ஓம் நமசிவாயா , திருச்சிற்றம்பலம் . * சிவபுராண விளக்கம் * வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி , மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய , வல்வினையேன் - எண்ணற்ற வினைகளை உடையவன் , தன்னை - இறைவன் , மறைந்திட - ஒளிந்திருக்க , மூடிய - காரணமான , மாய இருள் - மாயப்பிறப்பு அறம் - செயல் , பாவம் - எண்ணங்கள் , என்னும் - சகலரும் , அரும் - கடுமையான , கடினமான , கயிறு - நங்கூர கம்பி வடம் , கட்டி - பிணைத்து , புறம்தோல் - வெளியே தெரியாவண்ணம் , வெளியே தோல் கொண்டு , போர்த்து - மறைத்து அடக்கிக்கொள்ளுதல் , புழு - கிருமி , அழுக்கு - மாசு , மலம் - ஆணவம் , போன்ற மும்மலம் , சோர் - வஞ்சனை , தந்திரம் , ஏமாற்றுதல் , குடில் - குடிசை , வீடு ( இங்கு நம் உயிர் ஆன்மா குடி கொண்டிருக்கும் உடலை குறிக்கிறது ), மலங்கப் - குழப்பம் , புலன் ஐந்தும் - நம் ஐந்து புலன்கள...