நாரைக்கு முக்தி கொடுத்த படலம் தகவல்கள் இந்த தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த இணைய தளத்திற்கு மிகவும் நன்றி! நாரைக்கு முக்தி கொடுத்த படலம் இறைவனான சொக்கநாதர் தன்னிடம் அன்பு செலுத்தி மீனினை உண்ணாமல் இருந்த நாரைக்கு முக்தி கொடுத்ததை பற்றிக் கூறுகிறது. மதுரையின் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் இல்லாமல் போனதற்கான காரணம் பற்றி இப்படலம் எடுத்து உரைக்கிறது. நாரைக்கு ஏற்பட்ட மனமாற்றம், சொக்கநாதரை நாரை வழிபடுதல், இறைவனார் நாரைக்கு கொடுத்த வரம், பொற்றாமரை குளத்தில் மீன்கள் இல்லாமல் போனது ஆகியவற்றை இப்படலம் விளக்குகிறது. நாரைக்கு முக்தி கொடுத்த படலம் திருவிளையாடல் புராண த்தின் கூடல் காண்டத்தில் நாற்பத்தி எட்டாவது படலமாக அமைந்துள்ளது. நாரையின் மனமாற்றம் பாண்டிய நாட்டில் வைகை ஆற்றிற்கு தெற்கே அழகிய தாமரை மலர்களைக் கொண்ட தடாகம் (குளம்) ஒன்று இருந்தது. அக்குளத்தில் இருந்த மீன்களை பிடித்து உண்டு நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு சமயம் மழை இல்லாமல் போனதால் தடாகத்தில் இருந்த தண்ணீர் வற்றி விட்டது. எனவே அத்தடாகத்தில் மீன்கள் இல்லாமல் போனது. இதனால்...