திருப்பனையூரில் விருப்பன் ஆகியும் ( (87 வது வரி ) திருப்பனையூர் என்பது ஒரு திருத்தலம் , விருப்பன் = விருப்பு + அன் , விருப்பு - அன்பு , அன் - என்பது அன்பால் , நட்பால் ஏற்படும் உறவுகளின் பெயரோடு சேர்த்து வருவது . அதாவது கணவன் , நண்பன் போன்ற சொற்கள் எடுத்துக்காட்டாக அமைகின்றன . திருப்பனையூர் தலத்திற்கு அருகே சுந்தரர் வரும்பொழுது அங்கே சிவன் , சுந்தரர் கேட்காமலேயே , தானே அன்புடன் காட்சி கொடுத்து கூத்தாடிய நிகழ்ச்சியை மாணிக்கவாசகர் இங்கே குறிப்பிடுகிறார் . கீர்த்தித் திருவகவலின் லின 85, 86, 87 வரிகள் இறைவன் சுந்தரருக்கு அருளிய செய்த நிகழ்ச்சிகளை குறிப்பிடுகிறது . இந்த நிகழ்ச்சிகளை கொண்டு , இந்த வரிகளை கொண்டு மாணிக்கவாசகர் கொண்ட சுந்தரர் வாழ்ந்த காலத்திற்கு பின் வாழ்ந்தவர் என்பதை சான்றாக கொள்ளலாம் . சுந்தரர் 63 நாயன்மார்களுடன் மாணிக்கவாசகரை சேர்க்கவில்லை ஏனெனில் மாணிக்கவாசகர் , சுந்தரர் வாழ்ந்த காலத்திற்கு பின் வாழ்ந்தவர் . கழுமலம் அத...