Skip to main content

கீர்த்தி திருஅகவல் விளக்கம் - (வரிகள் 87- முடிவு வரை)


திருப்பனையூரில் விருப்பன் ஆகியும் ( (87வது வரி)

திருப்பனையூர் என்பது ஒரு திருத்தலம்,  விருப்பன் = விருப்பு + அன்,  விருப்பு - அன்பு,  அன் - என்பது அன்பால் , நட்பால் ஏற்படும் உறவுகளின் பெயரோடு சேர்த்து வருவது . அதாவது கணவன், நண்பன் போன்ற சொற்கள் எடுத்துக்காட்டாக அமைகின்றன. 

திருப்பனையூர் தலத்திற்கு  அருகே சுந்தரர் வரும்பொழுது அங்கே சிவன், சுந்தரர் கேட்காமலேயே , தானே அன்புடன் காட்சி கொடுத்து கூத்தாடிய நிகழ்ச்சியை மாணிக்கவாசகர் இங்கே குறிப்பிடுகிறார். 

கீர்த்தித் திருவகவலின் லின 85, 86, 87 வரிகள் இறைவன் சுந்தரருக்கு அருளிய செய்த நிகழ்ச்சிகளை குறிப்பிடுகிறது.  இந்த நிகழ்ச்சிகளை கொண்டு, இந்த வரிகளை கொண்டு மாணிக்கவாசகர் கொண்ட சுந்தரர் வாழ்ந்த காலத்திற்கு பின் வாழ்ந்தவர் என்பதை சான்றாக கொள்ளலாம்.  சுந்தரர் 63 நாயன்மார்களுடன்  மாணிக்கவாசகரை சேர்க்கவில்லை ஏனெனில் மாணிக்கவாசகர், சுந்தரர் வாழ்ந்த காலத்திற்கு பின் வாழ்ந்தவர். 

கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும்   (88 வது வரி)

கழு என்றால் கழுகு, மலம் என்றால் மலை என்கிற ஒரு பொருளும் உண்டு.  கழுகுமலை என்பது திருக்கழுக்குன்றம் திருத்தலத்தை குறிக்கிறது. மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவடிவாய்க் இந்த தளத்தில் காட்சி கொடுத்து அருளினார். இதையே மாணிக்கவாசகர் மேற்கண்ட வரிகளில் குறிப்பிடுகிறார். திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் தல வரலாறு கீழ்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும்  (89 வது வரி)

கழு என்றால் கழுகு, குன்று என்றால்  மலை,  வழுக்காது = வழுக்கா + து,  வழுக்கா என்றால் தவறாமல், து என்றால் உணவு 

கழுக்குன்று என்பது திருக்கழுக்குன்றம் திருத்தலத்தை குறிக்கிறது. இங்கு கழுகுக்கு தவறாது உணவளித்த நிகழ்ச்சியை இங்கு மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். இந்த வரியிலிருந்து அவருடைய காலத்தில் இருந்தே, திருக்கழுக்குன்றத்தில் கழுகுக்கு உணவு அளிக்கப்பட்டு வந்துள்ளது தெரிகிறது. தற்பொழுதுதான் கழுகுகள் வந்து சாப்பிடுவதில்லை ஏனெனில் அவைகள் முக்தி அடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது.  திருக்கழுக்குன்றம்யுகம் யுகமாய் வரும் இரண்டு வெள்ளை கழுகுகள் வரலாறு கீழ்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


கழுகுகளை பற்றி 1923ம் ஆண்டு கால பழைய நூலக பிடிஎப் ஒன்று மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

புறம்  பயமதனில் அறம்பல அருளியும்  (90 வது வரி)

புறம் - உடல், பிறப்பு, பய - கொடுத்து, அறம் - நற்பேறு, அகமகிழ்ச்சி

உடலையும், பிறப்பினையும் கொடுத்து அதன்மூலம் நற்பேறு அடையும் வழியை கொடுத்த இறைவனே என்று மாணிக்கவாசகர் இறைவனை புகழ்ந்து குறிப்பிடுகிறார்.

குற்றாலத்துக் குறியாய் இருந்தும்  (91 வது வரி)

குற்றாலம் - கு + ஆலம்,  கு - உலகம், தன்மை   ஆலம் - பிரபஞ்சம், குறி - அடையாளமாய்

இறைவன் உலகம் மற்றும் பிரபஞ்சத்தின் தன்மையாய் அடையாளமாய் இருக்கிறான் என்று மாணிக்கவாசகர் மிக அழகாக இந்த வரிகளில் குறிப்பிடுகிறார்.

அந்தமில் பெருமை அழல் உருக் கரந்து
சுந்தர வேடத்து ஒருமுதல் உருவுகொண்டு
இந்திர ஞாலம் போலவந்து அருளி
எவ்வெவர் தன்மையும் தன்வயிற் படுத்துத் 95
தானே ஆகிய தயாபரன் எம் இறை

அந்தம் - அறியாமை, இல் - இறப்பு, பெருமை - ஆணவம், அழல் - எரித்து, உரு - உருவம், உடல் கரந்து - காலம் , சுந்தரம் - அழகாய், வேடம்- பாத்திரத்திற்கு ஏற்பச் செய்துகொள்ளும் ஒப்பனை, ஒரு -  ஒப்பற்ற,  முதல்- ஆதி, கடவுள், உருவுகொண்டு - உருவம் கொண்டு,
இந்திரஞாலம் - மாயவித்தை, அற்புதங்களைக் காட்டும் கண்கட்டு வித்தை
எவ் - அஃறிணை, எவர் - உயர்திணை ( மனிதர்கள், தேவர்கள், தெய்வங்கள் ஆகியோர் உயர்திணையின் பாற்படுவர் என்கிறது தமிழ் இலக்கணம்.ஏனைய உயிரிகளும் சடப்பொருள்களும் அஃறிணையின் பாற்படும்) தன்மை - தன்னை மையப்படுத்தும் இடம், 
தன்வயிற்  - தன்மயமாதல், வேறுபாடின்றி ஒன்றாதல், படுத்து - உண்டாக்குதல் (bring into existence), தயாபரன் - அருளுடையவன், கடவுள்,  இறை - உயர்ந்தோன், மூத்தோன்

அந்தமில் பெருமை அழல் உருக் கரந்து  (92 வது வரி)
அறியாமை, இறப்பு, ஆணவம், உருவம், காலம் இவற்றை எரித்து, அழித்து
சுந்தர வேடத்து ஒருமுதல் உருவுகொண்டு  (93 வது வரி)
ஒப்பற்ற கடவுள் தன்னுடைய பாத்திரத்திற்கு ஏற்ப அழகாய் ஒப்பனை செய்து உருவம் எடுத்து
இந்திர ஞாலம் போலவந்து அருளி  (94 வது வரி)
மாயவித்தை அற்புதங்கள் காட்டும் கண்கட்டு வித்தைகாரன் போல்
எவ்வெவர் தன்மையும் தன்வயிற் படுத்துத்  (95 வது வரி)
உயர்திணை,  அஃறிணை அனைத்துமே தன்னை (இறைவனை) மையப்படுத்தி தன்னிலிருந்து உண்டாகி
தானே ஆகிய தயாபரன் எம் இறை  (96 வது வரி)
உலகில் இருக்கும் அனைத்து பொருட்களுமே அவனே ஆகி, எல்லாவற்றுக்கும் உயர்ந்த நிலையில் இருப்பவன் இறைவன், கடவுள் என இங்கு மாணிக்கவாசகர் மிக மிக அழகாக இறைவனே அனைத்தும் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மாணிக்கவாசகருக்கு திருப்பெருந்துறையில் இறைவன் குருவாக வந்து அவருடைய அறியாமை ,ஆணவம் எல்லாவற்றையும் அழித்து மாணிக்கவாசகரை ஆட்கொண்டு, இறைவனே அனைத்தும் என்று அவருக்கு காண்பித்ததை இங்கு நமக்கு கீர்த்தி திருஅகவல் வழியாக  மேற்கண்ட வரிகள் மூலம் சொல்கிறார். உலகில் உள்ள அனைத்து உயிர்களும், பொருட்களும் இறைவனிடமிருந்து, இறைவனின் அம்சமாக வந்தவை என மாணிக்கவாசகர் திரும்பத்திரும்ப வலியுறுத்துகிறார்.

சந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி (97 வது வரி)

சந்திரன் என்றால் வெண்ணிலவு குளுமை என்று பொருள். தீபம் என்றால் ஒளி அக்னி என்று பொருள். சாத்திரம் என்றால் வேதங்கள் என்ற பொருள். சாத்திரன் என்று வருவதால் அவனே வேதங்களாக இருக்கிறான் என்று பொருள்படும். சிவ புராணத்திலும் மாணிக்கவாசகர் இதனை ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க என்று சொல்லியிருப்பார். ஆகமம் என்றால் வேதங்கள் என்று பொருள்
அண்ணிப்பான் என்றால் பக்கத்திலிருப்பவன் என்று பொருள்நம்முடைய சிவன் 
வேதமாக இருப்பதினால் நம்மால் அடைய முடியாதோ என்று நினைத்திட 
வேண்டாம் என்றுதான் உடனே அண்ணிப்பான் தாள் வாழ்க என்று 
மாணிக்கவாசகர் பாடினார்அதாவது அவன் வேறு எங்கோ இல்லை நம் 
பக்கத்தில் தான் இருக்கிறான் என்று மாணிக்கவாசகர் மிக அழகாக நமக்கு 
சுட்டிக்காட்டியுள்ளார்.

இறைவனின் தன்மை, இயல்பு  இப்படித்தான் இருக்கும் என நம்மால் உருவகம் செய்ய முடியாது என்பதற்கு கீர்த்தித் திரு அகவலின் 97 ஆவது வரி ஓர் அற்புத உதாரணம்.  சிவன் சந்திரனைச் சூடி குளுமையாகவும் இருக்கிறான், தீயாகவும் இருக்கிறான், அவனே வேதங்கள் ஆகவும் இருக்கிறான்.  சிவன் அணிந்திருக்கும் விஷயங்களைக் கொண்டு சிவனின் தன்மை இப்படித்தான் இருக்கும் என்பதை நம்மால் அறுதியிட்டு சொல்ல இயலாது என்பதையே சந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி  என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.  சிவன் தன் தலையில் சந்திரனைச் சூடி இருக்கிறார், அதேசமயம் தனது கழுத்தில் விஷம் கக்கும் பாம்பையும் மாலையாக சூடி இருக்கிறார் . கங்கையையும் தன் தலையில்  கொண்டிருக்கிறார். அதேசமயம் அக்னியாகவும் இருக்கிறார். கீர்த்தித் திருவகவல் இன் 91 ஆவது வரியில் இருந்து 97 வது வரிகள் மூலம்  சிவன் உலகில் உள்ள அனைத்து பொருளுமாய், உலகில் உள்ள அனைத்து பொருட்களின் தன்மையுமாய் இருக்கிறான் என்று அழகாக குறிப்பிட்டுள்ளார்.

அந்தரத் திழிந்துவந் தழகமர் பாலையுள் 98 வது வரி

அந்தரத்து  - வானம்,  இழி - கீழே, துவந்தம் - இரட்டை, அழ - அழல், தீ கமர் - வெடிப்பு, நிலபிளப்பு, பாலை - அக்னி

சிவன் அடிமுடி காட்டாமல் அக்னியாய் இருந்த தன்மையை இந்த வரி மூலம் மாணிக்கவாசகர் மிக அழகாக சொல்கிறார். அந்தரத்தில் அதாவது அளவில்லாத, அளவு சொல்ல முடியாதபடி மேலேயும், கீழே பூமியை பிளந்தும், அந்த இரண்டு இடத்திற்கும் இடைப்பட்ட நடுவிலும்  அக்னியாய் இறைவன் நின்றான் என்று அந்தரத் திழிந்துவந் தழகமர் பாலையுள்  வரிகள் மூலம் மாணிக்கவாசகர் சொல்கிறார். 

சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்தருளியும் 99 வது வரி

சுந்தர  - உயர்ந்த,  தன்மை -  அதாவது தன்னை மையப்படுத்தும் இடம் தன்மை எனப்படும் , மெய்ம்மை,  துதைந்து - எங்கும் நிறைந்து இருத்தல், அருள் - சிவசக்தியாய்

எல்லாவற்றையும் விட உயர்ந்தவனாய்,  எங்கும் நிறைந்திருப்பவனாய், மெய்ப் பொருளாய் , சிவசக்தியாய் இறைவன் இருக்கிறான் என்று சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்தருளியும் என்ற  வரி மூலம் மாணிக்கவாசகர் சொல்கிறார்.

மந்திர மாமலை மகேந்திர வெற்பன் 100 வது வரி

மந்திரம் - கோவில், இறைவன் தங்கும் இடம்,  மகேந்திர மாமலை -  கஞ்சம் ஜில்லாவில் சிவாலயத்தோடு  ஒரு மலை, வெற்பன் - தலைவன்

கஞ்சம் ஜில்லாவில் உள்ள மகேந்திர மாமலையில்  கோவில் கொண்டுள்ள தலைவனான சிவன்

அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல் 101 வது வரி
எம்தமை ஆண்ட பரிசு அது பகரின் 102 வது வரி

அந்தம் - அறியாமை, இல் - இறப்பு, பெருமை - ஆணவம்,  உடை - தகர்த்தல், உடைத்தல், அண்ணல் - கடவுள், தலைவன், தமை - புலன்களையடக்குதல், பகர் -  பிறர் தெளிவாய் உணருமாறு கூறுதல்

அறியாமை, இறப்பு, ஆணவம் ஆகியவற்றை தகர்த்தெறிந்து, புலன்களை அடக்கியது ஆண்டவன் தனக்கு தந்த வெகுமதி என மாணிக்கவாசகர் தெளிவாக, விளக்கமாக, நாம் உணரும் வண்ணம் கூறுகிறார்.

ஆற்றல் அதுவுடை அழகமர் திரு உரு 103 வது வரி

ஆற்றல் - வலிமை, உடை - தகர்த்தெறிதல், அழ - அழல், நெருப்பு, திரு - தெய்வத்தன்மை,  உரு - வடிவம்

பூமியையும்  பிளக்கக்கூடிய ஆற்றலுடைய, தெய்வத் தன்மை நிறைந்த அக்னியான வடிவமே என்று சிவனின் வலிமையை மாணிக்கவாசகர் ஆற்றல் அதுவுடை அழகமர் திரு உரு என்கிற வரி மூலம் புகழ்கிறார்.


நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும் 104 வது வரி

நீற்று -  பொடித்தும் , அழித்தும், கோடி - பல்வேறு விதமான உயிர்கள், நிமிர்ந்து - உயர்த்தியும்

பல்வேறுவிதமான உயிர்களை அழிப்பவனும், உயர்த்துபவனும் சிவனே  என்று 
நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும் என்கிற இந்த வரி மூலம் மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்

ஊனம் தன்னை ஒருங்குடன் அறுக்கும் 105 வது வரி

ஊனம் - உடல், ஒருங்குடன் - முழுவதுமாய், அழித்தல்,  அறுக்கும் - விடுவித்தல்

உடலை முழுவதுமாய் அழித்து  பிறவி  தளையில் இருந்து விடுவிப்பவன் சிவன் என்று ஊனம் தன்னை ஒருங்குடன் அறுக்கும் என்கிற இந்த வரி மூலம் மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். 

ஆனந் தம்மே ஆறா அருளியும் 106

ஆனந்தம் - இறப்பு, மே - விருப்பு ஆறா - மூழ்காது, அருளியும் - கருணை காட்டியும்
இறப்பு , விருப்பு போன்றவற்றில்  மூழ்கிவிடாமல் கருணை காட்டியும் (காப்பாற்றியும்)

மாதில் கூறுடை மாப்பெரும் கருணையன் 107 

மாதி - கோளின் சுற்று,  கூறு - தன்மை, அம்சம், உடை - தகர்த்தெறிதல், 
கருணையன் =  கருணை + அன் , அன் - என்பது அன்பால் நட்பால் ஏற்படும் உறவுகளின் பெயரோடு சேர்த்து வருவது அதாவது கணவன், நண்பன் போன்ற சொற்கள் எடுத்துக்காட்டாக அமைகின்றன. 

கோள்களின் மாற்றத்தினால் அதாவது நவ கிரகங்களின் தீய தன்மைகளை தகர்த்தெறிந்து காப்பாற்றும் மாபெரும் கருணையாளன் இறைவன் என்று மிக அழகாக மாணிக்கவாசகர் இந்த வரி மூலம் எடுத்துரைக்கிறார். பெரும் கருணை என்று உபயோகிக்காமல் மாபெரும் கருணை என்று மாணிக்கவாசகர் கூறுவதன் மூலம் இறைவன் மிகுந்த மிகுந்த கருணை உடையவன் என்று குறிப்பால் உணர்த்துகிறார் அதுமட்டுமன்றி கருணையன் என்று கூறியதன் மூலம், அதாவது 
 அன்என்று சேர்த்து சொல்வதன்  மூலம் இறைவனின் அன்பையும் நமக்கு தெளிவாக காட்டியுள்ளார்.

நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும் 108

நாதம் - சத்தம், பெரும்பறை - பெரிய தோற்கருவி,  நவிற்றுதல் - இசைத்தல்.  கறங்கல் - ஒலித்தல், சுழற்சி , 

உடுக்கை என்னும் தோலினால் ஆன இசைக்கருவியை இசைப்பவன் என்று 
நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும் என்கிற இந்த வரி மூலம் மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். 

அழுக்கடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன் 109

அழு - அழுது புலம்பி, கடையாமல் - வழி தெரியாமல், ஆண்டுகொண்டு - ஆட்கொள்ளுதல், அடியாராக ஏற்றுக்கொள்ளுதல், அருள்பவன் - கருணை காட்டுபவன்

தன்னை அடையும் வழி தெரியாமல் அழுது புலம்புபவர்களை, ஆட்கொண்டு கருணை காட்டுபவன் சிவன்  என்று அழுக்கடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன் என்கிற  வரி மூலம் மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். 

கழுக் கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும் 110
கழு - திரிசூலம் (திரிசூலம் என்பது சத்வம், ராஜசம், தாமசம் என்ற முக்குணங்களை உணர்த்துகிறது), கடை - மசித்தல், கைக்கொண்டு - பற்றிக்கொள்ளுதல், அருளியும் - கருணை காட்டியும்


சத்வம், ராஜசம், தாமசம் என்கிற முக்குணங்களையும் மசித்து தன்னை( சிவனை) பற்றிக் கொள்ளுமாறு கருணை காட்டியும் என்ற  கழுக் கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும் என்கிற வரி மூலம் மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். 

குறிப்பு : மாணிக்கவாசகர் பாட இறைவன் எழுதியது என்பதற்கு இந்த வரிகளில் ஒரு அற்புதமான, அழகான சான்று இருக்கிறது. கழுக் கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும் என்கிற இந்த வரியில் தன்னை என்பது சிவனைக் குறிக்கிறது. இறைவன் எழுதியதால் அந்த இடத்தில் பண்ணை என்கிற அந்த வார்த்தை வருகிறது. அதேபோல் கீழே கொடுக்கப்பட்டுள்ள கீர்த்தி திருஅகவலின்  26 மற்றும் 28 வது  வரிகளிலும், சிவன் என்று குறிப்பிடாது தானும் , தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

26 வது வரியான  கூறு உடை மங்கையும் தானும் வந்தருளிக் என்கிற வரிக்கு 
தன்னில் பாதியாக உள்ள புடவை கட்டிய மங்கையும், தானும் வந்து என்று பொருள். 
26 வது வரியான சதுர்படத் சாத்தாய்த் தான் எழுந்தருளியும் என்கிற வரிக்கு சூழ்ச்சி செய்து, பாடலாய் (திருவாசகமாய்) தான் எழுந்தருளி என்று பொருள். கீழே அந்த வரிகளும் அதற்குரிய பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. இறைவன் எழுதிய இந்த அரிய திருவாசகத்தை நாம் படிப்பதற்கும், அதன் மூலம் மறைபொருளாய் இருக்கும் இறைவனை உணர்ந்து கொள்வதற்கு கண்டிப்பாக நாம் ஏதோ ஒரு பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் . இந்த அற்புதமான திருவாசகத்தை கொடுத்த மாணிக்கவாசகரின் திருவடிகளையும் இறைவன் திருவடிகளையும் பணிந்து வணங்குவோம். ஓம் நமசிவாய

கூறு உடை மங்கையும் தானும் வந்தருளிக்  (26 வது வரி)
குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிசைச் 
சதுர்படத் சாத்தாய்த் தான் எழுந்தருளியும் 28 வது வரி

கூறு - பாதி, உடை - புடவை,மங்கை - பெண், குடநாடு - மேல் நாடு, மிசை - உயர்ந்த, உன்னத,  சதுர் - தந்திரம் சூழ்ச்சி உபாயம், சாத்தாய் - பாடல், கோலம் - தோற்றம்,பொலிவு - அழகிய கொள்கை - நிகழ்ச்சி

தன்னில் பாதியாக உள்ள புடவை கட்டிய மங்கையும், தானும் வந்து
மேல் நாட்டைச் சேர்ந்த உயர் குதிரையை கொண்டு 
சூழ்ச்சி செய்து, பாடலாய் (திருவாசகமாய்) தான் எழுந்தருளி


மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும் 111வது வரி

மூலம் - காரணமான, மும்மலம் - ஆணவம், கன்மம், மாயை, அறுக்கும் - நீக்கி,
மும் மலத்திற்கு காரணமானவற்றை நீக்கி,

தூய மேனிச் சுடர்விடு சோதி 112 வது வரி

தூய- சற்றும் மாசுபடாத, மேனி - உள் ஸ்வருபம், விடு - மறைவில் இருந்து விடுபட்டு
சோதி - ஒளிர்ந்து

சற்றும் மாசுபடாத உள்ளொளி, மறைவில் இருந்து வெளிப்பட்டு(விடுபட்டு) ஒளிர்ந்து, 

காதலன் ஆகிக் கழுநீர் மாலை 113
ஏலுடைத்தாக எழில்பெற அணிந்தும் 114
அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் 115

காதலன் - அன்புக்கு உரியவனாக ; கழுநீர்  கழு- தீய வினை  கழுவதற்கு காரணமான தீர்த்த நீர்;
மாலை - குற்றம், பாசம் ;   ஏல் - நேசம் ; எழில் - உன்னதம், உயர்வுநிலை
அணி - அண்மை, பக்கத்தில்

அன்புடைய இறைவன், குற்றம், பாசம், நேசம் தகர்த்தெரிந்து, தீர்த்த நீரால் கழுவி, உயர்வடைய செய்து, அரியாலும், பிரம்மனாலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு, அளவிட முடியாத அளவிற்கு வளர்ந்த அவன்,  தனக்கு பக்கத்திலிருந்து செய்தான் என்று மாணிக்கவாசகர் இறைவனைப் பற்றிக் குறிப்பிடுகிறார். 

பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும் 116
மீண்டு வாராவழி அருள் புரிபவன் 117

மிசை - முன்னிடம் வகித்து ; பயின்ற - கட்டுப்படுத்துதல் ; வண்ணமும் - இயல்பு, தன்மை
மீண்டு - மீட்டெடுத்தல், மீட்டமை, வா - ஓட்டம், குதிரைப் பாய்ச்சல், ரா -இரவு, வழி - சூழ்ச்சி, அருள் - வசை, கடிந்து கொள்ளுதல், புரி - சிக்கலில் , பவன் - இடபன், ருத்ரன்

குதிரையில் வந்து முன்னிலை வகித்து குதிரைகளை கட்டுப்படுத்தி,  மாணிக்கவாசகரை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்டெடுத்து அதாவது காப்பாற்றி, அன்றைய இரவில் அனைத்து குதிரைகளும் ஓடி மறைந்து, பாண்டிய மன்னன் கோபமடைந்து மாணிக்கவாசகரை கடிந்து, மாணிக்கவாசகரை சிக்கலில் மாட்ட வைத்த இறைவன் ருத்ரன் என்கிற பொருள்படும்படி மேற்கண்ட வரிகள் எழுதப்பட்டுள்ளது.

வார்த்தை ஒன்று, பொருள் பல என்பதற்கு திருவாசகம் ஒரு மிக அற்புதமான உதாரணம். உதாரணத்திற்கு அருள் என்கிற சொல் இங்கே வசைபாடுதல், அதாவது திட்டு வாங்குதல் என்கிற பொருளில் வருகிறது.  நமக்கு தெரியும் அருள் என்றால் கருணை, இறைவனின் அனுக்கிரகம் என்றெல்லாம் தெரியும். திருவாசகத்தில் அருள் என்ற சொல் சிவ சக்தி என்ற பொருளில், வசைபாடுதல் என்கிற பொருளில், இறைவனின் அனுக்கிரகம் என்கிற பொருளில் என சூழ்நிலைக்கு ஏற்றார்போல் பல்வேறு பொருள்படும்படி  வருகிறது. 

பாண்டி நாடே பழம்பதி ஆகவும் 118
பத்தி செய் அடியரைப் பரம்பரத்து உய்ப்பவன் 119

பாண்டி - நந்தி, நாடு - பூமி, உலகம், பழம்பதி - மூத்த கடவுள், மூத்தோன்
பத்தி - பக்தி பரம் - பிறவி நீக்கம், பரத்து - கடவுள்தன்மை , உய்ப்பவன்- பிழைக்க வைப்பவன், தப்பிக்க வைப்பவன்

உலகத்தில் நந்தியுடன் இருக்கும் மூத்த கடவுள் , தன்னை பக்தி செய்யும் அடியவரை பிறவிநீக்கம் செய்து, பிழைக்க வைத்து கடவுள்தன்மை அடைய உதவுபவன்.

உத்தர கோச மங்கை ஊர் ஆகவும் 120

உத்தர கோச மங்கை  என்னும் திருத்தலத்தை தன் தங்குமிடமாகவும்

ஆதி மூர்த்திகட்கு அருள்புரிந்து அருளிய 121

ஆதி - நாரை;  மூர்த்தி = (மூ +  ஊர்த்தி)  மூ - மூக்கு, ஊர்த்தி என்றால் ஊர்த்துவகதி, மேற்கதி, தெய்வீக உடல் என்றெல்லாம் பொருள்.  மூர்த்தி என்றால்  தவம் செய்தல் என்றும் பொருள் படும். அருள் - இரக்கம் காட்டுதல், கருணை காட்டுதல்;  புரி - விருப்பம் ; இந்து - மீன், மீனரசு

ஆதி மூர்த்திகட்கு அருள்புரிந்து அருளிய  என்கிற வரியில், திருவிளையாடற் புராணத்தின் 48வது  படலமான நாரைக்கு முக்தி கொடுத்த படலத்தை மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். மூர்த்தி என்கிற வார்த்தை இரண்டு விதமான பொருள்படும்படி மாணிக்கவாசகர் உபயோகித்து இருக்கிறார் என்று சொல்லலாம். மூர்த்தி என்றால்  தவம் செய்தல் என்றும் பொருள் படும், நாரையை பெரும்பாலும் நீங்கள் தண்ணீரில் பார்த்தீர்களென்றால் ஒற்றைக்காலில் நின்று மீன் பிடிக்கும் அதனால் அதனை தவம் செய்வதற்கு என்று உவமை சொல்வார்கள். ஒற்றைக்காலில் நின்று தவம் செய்யும் நாரைக்கு இறைவன் இரக்கம் காட்டி அதன் விருப்பமான பொற்றாமரை குளத்தில் மீன் இல்லாதவாறு செய்து அதன் விருப்பத்தை நிறைவேற்றி தெய்வீக உடலை கொடுத்து முக்தியடைய வைத்தான் இறைவன் என்கிற பொருள்படும்படி மாணிக்கவாசகர் சொல்லியிருக்கிறார்.மற்றொரு வகையில் பொருள் சொல்ல வேண்டுமென்றால், நீளமான மூக்கு உடைய நாரைக்கு இறைவன் இரக்கம் காட்டி அதன் விருப்பமான பொற்றாமரை குளத்தில் மீன் இல்லாதவாறு செய்து அதன் விருப்பத்தை நிறைவேற்றி தெய்வீக உடலை கொடுத்து முக்தியடைய வைத்தான் இறைவன் என்கிற பொருள்படும்படி மாணிக்கவாசகர் சொல்லியிருக்கிறார்.  நாரைக்கு முக்தி கொடுத்த  வரலாறு கீழ்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 

தேவ தேவன் திருப் பெயர் ஆகவும் 122

தே - ஈசன், - அம்மை , தேவன் - பாதுகாப்பவன், திரு - உயர்ந்த , பெயர் - புகழ் பெற்ற

அம்மை அப்பன் என்றும் பாதுகாப்பவன் என்றும் உயர்ந்த புகழ் பெற்றவன் இறைவன் என்று மாணிக்கவாசகர்  தேவ தேவன் திருப் பெயர் ஆகவும் என்கிற வரிகளில் குறிப்பிடுகிறார்.

இருள் கடிந்து அருளிய இன்ப ஊர்தி 123
அருளிய பெருமை அருண்மலை யாகவும் 124

இருள் - பிறவி, கடிந்து - நீக்கம், அருளிய - சிவசக்தி,  இன்பம் - அகமகிழ்ச்சி, உள்ளக் களிப்பு, ஊர்தி - வாகனம், எருது, குதிரை, சிவிகை, வண்டி முதலிய வாகனங்கள், அருளிய - தோன்றிய, பெருமை - புகழ் பெற்ற, அருண்மலை - அண்ணாமலையான  திருவண்ணாமலையை குறிக்கிறது. shivam.org மற்றும் பல வலைத்தளங்களில் அருள்மலை என்று  தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட இரு வரிகளும் சக்தி சிவனிடம் இடப்பாகம் பெற்று திருவண்ணாமலையில் அர்த்தநாரீஸ்வரராக கார்த்திகை தீபம் அன்று ரிஷப வாகனத்தில் காட்சி அளித்த நிகழ்ச்சியை குறிப்பிடுகிறது. பிறவி நீக்கம் தரும் புகழ்பெற்ற திருவண்ணாமலையில் சிவ சக்தியாக உள்ளம் களிப்புறும் வகையில் இறைவன் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார் என்று மாணிக்கவாசகர் மேற்கண்ட இரு வரிகள் மூலம் குறிப்பிடுகிறார்.


எப்பெருந் தன்மையும் எவ்வெவர் திறமும் 125
அப்பரி சதனால் ஆண்டுகொண் டருளி 126

பெருந்தன்மை - உயர்ந்த குணம்; எவ்வெவர் - எப்போதும்;  திறம் - பாதி, உடம்பு ; 
அப்பரிச = ( + பரிச) - அங்கம் (உடம்பு), பரிச - அன்பினால் இணந்து, ஆல் - அல்ல . அதாவது இங்கே அன்பினால் மட்டுமல்ல அங்கத்தினாலும் இணைந்து 
ஆண்டு - அவ்விடம், கொண்டு - உடன், அருள் - தோன்றினர்

திருவண்ணாமலையில் சிவன், சக்திக்கு தன் இடப்பாகம் கொடுத்ததை இங்கே மாணிக்கவாசகர் மிக அற்புதமாக வர்ணிக்கிறார். சிவனும், சக்தியும் அன்பினால் மட்டுமன்றி அங்கத்தினாலும் எப்போதும் இணைந்து அவ்விடத்தில் தோன்றினர் என்று மிக அழகாக சிவசக்தியான, அர்த்தநாரீஸ்வரர் தத்துவத்தை மாணிக்கவாசகர் மேற்கண்ட இரு வரிகள் மூலம் விளக்கி இருக்கிறார்.

நாயினேனை நலமலி தில்லையுள் 127

நா - மையம், மத்தியில் ; - இந்த, அண்மை சுட்டு(இலக்கணம்);  
ஏனைய - மற்றைய,  நல - வீர்யம், விளைவிக்கும் சக்தி, செயற்படுத்தும் திறன் ;
மலி - அதிக அளவில் கிடைத்தல்,

அண்மையில் (அருகில்) உள்ளவற்றைக் குறிக்க உதவும் சுட்டு "அண்மைச் சுட்டு" எனப்படும். என்ற சுட்டெழுத்து அண்மையைக் குறிக்க உதவுகிறது.
எடுத்துக்காட்டு:
இங்கு
இக்காட்சி
இவன்,
இவர்,
இந்நறுமணம்
இவ்விடம்

வரியின் பொருள் : மத்தியில் உள்ள இந்த இடம், ஏனைய அதாவது  மற்றைய  இடங்களைவிட வீர்யம் விளைவிக்கும் சக்தி அதிகமாக உள்ள இடம் என்று பொருள்.

கோல மார்தரு பொதுவினில் வருகென 128

கோல - பன்றி, மார் -முலை, தரு - கொடுத்தல், பொதுவினில் - தில்லையம்பலம், 
வரு - உயிரினங்களின் கூட்டம்,

 மேற்கண்ட வரி மூலம், திருவிளையாடல் புராணத்தின் 45ஆவது படலமான பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலத்தை மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். தில்லை அம்பலத்தை சேர்ந்த இறைவன் பன்றிக் குட்டிகளுக்கு முலை கொடுத்தான் என்பதுதான் மேற்கண்ட வரியின் பொருள்.  பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த   வரலாறு கீழ்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பு : shaivam.org ல் பதம் பிரித்து எழுதப்பட்டுள்ள இந்த வரி தவறானதாகும்.  கோலம் ஆர்தரு பொதுவினில் வருகஎன. மார் என்பதும், ஆர் என்பதும் வேறு பொருள். அதுபோல் வரு என்பதும் வருக என்பதும் வேறு பொருள் தரும். 124 வது வரியானஅருளிய பெருமை அருள்மலை யாகவும்என்கிற வரியும் தவறு. அருளிய பெருமை அருண்மலை யாகவும்  என்று வரவேண்டும். thevaaram.orgல் சரியான வரிகள் கொடுக்கப் பட்டுள்ளது.    shaivam.org ல் பல்வேறு வரிகள் தவறாக பதம் பிரிக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பதை பாராயணம் செய்யும் அடியவர்கள் கவனத்தில் கொள்ளவும்.

ஏல என்னையீங்கொழித் தருளி 129

ஏல - தாரளமாய் , கொழித்து - சலித்து தேவையில்லாததை ஒதுக்கி தள்ளுதல் ( அரிசி பருப்பு போன்றவற்றை முறம் வைத்து புடைத்து கல் போன்ற அனாவசியமான பொருட்களை நீக்குவது போன்று)அருளி - இரக்கம் மற்றும் கருணை காட்டுதல்

இறைவன் தன் மேல் தாராளமாய் கருணை காட்டி தன்னிடம் உள்ள தேவையில்லாத அனைத்து குணங்களையும் நீக்கி அருள் புரிந்தான் என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார் . அரிசி பருப்பு போன்றவற்றில் உள்ள கல், தூசி போன்றவற்றை நாம் புடைத்து சுத்தம் செய்வதுபோல் இறைவன் மாணிக்கவாசகரை புடைத்து சுத்தம் செய்தார் என்று உவமையுடன் மாணிக்கவாசகர் மிக அழகாக சொல்லியிருக்கிறார். அதாவது மாணிக்கவாசகரின் அனைத்து கர்ம வினைகளையும்,  குதிரையை நரியாக்கி, அவரை பாண்டிய மன்னன் கடுமையாக துன்புறுத்தும் வண்ணம் நடத்த செய்து , அவ்வாறு செய்வதன் மூலம் அவருடைய வினைகளை இறைவன் நீக்கினான் என்பதை  மாணிக்கவாசகர்கொழித்து  என்கிற வார்த்தையின் மூலம் மிக அற்புதமாக சொல்லி இருக்கிறார்.

அன்று உடன் சென்ற அருள்பெறும் அடியவர் 130
ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும் 131

அன்று - தகுதியின்மை, உடன் - ஒன்றாக சேர, சென்ற - முந்தைய, அருள்பெறும் - கருணை பெற்ற, ஒன்ற - கலத்தல், உடன் கலந்து - ஒன்றாக சேர, 

இறைவனின் கருணையை பெற்ற முந்தைய அவர்களோடு இறைவன் ஒன்றுசேர்ந்து அருளிய போது அவர்களுடன் சேர தகுதி அற்றவனாக இருந்தேன் என்று மாணிக்கவாசகர் தன்னைப் பற்றி குறிப்பிடும் வரிகள் மேற்கண்ட இரண்டு வரிகளும். 

எய்த வந்திலாதார் எரியில் பாயவும் 132

எய்த - அடைய, வந்திலாதார் =  வணங்கப்படும் தன்மை இலாதார், எரி - அனுமதி, 
இல் - பிறவாமை, பாய - ஊழியக்காரன்,

வணங்கப்படும் தன்மையில்லாத ஊழியக்காரனான தனக்கு பிறவாமை என்னும் நிலைமையை அடைய அனுமதி இல்லை என்று எய்த வந்திலாதார் எரியில் பாயவும் என்கிற வரிகள் மூலம் மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.

மாலது வாகி மயக்கம் எய்தியும் 133
பூதலம் அதனில் புரண்டுவீழ்ந்து அலறியும் 134
கால்விசைத்து ஓடிக் கடல்புக மண்டி 135

மால் -  மனக்கலக்கம்,  மயக்கம் -  அறியாமை, மாயை, பிரமை,
பூதலம் - பூமியில், நிலத்தில், புரண்டு - உருள்தல், வீழ்ந்து- கீழே வீழ்ந்து, அலறி - எதிர்ப்பு தெரிவித்து கதறுதுதல்
 கால் - கன்று குட்டி, விசை - வேகமாக,  கடல் - பசு, புக மண்டி - அடைக்கலம், ஆதரவு , 


திருப்பெருந்துறையில் இறைவன் குருந்த மரத்தடியில் குருவாய் வந்தருளி, திருவடி தீட்சை கொடுத்த பின்பு, மாணிக்கவாசகரை விட்டுவிட்டு இறைவன் அடியவர்களோடு சென்று மறைந்த பொழுது தன்னுடைய  மன நிலைமை எப்படி இருந்தது என்பதை மேற்கண்ட வரிகள் மூலம் மிக அழகாக சொல்லியிருக்கிறார். 

தன்னை மற்றவர்களோடு இறைவன் சேர்த்துக் கொள்ளாததினால், மனக்கலக்கமும் பிரமையும் அடைந்து, பூமியில் கீழே விழுந்து, உருண்டு, கதறியும், பசுவை நோக்கி கன்றுக்குட்டி ஆதரவு தேடி வேகமாக ஓடுவது போல, ஓடியும், குருவே, கடவுளே என அழுது புலம்பினார் மாணிக்கவாசகர் என்கிற பொருளை மேற்கண்ட நான்கு வரிகளும் சொல்கிறது.

பாத மெய்தினர் பாத மெய்தவும் 137
பதஞ்சலிக் கருளிய பரமநா டகஎன்று 138
இதஞ்சலிப் பெய்தநின் றேங்கினர் ஏங்கவும் 139

பாத என்கிற சொல் பதஞ்சலி முனிவரையும், வியாக்ரபாதரையும் குறிப்பிடுகிறது.
பா - பாம்பு , மெய் - உடல், பாதம் - திருவடிகள், எய்த - அடைய, 
பரமன் - கடவுள், நாடகன் - கூத்தாடுபவன்
இதம் - இதயம், சலிப்பு - ஆடிய, ஏங்கின - அரவு, பாம்பு (ஆதிசேஷன்), ஏங்கவும் - ஆசைப்படுதல்,

பாத மெய்தினர் இந்த வார்த்தையில் அர் என்கிற வார்த்தை பன்மையில் வருகிறது. பாத என்பது வியாக்ரபாதரையும், பா + மெய்  என்பது பதஞ்சலி முனிவரையும் குறிக்கிறது. பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும் சிவனின் ஆனந்த நர்த்தனத்தைக் காண விரும்பிய வரலாற்றை 137, 138, 139 இந்த மூன்று வரிகளும் குறிக்கிறது. 

வரிகளின் பொருள்: பாம்பு உடலைக் கொண்ட பதஞ்சலி முனிவரும், பாத என்று குறிப்பிடப்பட்டுள்ள வியாக்ரபாதரும் இறைவனின் திருவடிகளை காணவும், பதஞ்சலி முனிவருக்கு அருளிய கூத்தாடுபவனான கடவுளும், பரந்தாமனின் இதயத்தில் சிவன் நடனமாடிய நிகழ்ச்சி கேட்டு ஆதிசேஷன் ஆசைப்பட்டதை மேற்கண்ட மூன்று வரிகளும் குறிக்கிறது. பதஞ்சலி முனிவர் நடனம் கண்ட வரலாறு கீழ்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.




எழில்பெறும் இமயத் தியல்புடை யம்பொன் 140

எழில் -  வலி ,  இமய = ( + மய)  - இந்த,   மய  - வேறு நினத்து, பிழையாக 
இயல் - பரி, புடை - அடி, அம் - கடவுள், பொன் - தங்கம்

பாண்டிய மன்னன் கொடுத்த பொன்னை மாணிக்கவாசகர் இறை பணிக்காக செலவு செய்து விட்டார். அதிலிருந்து அவரை காப்பதற்காக, இறைவன் குதிரை ஆக மட்டுமன்றி, இறைவன் பாண்டிய மன்னனிடம் அடியும் வாங்கினார் என்று மாணிக்கவாசகர் இந்த வரியில் சொல்லி இருக்கிறார். இறைவனை வேறு யாரோ என்று நினைத்து பாண்டியமன்னன் அடித்ததைமயஎன்றும், “புடை” , “எழில்என்றும் சொல்கிறார். 


கீழ்கண்ட ஆறு வரிகளும் சிவன், உமையம்மைக்கு ஓம் என்கிற பிரணவ மந்திரத்தின் பொருளை ஓமாம்புலியூர் என்கிற திருத்தலத்தில் விளக்கம் அளித்த நிகழ்ச்சியை குறிப்பிடுகிறது. ஒருமுறை பார்வதிதேவி சிவனிடம் ஓம் என்ற பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் கேட்டபோது அதை சிவன் சொல்லும்பொழுது பார்வதிதேவி அதனை சரியாக கவனிக்காமல் கவனம் சிதறியது சிவன் பார்வதி தேவி மேல் கோபம் கொண்டு மானிடப் பிறப்பெடுக்க சாபம் கொடுத்துவிட்டார் . பார்வதிதேவி மானிடப் பிறப்பெடுத்து ஓம் என்கிற பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் கற்றுக்கொண்ட இடம் ஓமாம்புலியூர். இதன் வரலாறு கீழ்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. https://thiruvasagammeaning.blogspot.com/2020/05/blog-post_11.html

பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடநவில் 141
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு 142
அருளிய திருமுகத் தழகுறு சிறுநகை 143
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும் 144

 பொலி - விளக்குதல், தரு - மரம், இல் - மனைவி,பொது -  அனைத்துவம், உலக பொதுதன்மை பெற்ற, நட - ஒழுக்கம், கவனத்துடன் , நவில் - புதிதாக கற்றுக் கொள்ளுதல்
கனி - பழம், தரு - மரம்,  செவ்வாய் - சிவந்த வாயையுடைய, உமை - பார்வதி தேவி, 
ஓடு - உடன், காளி - கிஞ்சுகம், கிளி, 
திருமுகம் - கடவுள் சன்னிதானம், அழகு - இலக்கணம்,  உறு - சொல் வளமுள்ள, விளக்கம்மிக்க,இலக்கணம், சிறுநகை - புன்னகையுடன்,
இறை - விடை அளித்தல், அன் - அன்புடன், ஈண்டு -இங்கே, அடியவர் - இங்கே உமையம்மையை குறிக்கிறது.


பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடநவில் 141
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு

ஓமாம்புலியூர் என்னும் திருத்தலத்தில், அனைத்துவம் பெற்ற ஓம் என்கிற ப்ரணவ மந்திரத்தை, கனிதரும் மரமாக இலந்தை மரத்தடியில் தவமிருந்த, கிளியுடன் கூடிய சிவந்த வாய் உமையம்மைக்கு இறைவன் விளக்க அதை உமையம்மை கவனத்துடன் கற்றுக்கொண்ட நிகழ்ச்சியை இந்த இரண்டு வரிகளும் குறிக்கிறது.

அருளிய திருமுகத் தழகுறு சிறுநகை 143
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்

புலியூர் கடவுள் சன்னிதானத்தில் உமையம்மைக்கு சிறு புன்னகையுடனும், அன்புடனும், ஓம் என்ற பிரணவ மந்திரத்திற்கு இறைவன் விடையளித்தார் என்று மேற்கண்ட வரிகள் குறிப்பிடுகிறது.

பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன் 145
ஒலிதரு கயிலை உயர்கிழ வோனே 146

பொலி - விளக்கம் தரு - தருதல், புலியூர் - ஓமாம் புலியூர் என்கிற திருத்தலம், புக்கி - மரம், இனிதருளினன் - மகிழ்ச்சியோடு அருள்செய்தான், (அனன் என்றால் இறைவன்)
ஒலி = ( + லி ) - பக்கத்தில்,  - பெண்பால் பெயர் விகுதி (.கா - மனைவி), தரு -  தந்து, கயிலை - மலை, உயர் - பெருந்தன்மை,  கிழவோனே - கணவன், கடவுள்,

ஓமாம்புலியூர் இல் மரத்தின் கீழ் தவம் செய்த உமையம்மைக்கு விளக்கம் கொடுத்த இறைவனே என்றும், தன் பக்கத்திலேயே அதாவது தன் இடப்பாகத்திலேயே மனைவிக்கு இடம் தந்த பெருந்தன்மை உடைய கணவன், சிவன் என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். கீர்த்தி திரு அகவல் விளக்கம் இத்துடன் நிறைவடைந்தது.

திருச்சிற்றம்பலம்



Comments

Popular posts from this blog

ஏகன் அநேகன் இறைவன் வரிக்கு விளக்கம்

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ஏகன் என்றால் ஒருவன் , தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் என்று பொருள் . அநேகன் என்றால் பல உருவம் கொண்டவன் என்று பொருள் . சிவனை ஏகன் என்று சொல்லி , இதன் மூலம் சிவனை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்று அழகாக சொல்கிறார் மாணிக்கவாசகர் . அதுமட்டுமன்றி அநேகன் என்று சொல்வதன் மூலம் இறைவன் பல்வேறு வடிவமாக , எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார் . நமக்கு எல்லாம் தெரியும் , நம்முடைய சிவன் ,   ஒளி வடிவமாய் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறான் என்று . அறிவியல் பெருவெடிப்பு   தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது . அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம்   சொல்கிறது . எனவே அறிவியல் தத்துவத்தின் படி பார்த்தாலும் இறைவன் பல்வேறு வடிவமாக எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் . இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம் . ஏகன் என்கிற வ...

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் வரிக்கு விளக்கம்

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள் . பிறப்பறுக்கும் என்றால் பிறவித் தளையை அறுத்தல் என்று பொருள் . பெய் என்றால் மேலிருந்து பொழிதல் என்று பொருள் . பெய்கழல்கள் என்றால் நமக்கு மேலே இருந்து கருணை மழை பொழிபவனின் திருப்பாதங்கள் என்று பொருள் . அடுத்த பிறவி இல்லாமல் இருப்பது ஏன் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது என்று ஒருசிலருக்கு புரியாத புதிராக இருக்கிறது . இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு புரியுமாறு சொல்லவேண்டுமென்றால் , இன்னும் ஒரு 70 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . தண்ணீர் பற்றாக்குறை , மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஏட்டுக் கல்வி ,   அந்தக் கல்வியைப் பெற நாம் படும் துன்பங்கள் , நல்ல துணையை தேடி திருமணம் செய்து , பிறகு குழந்தை பிறந்த பிறகு அவர்களை நன்மக்களாக அடுத்த நூற்றாண்டில் வளர்ப்பதில் உள்ள கஷ்டங்கள் , உணவே மருந்தாக இருக்கும் நிலைமை மாறி மருந்தே உணவாக இருக...

பாண்டூர் வைத்தீஸ்வரன் ஆலயம் - கீர்த்தி திருஅகவல் கதை

பாண்டூர்   வைத்தீஸ்வரன்   ஆலயம் -சாந்திப்பிரியா- மிக்க நன்றி சாந்திப்பிரியா அவர்களே, உங்கள் தகவல் மிக மிக உபயோகமாக இருந்தது https://santhipriya.com/2018/04/மூன்றாவது-வைத்தீஸ்வரன்-ஆ.html மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில்  வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே  இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.  இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில்  இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது.    மஹாபாரத யுத்தம் முடிந்த  பின் எதற்காக பாண்டவ சகோதரர்...