பூவல மதனிற் பொலிந்தினி தருளிப்
பாவ நாச மாக்கிய பரிசும்
தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து
நன்னீர்ச் சேவக னாகிய நன்மையும்
பூ - பிறவி, வலம் - மலம், ஆணவம், பொலிந்தினி - (பொலி + இந்து + இனி) பொலி - மொத்த விளைவு , இந்து - கரி, இனி - உடனடியாக, கணத்தில், தண்ணீர்- அலைக்கழித்து, ஏமாற்று, பந்தர் - முற்பிறப்பில் செய்த தீவினையால் ஞானம் பெறாத பாசத்திற்கு உள்ளானவர்கள்,
சயம் - சிதைத்து, பெற - தக்க காலத்தில், வைத்து - காரணமான, நன்னீர் - நல்ல,
சேவகனாய் - ஊழியஞ் செய்பவனாய், நன்மை - நல்லருள், கடவுள்
பிறவி ஆணவம் போன்றவற்றின் மொத்த விளைவுகளை, ஒருகணத்தில் கரியாக்கி அருளி, பாவத்தை அழித்த பேறும், முற்பிறப்பில் செய்த தீவினையால் ஞானம் பெறாது பாசத்திற்கு உள்ளானவர்கள் அலைகழிய காரணமானவற்றை தக்க காலத்தில் சிதைத்து, நல்ல ஊழியஞ் செய்பவனாய் நல்லருள் செய்தவன் இறைவன் என்று இங்கு மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.
குறிப்பு: மேற்கண்ட நான்கு வரிகள் குறித்து பல விளக்கங்கள் இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் பெரும்பான்மையான விளக்கங்கள், பூவலம் என்பது ஒரு திருத்தலம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதுபோல தண்ணீர், நன்னீர், சேவகன் என்பது பாண்டியனை குறிப்பதாக விளக்கம் சொல்லி இருக்கிறார்கள். மேற்கண்ட இரண்டு விளக்கங்களும் தமிழ் அகராதியை உபயோகப்படுத்தாமல் மாணிக்கவாசகர் உபயோகப்படுத்திய வார்த்தைகளுக்கு புழக்கத்திலுள்ள, தெரிந்த அர்த்தங்களை உபயோகப்படுத்தியுள்ளனர். திருமறைகளில் உள்ள பாடல்களின் இனிமை அந்தப் பொருட்கள் அதனுடைய அர்த்தங்கள் மறைபொருளாய் இருப்பதுதான். அதை தமிழ் அகராதியை கொண்டு சரிவர புரிந்து கொள்வது திருவாசகத்தை மட்டுமல்ல இறைவனின் தன்மையை புரிந்து கொள்வதாக அமையும் ஏனெனில் இறைவனும் மறைபொருளாக நம் உள்ளத்தில் இருக்கிறான்.
Comments
Post a Comment