Skip to main content

Posts

Showing posts from May, 2020

சிவபெருமான் வராகத்தின் கொம்பை அணிந்த வரலாறு!

இந்த இணையதளத்தில் இருந்துதான் தகவல்கள் எடுக்கப்பட்டன,இந்த இணையதளத்திற்கு நன்றி ! மன்றலங் கொந்து மிசை'' எனத் துவங்கும் திருப்பரங்குன்றத் திருப்புகழ்ப் பாடலில் ""பன்றி அம் கொம்பு கமடம் புயங்கம் சுரர்கள் பண்டையென்பு அங்கம் அணிபவர் சேயே!'' என்று வரும் அடிகளில் மூன்று புராண நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகிறார் அருணகிரிநாதர். இரணியாக்கன் என்ற அசுரன் பிரம்மனை நோக்கிக் கடும்தவம் புரிந்து ஏராளமான வரங்களைப் பெற்று விட்டான். அந்தக் கர்வத்தில் தனக்கு மிஞ்சிய வல்லமை படைத்தவன் மூவுலகிலும் இல்லை என்று கொக்கரித்து இந்தப் பரந்த உலகை ஒரு பாயைச் சுருட்டுவதுபோல் சுருட்டி கடலின் அடியில் மறைத்து விட்டான்! இதைக் கண்டு நடுங்கிய தேவர்கள் திருமாலிடம் சென்று உலகை மீட்டுத் தர வேண்டினார்கள். திருமால் அப்போதுதான் வராக (பன்றி) அவதாரம் எடுக்கிறார்.   மகா பயங்கரமான உருவம். இரண்டு மலை உயரமும், இரு கால்களுக்கு இடையே ஆயிரம் காதம் விசாலம் வடவா முகாக்கனி போன்ற கொடும் பார்வை (வடவா முகாக்கினி என்பது கடல்நீர் அதிகமாகாமலும், குறையாமலும் வைத்திருக்கும் கடலின் உள்ளேயே இருக்கும் ஒரு நெருப்பு என்பத...

கீர்த்தி திருஅகவல் விளக்கம் - (வரிகள் 87- முடிவு வரை)

திருப்பனையூரில் விருப்பன் ஆகியும் ( (87 வது வரி ) திருப்பனையூர் என்பது ஒரு திருத்தலம் ,   விருப்பன் = விருப்பு + அன் ,   விருப்பு - அன்பு ,   அன் - என்பது அன்பால் , நட்பால் ஏற்படும் உறவுகளின் பெயரோடு சேர்த்து வருவது . அதாவது கணவன் , நண்பன் போன்ற சொற்கள் எடுத்துக்காட்டாக அமைகின்றன .   திருப்பனையூர் தலத்திற்கு   அருகே சுந்தரர் வரும்பொழுது அங்கே சிவன் , சுந்தரர் கேட்காமலேயே , தானே அன்புடன் காட்சி கொடுத்து கூத்தாடிய நிகழ்ச்சியை மாணிக்கவாசகர் இங்கே குறிப்பிடுகிறார் .   கீர்த்தித் திருவகவலின் லின 85, 86, 87 வரிகள் இறைவன் சுந்தரருக்கு அருளிய செய்த நிகழ்ச்சிகளை குறிப்பிடுகிறது .   இந்த நிகழ்ச்சிகளை கொண்டு , இந்த வரிகளை கொண்டு மாணிக்கவாசகர் கொண்ட சுந்தரர் வாழ்ந்த காலத்திற்கு பின் வாழ்ந்தவர் என்பதை சான்றாக கொள்ளலாம் .   சுந்தரர் 63 நாயன்மார்களுடன்   மாணிக்கவாசகரை சேர்க்கவில்லை ஏனெனில் மாணிக்கவாசகர் , சுந்தரர் வாழ்ந்த காலத்திற்கு பின் வாழ்ந்தவர் .   கழுமலம் அத...