெண்மை , குருந்து - வெண்குருத்து , ஒருவகை மரம் கீழன்றிருந்த - கீழ் + அன்றி + இருந்த , அன்றி - அதுமட்டுமல்லாது கொள்கையும் - நிகழ்ச்சி பட்ட மங்கை - பட்டமங்கலம் என்னும் திருத்தலம் , பாங்காய் - மரியாதை உள்ளவன் , குருவாய் , அட்டமாசித்தி - எட்டுவிதசித்தி , அது - ஒரு வாக்கியத்திலோ பத்தியிலோ ஏற்கனவே குறிப்பிடப்பட்ட பெயரைத் திரும்பக் குறிப்பிடுவதற்கும் பயன் படுத்தும் பிரதிபெயர் ( நிகழ்ச்சியும் ) வேடுவன் - பரன் , கடவுள் , இறைவன் , ஆகி - குறிப்பிட்டவற்றைத் தவிர வேறு இல்லை என்பதைக் காட்டி அவற்றை வாக்கியத்துடன் தொடர்பு படுத்தும் இடைச்சொல் , காடது - அளவில்லா தன்மை , கரந்த - ஒளி , கள்ளமும் - மறைந்த பூவின் காம்பு ஆ...