சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் * சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் * சிந்தை என்றால் மனம் , எண்ணம் என்று பொருள் . நின்று என்றால் எப்பொழுதும் என்று பொருள் . சிவன் என் மனதினுள் எப்பொழுதும் இருக்கிறான் என்று சொல்கிறார் மாணிக்கவாசகர் . அவ்வாறு இருப்பதை உணர்ந்ததினால் , * அவன் அருளாலே அவன் தாள் வணங்கி * அருள் என்றால் கூறுதல் , இயற்றுதல் என்று பொருள் . அதாவது சிவன் என்னுடைய மனதில் இருந்து கொண்டு என்னைச் சொல்ல சொன்னதினால் , அவன் தாள் வணங்கி , அவனுடைய திருவடிகளை முதலில் வணங்கி , * சிந்தை மகிழச் * மாணிக்கவாசகர் சிந்தையில் இருப்பது சிவன் என்று முதலிலேயே சொல்லிவிட்டார் எனவே சிந்தை மகிழ என்றால் சிவன் மகிழ என்று பொருள் . * சிவபுராணம் தன்னை * சிவபுராணம் என்றால் இந்தப் பாடலை , தன்னை என்றால் இறைவன் மற்றும் அம்மா என்று பொருள் . இந்தப் பாடலாக அதாவது சிவபுராணமாக , தி...