விருந்தின னாகி வெண்காடதனில்
குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும்
பட்ட மங்கையில் பாங்காய் இருந்து அங்கு
அட்ட மாசித்தி அருளிய அதுவும்
வேடுவன் ஆகி வேண்டு உருக் கொண்டு
காடது தன்னில் கரந்த கள்ளமும்
விருந்தம் - பூவின் காம்பு, அணண்- கடவுள், இறைவன், வெண்காடு - முருந்தம், வெண்மை, குருந்து - வெண்குருத்து, ஒருவகை மரம்
கீழன்றிருந்த - கீழ் + அன்றி + இருந்த , அன்றி - அதுமட்டுமல்லாது
கொள்கையும் - நிகழ்ச்சி
பட்ட மங்கை - பட்டமங்கலம் என்னும் திருத்தலம், பாங்காய்- மரியாதை உள்ளவன், குருவாய், அட்டமாசித்தி - எட்டுவிதசித்தி,
அது - ஒரு வாக்கியத்திலோ பத்தியிலோ ஏற்கனவே குறிப்பிடப்பட்ட பெயரைத் திரும்பக் குறிப்பிடுவதற்கும் பயன் படுத்தும் பிரதிபெயர் ( நிகழ்ச்சியும்)
வேடுவன் - பரன், கடவுள், இறைவன், ஆகி - குறிப்பிட்டவற்றைத் தவிர வேறு இல்லை என்பதைக் காட்டி அவற்றை வாக்கியத்துடன் தொடர்பு படுத்தும் இடைச்சொல், காடது - அளவில்லா தன்மை, கரந்த - ஒளி, கள்ளமும் - மறைந்த
பூவின் காம்பு ஆகி மரத்தின் கீழ் இருந்தது மட்டுமன்றி, பட்டமங்கலம் என்னும் திருத்தலத்தில் குருவாய் இருந்து எட்டுவித சித்திகளையும் சொல்லிக்கொடுத்த நிகழ்ச்சியும், கடவுளாக இருந்து வேண்டிய உருவம் எடுத்து, அளவற்ற தன்மையில் ஒளியாய் மறைந்ததும்
குறிப்பு: பாரிசாதப் பூவின் தாரின் (காம்புப் பகுதி) படிமம் திருப்பூவணத்தில் (சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம்) சிவலிங்கமாக உள்ளது. இது 1728 கோடி வருடங்களுக்கு முன்பு பூமிக்குள்ளே புதைந்து படிமமாக உள்ளது.
Source: https://ta.wiktionary.org/wiki/பாரிசாதம்
மெய்க்காட் டிட்டு வேண்டுருக் கொண்டு
தக்கா னொருவ னாகிய தன்மையும்
ஓரி யூரின் உகந்தினி தருளிப்
பாரிரும் பாலக னாகிய பரிசும்
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் 70
மெய் - உடல், முழு உருவம், இட்டு - குழந்தை, வேண் - வேடம்,
தக்கார்- பெருமையிற் சிறந்தோர்,மேன்மையுடையவனாக, உறவினர், ஒருவன் - ஒப்பற்றவன்
ஓரி -கிழநரி, (முதியவன் உருவில் தந்திரமாக வந்து), ஊர் - ஒருவருக்கு உதவும் விதமாக செய்யும் செயல் அல்லது அவர்களின் மன்னிப்பை கோரும் விதமாக செய்யும் செயல் (act in an obsequious way in order to obtain someone's forgiveness or favour,) உகந்த - சூழ்நிலைக்கு ஏற்ற வகையில்,
பார் - உலகம், உலக பந்தம் ஈரும் - அறுக்கும், பரிசு - சன்மானம், வெகுமதி கொடுத்தல்
பாண்டூர் - பாண்டூர் என்னும் திருத்தலம், ஈண்ட - அழித்து
குழந்தை உருவமாக வேடம் எடுத்து, மேன்மை உடையவனாக, ஒப்பற்ற வனாக, முதியவன் உருவில் தந்திரமாக வந்து, சூழ்நிலைக்கு ஏற்ப தன் அடியவருக்கு ( கௌரி என்கிற சிவபக்தை) உதவி செய்யும் விதமாக, குழந்தையாகி, அவளுடைய உலக பந்தத்தை அறுத்து முக்தி என்னும் சன்மானத்தை கொடுத்தது. பாண்டூர் என்னும் திருத்தலத்தில் பாண்டவர்களின் பாண்டு ரோகத்தை அழித்தது.
Comments
Post a Comment