Skip to main content

சிவபுராணம் வரிகள் 33 - 35 விளக்கம்


உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 

உய்ய - பிழைக்குமாறு அருள் செய்தவன், என் உள்ளம் - என் ஆன்மா, 
நின்ற - எப்பொழுதும், - தங்குதல், காரமாய்  -  மெய்ப்பொருளாய், உறுதியாய்,  மெய்யா - மெய்ப்பொருள், கடவுள்,  விமலா -மாசற்றவன், குற்றமற்றவன், தூயவன்  விடைப்பாகா - நந்தியை தன் சொற்படி கேட்டு நடக்கப் பழக்கிவைத்திருப்பவர்,  வேதங்கள் - 4 மறை நூல்கள், ஐயா  -  மூத்தோர், பெரியோர், ஓங்கி - உயர்ந்து, ஆழ்ந்து அகன்ற - ஆழ்ந்து பரந்த, விசாலமான,  நுண்ணியனே -. நுட்பமானவன் (மேலோட்டமாகத் தெரியாத உள்ளடங்கிய அம்சம்)

இறைவன் தன் திருவடியைக் காட்டி மாணிக்கவாசகரை ஆட்கொண்டதினால், என்னை உய்வித்தவனே, அதாவது என் வினைகளை எல்லாம் நீக்கி என்னை காப்பாற்றியவனே என்று நன்றியுடன் குறிப்பிடுகிறார். என்னுடைய ஆன்மாவாக, மெய்ப்பொருளாய் எப்பொழுதும் இருப்பவனே!  மெய்ப்பொருளே, மாசற்றவனே, தூயவனே, நந்தியை தன் சொற்படி கேட்டு நடக்கப் பழக்கிவைத்திருப்பவனே, உலகின் பழமையான வேதங்களே உன்னை மூத்தவனாக, ஆழ்ந்த, பரந்த, விசாலமான ஞானம் உடையவனாக, நுட்பமானவனாக உணர்ந்து ஐயா என்று அழைக்கும் பெருமை உடையவனே! பெரியவனே! நுண்ணியனே என்று அழைப்பது எதனால் என்றால்  இறைவன் நமக்குள்  நுட்பமாய் ஆன்மாவாய் இருக்கிறான், அதாவது மேலோட்டமாக கண்ணுக்குத் தெரியும் வண்ணம் இல்லாமல், உள்ளுக்குள் நம்மால் உணரக்கூடிய ஒரு அம்சமாக, ஆன்மாவாக  மிக நுட்பமாய் இருக்கிறான். மேலே உள்ள இந்த வரியை எழுதும் பொழுது, இன்றைக்கு எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் திருவாசகத்திற்கு கடந்த சில மாதங்களாக என்னுடைய குரு சீரடி சாய் அவர்கள் வழிகாட்ட எழுதிக்கொண்டிருக்கிறேன். நம்முடைய சிவபுராணம் பாராயணம் குழுவிற்காக விளக்கம் போட ஆரம்பித்தவுடன்,  திரும்பவும் ஒருமுறை அனைத்து வரிகளையும் இறைவன் வழிகாட்ட சிறிது மாற்றங்களுடன் எழுதிக்கொண்டிருக்கிறேன்.  நாளை விளக்கம் போடப்படும் வரிகளில் ஒரு வரிஎஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே”. இந்த வரிக்கு நான் முன்பு எழுதிய விளக்கம் எனக்கு மன திருப்தியை அளிக்க வில்லை திரும்பத் திரும்ப யோசித்து பார்த்த பொழுது, இறைவன் நான் எதிர் பார்க்காத ஒரு கோணத்தில் இன்பப் பெருமானே என்கிற வார்த்தைக்கு விளக்கத்தை காட்டினார். அந்த விளக்கம் என் மனதிற்கு மிகவும் பிடித்து இருந்தது உகந்ததாய் இருந்தது. ஆனாலும் இந்தக் கோணத்தில் வார்த்தையை பிரிப்பது சரி தானா என்கிற ஒரு சிறு குழப்பம். இரவுச் சிற்றுண்டிக்கு, அனைத்தையும் ரெடி செய்துவிட்டு தயார் செய்துவிட்டு, குழந்தைகளும், கணவரும் வருவதற்காக காத்திருந்தேன். அப்பொழுது திடீரென எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. திருவாசகத்தின் 37 இரண்டாவது அதிகமான பிரார்த்தனைப் பத்து பாடல்களுக்கு தமிழ் அகராதிப்படி என்ன விளக்கம் என்று பார்க்கலாம் என்று தோன்றியது. எனக்கு ஏன் இப்படி ஒரு எண்ணம்  திடீரென வந்தது என்று புரியவில்லை இருந்தாலும் அந்த பாடலுக்கு வார்த்தைக்கு வார்த்தை தமிழ் அகராதி கொண்டு பொருள் பார்க்க ஆரம்பித்தேன். அந்த பாடலை கீழே கொடுத்துள்ளேன்.

கலந்து நின்னடியா ரோடன்று
    வாளா களித்தி ருந்தேன்
புலர்ந்து போன காலங்கள்
    புகுந்து நின்ற திடர்பின்னாள்
உலர்ந்து போனேன் உடையானே
    உலவா இன்பச் சுடர்காண்பான்
அலந்து போனேன் அருள்செய்யாய்
    ஆர்வங் கூர அடியேற்கே 


இப்பாடலில், “உலவா இன்பச் சுடர்காண்பான்” என்கிற வரிக்கு பொருள் பார்த்த பொழுது ஒரு நிமிடம் மலைத்து நின்றேன். ஏனெனில் இந்த வரியில் வரும் “இன்பச் சுடர்” மற்றும் சிவபுராணத்தின் 39-வது வரியில் வரும்  “இன்பப் பெருமானே” என்கிற இரண்டு இடத்திலும் இடத்திலுமவரும் இன்பம் என்கிற வார்த்தைக்கு ஒரே பொருள் போடும் பொழுது தான் சரியான விளக்கம் புரிந்தது. இந்த இரண்டு இடத்திலும் இன்பம் என்கிற வார்த்தை எவ்வாறு ஒரே மாதிரியான பொருளை கொடுக்கிறது என்பதை நாளைய பதிவில் பார்க்கலாம்.  நம் மனதில் ஏற்படும் எண்ணங்களை பெரும்பாலும் நாம் கவனிப்பதில்லை . இல்லையெனில் பெரும்பாலும் அனைவருமே, நடந்து முடிந்து போன பழைய விஷயங்களில் அல்லது நடக்கப் இருக்கும் விஷயங்களை குறித்து கவலைப்படுவதால், வேதனைப் படுவதால், நம் மனதின் உள்ளுணர்வுகள் சொல்லும் விஷயங்களை நாம் கவனிப்பதில்லை. சமைக்கும் பொழுதும், மற்ற வேலைகள் செய்யும் பொழுதும், முடிந்தபோதெல்லாம் நாம ஜபம் செய்யும் பொழுது, மனதில் தேவையற்ற எண்ணங்கள் குழப்பங்கள் மிக மிக மிக குறைந்து விடுகிறது. அன்றன்றைக்கு தேவையான விஷயங்களுக்கு ஏற்ப, அல்லது பிரச்சனைகளுக்கு ஏற்ப சரியான வழி உள்ளுணர்வு மூலமாகவோ அல்லது வேறு யாரேனும் மூலமாகவும் நமக்கு வருவதை நாம ஜெபம் செய்யும் பொழுது உணர முடிந்தது. நடந்து போன விஷயங்களை பற்றி நினைப்பதால், ஒரு பிரயோஜனமும் இல்லை ஏனெனில் நடந்தவற்றை எப்படியும் மாற்ற முடியாது அதுமட்டுமன்றி நடந்து முடிந்த விஷயங்கள் அனைத்தும் நம் கர்மாவினால் நடந்தது என்பதை என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ளும் பொழுது யாரையும் குறை சொல்ல தோன்றுவதில்லை, கோபப்பட தோன்றுவதில்லை. அதற்கு பதிலாக நாம ஜெபம் செய்யும் பொழுது அல்லது நமக்கு பிடித்த பாராயணங்களை நம்பிக்கையுடன் செய்யும்பொழுது, எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் கண்டிப்பாக ஒரு வழி தெரிகிறது. அதுமட்டுமன்றி கண்டதையும் நினைத்து நாம் மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பதினால் ஒரு அற்புதமான தெளிவும் மற்றும் மன அமைதி கிடைக்கிறது. கர்ம வினைகளின் எதிர்மறை விளைவுகளை குறைத்துக் கொள்வதற்கு, நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்து கூடிய சீக்கிரம் ஒரு பதிவை பதிவிடுகிறேன். நாம ஜபம் மற்றும் பாராயணத்தினால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் மற்றவர்கள் எவ்வளவு சொன்னாலும் புரியாது அதை அவர்கள் செய்யும் பொழுது மட்டுமே உணர முடியும். நம் அனைவரையும் இணைந்து பாராயணம் செய்து வைத்துக் கொண்டிருக்கிற இறைவனின் திருப்பாதங்களை அன்புடன் நன்றியுடன் வணங்குவோம்.  

தினமும் மாலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரை நித்திய பிரதோஷம். இந்த பிரதோஷ வேளையில் சிவபுராணம் படிப்பது மிகவும் பயனளிக்கும். எனவே சிவபுராண பாராயண குழுவில் இருப்பவர்கள் தங்களால் முடிந்தால், நித்திய பிரதோஷ வேளையான 4:30 -6:00 ல் அரை மணி நேரமோ அல்லது அவர்களால் முடிந்த அளவு படிக்கவும். இது கட்டாயம் அல்ல. முடிந்தவர்கள் அந்த வேளையில் படிக்கவும். நிறைய அன்பர்கள் அந்த வேளையில் படிக்கும் பொழுது அது கூட்டுப்பாராயணம் ஆகவும் அமையும்.  *மற்றுமொரு பணிவான வேண்டுகோளையும், இந்தப் பதிவுடன் பதிவு செய்கிறேன். தற்போது நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையால், நிறைய பேருக்கு பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்த பொருளாதார நெருக்கடி தீர வேண்டி, நாம் அனைவரும்,  தினமும் சரியாக மாலை 6 மணிக்கு, இடரினும் தளரினும் என்கிற பதிகத்தை, மனமார இறைவனை வேண்டி பொருளாதார நெருக்கடி தீர, ஒரு முறையோ அல்லது மூன்று முறையோ படிப்போம். இந்தப் பதிகம் மிக சக்திவாய்ந்த பதிகம், பொருளாதார நெருக்கடிகளை சந்திப்பவர்கள் இந்த பதிகத்தை பாராயணம் செய்வதால் பொருளாதார நெருக்கடி நிலை, கண்டிப்பாக மாறும். இன்னும் ஒரு பணிவான தாழ்மையான வேண்டுகோள்.   ராக்கினார்கோட்டை , கோட்டைக்காடு (தேவகோட்டை பக்கத்தில்) என்கிற இடத்தில் மிகப்பழமையான சிவலிங்கம் கோயில் இன்றி இருக்கிறது. இந்த லிங்கத்திற்கு கூடிய சீக்கிரம் கோயில் எழும்பவும், அதற்கு கும்பாபிஷேகம் நடக்கவும்  அனைவரும் பிரார்த்தனை செய்து, அதற்காக  இடரினும் தளரினும் என்கிற பதிகத்தை ஒரு முறை பாராயணம் செய்யவும். ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம்

Comments

Popular posts from this blog

ஏகன் அநேகன் இறைவன் வரிக்கு விளக்கம்

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ஏகன் என்றால் ஒருவன் , தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் என்று பொருள் . அநேகன் என்றால் பல உருவம் கொண்டவன் என்று பொருள் . சிவனை ஏகன் என்று சொல்லி , இதன் மூலம் சிவனை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்று அழகாக சொல்கிறார் மாணிக்கவாசகர் . அதுமட்டுமன்றி அநேகன் என்று சொல்வதன் மூலம் இறைவன் பல்வேறு வடிவமாக , எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார் . நமக்கு எல்லாம் தெரியும் , நம்முடைய சிவன் ,   ஒளி வடிவமாய் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறான் என்று . அறிவியல் பெருவெடிப்பு   தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது . அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம்   சொல்கிறது . எனவே அறிவியல் தத்துவத்தின் படி பார்த்தாலும் இறைவன் பல்வேறு வடிவமாக எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் . இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம் . ஏகன் என்கிற வ...

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் வரிக்கு விளக்கம்

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள் . பிறப்பறுக்கும் என்றால் பிறவித் தளையை அறுத்தல் என்று பொருள் . பெய் என்றால் மேலிருந்து பொழிதல் என்று பொருள் . பெய்கழல்கள் என்றால் நமக்கு மேலே இருந்து கருணை மழை பொழிபவனின் திருப்பாதங்கள் என்று பொருள் . அடுத்த பிறவி இல்லாமல் இருப்பது ஏன் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது என்று ஒருசிலருக்கு புரியாத புதிராக இருக்கிறது . இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு புரியுமாறு சொல்லவேண்டுமென்றால் , இன்னும் ஒரு 70 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . தண்ணீர் பற்றாக்குறை , மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஏட்டுக் கல்வி ,   அந்தக் கல்வியைப் பெற நாம் படும் துன்பங்கள் , நல்ல துணையை தேடி திருமணம் செய்து , பிறகு குழந்தை பிறந்த பிறகு அவர்களை நன்மக்களாக அடுத்த நூற்றாண்டில் வளர்ப்பதில் உள்ள கஷ்டங்கள் , உணவே மருந்தாக இருக்கும் நிலைமை மாறி மருந்தே உணவாக இருக...

பாண்டூர் வைத்தீஸ்வரன் ஆலயம் - கீர்த்தி திருஅகவல் கதை

பாண்டூர்   வைத்தீஸ்வரன்   ஆலயம் -சாந்திப்பிரியா- மிக்க நன்றி சாந்திப்பிரியா அவர்களே, உங்கள் தகவல் மிக மிக உபயோகமாக இருந்தது https://santhipriya.com/2018/04/மூன்றாவது-வைத்தீஸ்வரன்-ஆ.html மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில்  வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே  இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.  இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில்  இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது.    மஹாபாரத யுத்தம் முடிந்த  பின் எதற்காக பாண்டவ சகோதரர்...