Skip to main content

கீர்த்தி திருஅகவல் விளக்கம் - 1 (வரிகள் 1- 35 )



தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல்உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோர் உலகும்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் 5

தில்லை- ஆடிய கூத்தன், சிதம்பரம்,  மூதூர் - மிகப் பழமையான ஊர், ஆடிய - நடனமாடுதல், 
திருவடி - கடவுள், தெய்வம், பாதங்கள், பல்உயிர் - ஆன்மபதிவுகள், எல்லாம் -  முழுமைக்கும் 
பயின்றனன் - கட்டுப்படுத்துபவன், தலைமையில், சுக்கான்( தேவையான திசையில் திருப்புவதற்காக அமைந்திருக்கும் கருவி), ஆகி - பட்டியலாகக் குறிப்பிட்டவற்றைத் தவிர வேறு இல்லை என்பதைக் காட்டி அவற்றை வாக்கியத்துடன் தொடர்பு படுத்தும் இடைச்சொல். எண்இல்- மரணத்தை கணிப்பவன், ( இல் - மரணம், எண் - கணிப்பவன்)  பல்குணம் -இயற்கை பதிவுகள், எழில் - மொத்தம், பெற - பிறப்பித்தல், விளங்கி- இயங்குதல், மண் - பூலோகம், விண் - விண்ணுலகம், வானோர் - தேவர்கள், உயர்ந்தவர்கள், உலகும் - திசைகளையும், துன்னிய -விபரம், பகுத்தறிவு கல்வி - அறிவியல், விஞ்ஞான சாஸ்திரம், தோற்றியும் - தோற்றுவிப்பவன், அழித்தும்-அழிப்பவன்

தில்லை மூதூர் ஆடிய திருவடி என்கிற வரிக்கு
மிகப்பழமையான ஊரில் நடனமாடிய ஆடிய கூத்தன் என்கிற தெய்வம் என்று பொருள் கொள்ளலாம் அல்லது மிகப்பழமையான ஊரான சிதம்பரத்தில் நடனமாடிய தெய்வம் என்றும் பொருள் கொள்ளலாம். 
பல்உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி  என்கிற வரிக்கு  
ஆன்ம பதிவுகள் (பிறவிகள்) எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவனாக, தலைவனாக நம்மை இயக்கும் கருவியாக இருப்பவன் தில்லையில் நடனமாடிய கடவுள் என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். ஆகி என்பதற்கு உயிர்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துவதற்கு அவனைத் தவிர வேறு இல்லை என்ற பொருளிலும் வருகிறது. (பதப்பொருள் குறிப்பை பார்க்கவும்)

எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி என்கிற வரிக்கு
மரணத்தை கணிப்பவனாக, இயற்கை பதிவுகளை பிறப்பித்தவனாக, இயக்குபவனாக இருப்பவன் தில்லையில் நடனமாடிய இறைவன் என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.

மண்ணும் விண்ணும் வானோர் உலகும்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் என்கிற வரிகளுக்கு
பூலோகம், விண்ணுலகம், தேவர்கள்,  மற்றும் திசைகளையும், அறிவியல் விஞ்ஞான சாஸ்திரம் போன்ற பகுத்தறிவு  விஷயங்களையும் தோற்றுவிப்பவனாக,அழிப்பவனாக இருப்பவன் தில்லையில் நடனமாடிய இறைவன் என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.

என்னுடை இருளை ஏறத்துரந்தும்
அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்
மன்னு மாமலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் 10


என்னுடை  - உடுக்கையாவது, (என் - யாவது, உடை - உடுக்கை ) , இருள் -  துன்பம், நோய், வருத்தம், வேதனை, அறியாமை, பிறப்பு,  தொல்லை , ஏற - தீர, துரம் - ஓர் இசைக்கருவி, மீதூரக் - மென்மேலும் பெருக, 
குடியாக் - ஆன்மாவில் குடியிருப்போன்  ( குடி +) குடி - குடியிருப்போன், - ஆன்மா, 
கொள்கை - அன்பு, சிறப்பு - தலைவன், கடவுள், மன்னுதல் - நிலைபெறுதல், 
மாமலை மகேந்திரம் - சிவாலயம் கொண்ட ஒரு மலை, சொன்ன - குறிப்பிட்ட, ஆகமம் - வருகை, தோற்றுவித்து - வெளிப்படுதல், அருளியும் - கருணை செய்தல்

என்னுடை இருளை ஏறத்துரந்தும் என்கிற வரிக்கு
உடுக்கையானது அறியாமை தீர, பிறப்பு தீர, தொல்லை தீர, இசைக்கப்படும் ஒரு கருவி. அதாவது சிவனின் உடுக்கை ஆனது உடுக்கை சத்தம் ஆனது நமது தொல்லைகளை அறியாமையை பிறப்பை தீர்க்கும் என மாணிக்கவாசகர் இங்கு மறைமுகமாக குறிப்பிடுகிறார்.

அடியார் உள்ளத்து அன்பு மீதூரக் 
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும் 
மன்னு மாமலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்

சிவன் அடியவர்கள் உள்ளத்தில் அன்பு மென்மேலும் பெருக, நம் ஆன்மாவின் குடியிருக்கும் அன்பு கொண்ட இறைவன், நிலைத்து நிற்கும் மகேந்திர மாமலையில் குறிப்பிட்டபடி, ஆன்மாவில் ஒளிந்திருந்த இறைவன் வெளிப்பட்டு வந்து அருளுவான் மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.


குறிப்பு: ஆகமம் என்றால் வேதங்கள் என்று ஒரு பொருள் உண்டு. ஆனால் இங்கே வேதங்கள் என்று பொருள் கொள்ளக்கூடாது, ஆகமத்தை நம் மனதில் வெளிப்படுத்துவதாக பொருள் கொடுக்கும். ஆகமங்களை முனிவர்களாலும் பிரம்மாவால் புரிந்துகொள்ள இயலாத பொழுது நம் மனதில் வெளிப்பட்டாலும் நம்மால் புரிந்து கொள்ள இயலாது. சிவன் மகேந்திர மலையில் ஆகமங்களை சொன்னதாக வரலாறு உண்டு. இங்கு மகேந்திரமலை, ஆகமம் இரண்டு வார்த்தைகளும்  ஒன்றாக வருவதினால் நிறைய பேர் தவறாக இதுகுறித்து பொருள் புரிந்து கொள்கிறார்கள். 

கல்லா இடத்துக் கலந்து இனிது அருளி
நல்லா ளோடு நயப்புறவு எய்தியும்
பஞ்சப் பள்ளியிற்பான் மொழி தன்னொடும்
எஞ்சாது ஈண்டும் இன்அருள் விளைத்தும்

கல் - மலை( திருச்செங்கோடு மலை, இங்குதான் சிவன் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளிக்கிறார்), இடம் - இடப்பாகம், கலத்தல் - சேர்த்தல், இனிது - மனத்துக்கு நிறைவு, இனிய,  அருள் -சிவசக்தி, நல்லாள் - நற்குணமுடையவள், குணத்தில் சிறந்த பெண், நயப்புறவு - அதிசய சேர்க்கை ( நயம் - அதிசயம், உறவு - சேர்க்கை), எய்துதல் - கூடியுள்ளார், அனுக்கிரகம் செய்தல்,  பஞ்சப்பள்ளி - பஞ்சப்பள்ளி என்பது பஞ்சபூத தலங்களை குறிக்கும், பஞ்ச - ஐந்து, பள்ளி - கோவில், இருப்பான் - இருப்பவன், பான் என்பது இலக்கணம், வினையெச்ச விகுதி அதாவது இருப்பான் உண்பான் என்கிற பொருளில் வருகிறது. மொழி - சேர்த்து, மொழி தன்னொடும் - தன்னோடு சேர்த்து,  எஞ்சாது - முழுமை, ஈண்டும் - இப்பொழுது, இன்அருள் -  இனிய சிவசக்தியாக, விளைத்தும் - அமைதல், புரிதல், 

கல்லா இடத்துக் கலந்து இனிது அருளி
நல்லா ளோடு நயப்புறவு எய்தியும்
பஞ்சப் பள்ளியிற்பான் மொழி தன்னொடும்
எஞ்சாது ஈண்டும் இன்அருள் விளைத்தும் என்கிற வரிகளின் பொருள்,

திருச்செங்கோடு மலையில் தனது இடப்பாகத்தில் நல்லாளை அதாவது உமையவளை சேர்த்து, அதிசயமான விசேஷமான ஒரு சேர்க்கையாக கூடியுள்ளார். பஞ்சபூத தலங்களில் இருப்பவன் தன்னோடு சேர்த்து, முழுமையாக சிவ சக்தியாக அருள்புரிகிறார்.

குறிப்பு: பஞ்சப்பள்ளி என்பது ஒரு திருத்தலம் என்று பல திருவாசக விளக்கங்களில் சொல்லப்பட்டுள்ளது ஆனால் அதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அதை பற்றிய தகவல்களும் எங்கும் இல்லை அது மட்டுமல்லாமல் சிவன் சிவ சக்தியாக தோற்றமளிப்பது திருச்செங்கோடு என்கிற திருத்தலத்தில் மட்டும்தான்.


கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் 15
விராவு கொங்கைநல் தடம் படிந்தும்
கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும்
மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்
மற்று அவைதம்மை மகேந்திரத்து இருந்து
உற்ற ஐம் முகங்களால் பணித்து அருளியும்

கிராதன் - வேடன், கிஞ்சுகம் - சிறிய, வாயவள் - வாயை உடையவள், விராவு - அடைத்து, தடுத்து, கொங்கைநல் - நல்லநாயகி, தடம் - நீர்நிலை, படி - அருள், படிந்தும் - அருள் செய்து, கேவேடர் - மீன்பிடிப்பவன், படுத்தும் - அழித்தும், மா -பெரிய , வேட்டு - வேட்டையாடி, ஆகமம் - வேதங்கள், மற்று - பின், உற்ற- நடந்த உண்மைகள் பணித்து - சொல்லி, அருளியும் - தருதல்

கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் 
விராவு கொங்கைநல் தடம் படிந்தும் என்கிற வரிகளின் பொருள்,

இந்த வரிகள் சிவன் அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரத்தை கொடுத்த கதையை விளக்குகிறது. சிவன் வேடன் உருவம் எடுத்து, சிறிய வாயை உடையவள் ஆன நல்ல நாயகியை தடுத்து நீர்நிலையில் அர்ஜுனனுக்கு அருள்புரிந்த திருவிளையாடலை விளக்கும் வரிகள்.

கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும்
மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்
மற்று அவைதம்மை மகேந்திரத்து இருந்து
உற்ற ஐம் முகங்களால் பணித்து அருளியும்

மீனவ உருவம் எடுத்து கெளிறு என்கிற பெரிய மீனை வேட்டையாடி அழித்து, ஆகமத்தை அந்த மீனிடம் இருந்து காப்பாற்றி, பின் அவைகளை மகேந்திர மலையில் இருந்து தன்னுடைய ஐந்து முகங்களினால் சொல்லி அருளிய உண்மைகளை இந்த வரிகள் குறிப்பிடுகின்றன.



மேற்கண்ட வரிகளில் சொல்லப்பட்டிருக்கிற சிவனின் திருவிளையாடல்களை கீழே இணைத்துள்ளேன்


கீர்த்தி திருஅகவல் - சிவபெருமான் திருவிளையாடல்கள் - 1

பாரதப்போரில் வெற்றிபெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்புகிறான். அப்போது கிருஷ்ணன்,""நீ அனைத்து அஸ்திரங்களையும் உனது மானசீக தந்தையான இந்திரனிடமிருந்து பெற்றாய். ஆனால் பாசுபதாஸ்திரத்தை மட்டும் நீ சிவனிடமிருந்து தான் பெற வேண்டும். அதற்கு இந்திரனின் அனுமதி பெற வேண்டும்,''என்றார்.

இதற்காக அர்ஜுனன் மூங்கில் காடாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தான்.அர்ஜுனனின் தவத்தை கலைக்க துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான். உடனே சிவன் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து பன்றியை கொன்றார். 
நான்கு வேதங்களும் நாய்களாக மாறி இறைவன் பின்னே வந்தன. அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பு எய்தான். பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும், அர்ஜுனனுக்கும் சொற்போரும் விற்போரும் நடந்தது. போரில் அர்ஜுனனின் வில் முறிந்தது. 
கோபமடைந்த அர்ஜுனன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். அந்த அடி மூவுலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. வேடுவப்பெண்ணாக வந்த பார்வதி கோபமடைந்தாள். சிவன் பார்வதியிடம்,""உமையவளே! நீ லோகமாதா! நீ கோபப்பட்டால் இவ்வுலகம்
தாங்காது,''என சமாதானப்படுத்தி "சற்குணா' (நல்லநாயகி) தள்ளி நில் என்கிறார். சிவன் தன் திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிகிறார். சிவனின் பாத தீட்சை பெற்று அன்னையின் கருணையால் இத்தல  கிருபாகடாட்ச தீர்த்தத்தில் விழுகிறான். 
சிவன் பார்வதியுடன் காட்சி கொடுத்து பாசுபதாஸ்திரத்தை தந்தருளினார். அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம்.

கீர்த்தி திருஅகவல் - சிவபெருமான் திருவிளையாடல்கள் - 2
சிவபெருமான் அம்பிகைக்கு ஆகமங்களின் பொருளை உபதேசித்தான். ஆனால், ஏனோ அம்பிகை அதில் ஆர்வம் காட்டவில்லை. ஆகவே, அவள் மீனாகப் பிறக்கவேண்டும் என சிவபெருமான் சபித்துவிட்டார்.
இதனால், அம்பிகையின் மகன்களான பிள்ளையாரும் முருகனும் ஆகம நூல்களைக் கடலில் வீசி விட்டார்கள். பின்னர், இறைவன் ஒரு மீனவனாக வந்து, ஆகமங்களைப் பெற்று, அம்பிகையையும் மணந்தான்.


நந்தம் பாடியில் நான் மறையோனாய்
அந்தமில் ஆரியனாய் அமர்ந்து அருளியும்
வேறு வேறு உருவும் வேறுவேறு இயற்கையும்
நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி
ஏறு உடை ஈசன் இப்புவனியை உய்யக் 

நான்மறையோன்- நான்கு வேதங்களில் வல்லவனான அந்தணன்,
 அந்தமில் - (அந்தம் + இல் )அந்தம்  - அறியாமை, இல் - பிறவாமை இன்மை , ஆரியன்- ஆசிரியன், ஆசாரியன்,  அமர்வு - (கூட்டம் மாநாடு போன்றவற்றில்)குறிப்பிட்ட நிகழ்வுக்காக ஒதுக்கப்பட்ட நேரம், அருளியும் - அனுகிரகம் செய்தல், வேறு - தனி, ஏகாந்த நிலை, தனிநிலை,  வேறு - மற்ற, உரு - வடிவம், உருவம் இயற்கை - தன்மை, சுபாவம், நூறு - புழுதியாய், மண்ணாய், விபூதியாய், நுண்ணிய பொருட்களாய்,  அணுவாய், ஆயிரம் - ரகசியமாய், மறைபொருளாய், புதைப்பொருளாய், புதைக்கப்பட்டிருக்கும் புதையலாய், இயல்பு - குணம்,
 ஆகி- பட்டியலாகக் குறிப்பிட்டவற்றைத் தவிர வேறு இல்லை என்பதைக் காட்டி அவற்றை வாக்கியத்துடன் தொடர்பு படுத்தும் இடைச்சொல் தன்மை,   
ஆகி என்பதின் மற்றொரு விளக்கம்:  ஒன்றை அடுத்து ஒன்றாகத் தொகுத்துத் தரப்பட்டதன் பின் அந்தத் தொகுப்பில் தரப்பட்டவற்றுக்கு மேல் சேர்ப்பதற்கு வேறு இல்லை என்பதை வரையறுப்பதாக இருப்பது
ஆகி என்பதின் மற்றொரு விளக்கம்: பண்பை விளக்கும் மொழி
ஏறு - இடப வாகனம், நந்திதேவர் , உடை - உடுக்கை, ஈசன் - எப்பொருட்கும் இறைவன், மூத்தோன், உய்யக் - தப்பித்து கரையேற்ற வைத்தல்,பிழைக்க வைத்தல்

நந்தம் பாடியில் நான் மறையோனாய்
அந்தமில் ஆரியனாய் அமர்ந்து அருளியும்

நந்தம் பாடி என்னும் திருத்தலத்தில் உள்ள சிவனடியார்கள் தங்களுக்கு வேதம் கற்பிக்க ஒரு குரு தேவை என்று வேண்டினர். அவர்களின் வேண்டுதலை செவிமடுத்த இறைவன், அந்தணனாக  உருவம் எடுத்து வந்து வேதங்களை அவர்களுக்கு ஆசிரியனாக இருந்த சொல்லிக் கொடுத்தான் என்பது சிவன் திருவிளையாடல்களில் ஒரு நிகழ்வு.  அந்த நிகழ்வை தான் மாணிக்கவாசகர் இங்கு சொல்லி இருக்கிறார். 

நந்தம் பாடி என்னும் திருத்தலத்தில் நான்கு வேதங்களில் வல்லவனான அந்தணனாக, அவர்களின் அறியாமையை நீக்கி, பிறவாமை இன்மை அருள் வதற்காக, இந்தக் குறிப்பிட்ட நிகழ்வு நிகழ்வதற்காக, சிவன்  அந்தணனாக உரு எடுத்து வந்தார் என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.


வேறு வேறு உருவும் வேறுவேறு இயற்கையும்

இறைவன் தனியாய், ஏகாந்த  நிலையில் இருப்பவன் ஆகவும், அதேசமயம் மற்ற உருவங்களாகவும் இருக்கிறான் என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். அதுமட்டுமன்றி அவன் தனித்த தன்மை உடையவனாகவும், அதேசமயம் பல்வேறுபட்ட தன்மை உடையவனாகவும் இருக்கிறான் என மிக அழகாக வேறு என்கிற ஒரு வார்த்தையை பல்வேறு விதமான அர்த்தங்களுடன் மாணிக்கவாசகர் உபயோகித்துள்ளார்.

நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி

இறைவன் புழுதியாய், மண்ணாய், விபூதியாய், நுண்ணிய பொருட்களாய், அணுவாய், ரகசியமாய், மறைபொருளாய், புதைக்கப்பட்டிருக்கும் புதையலாய் இருக்கிறான். அதாவது மறைந்திருக்கும் குணம் கொண்டவனாய் இருக்கிறான் என்று மாணிக்கவாசகர் இங்கு மிக அழகாக சொல்லி இருக்கிறார். ஆகி என்கிற சொல் மிக அழகாக இதற்குமேல் வேறு எதுவும் சேர்க்க இயலாது அதாவது இறைவன்தான் அனைத்தும் என்பதை அறுதியிட்டு கூற ஆகி என்கிற வார்த்தையை இங்கே மாணிக்கவாசகர் உபயோகித்துள்ளார்.

ஏறு உடை ஈசன் இப்புவனியை உய்யக்

இடப வாகனம் உடுக்கையுடன் இருக்கக்கூடிய இறைவன் இந்த பூலோகத்தை, மண்ணுலகில் உள்ள உயிர்களை தப்பித்து பிழைக்க வைத்து கரை ஏற்றுவதற்காக


கூறு உடை மங்கையும் தானும் வந்தருளிக்
குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிசைச் 
சதுர்படத் சாத்தாய்த் தான் எழுந்தருளியும்
வேலம்புத்தூர் விட்டேறு அருளிக்
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் 30

கூறு - பாதி, உடை - புடவை,மங்கை - பெண், குடநாடு - மேல் நாடு, மிசை - உயர்ந்த, உன்னத,  சதுர் - தந்திரம் சூழ்ச்சி உபாயம், சாத்தாய் - பாடல், கோலம் - தோற்றம்,பொலிவு - அழகிய கொள்கை - நிகழ்ச்சி

தன்னில் பாதியாக உள்ள புடவை கட்டிய மங்கையும், தானும் வந்து
மேல் நாட்டைச் சேர்ந்த உயர் குதிரையை கொண்டு 
சூழ்ச்சி செய்து, பாடலாய் (திருவாசகமாய்) தான் எழுந்தருளி
வேலம்புத்தூர் என்னும் திருத்தலத்தில் வேல் கொடுத்து
அழகிய தோற்றத்தை காட்டிய நிகழ்ச்சி

ஏற்கனவே நாம் புராணக் கதையாக, சிவபெருமான் தானே வந்து திருவாசகத்தை எழுதியதாக படித்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம். மேற்கண்ட வரிகளில் அந்த உண்மை உறுதிப்படுத்தப்படுகிறது. மேற்கண்ட நான்கு வரிகளுக்கு அர்த்தம் புரிந்த பொழுது, எவ்வளவு பெரிய விலைமதிப்பில்லாத பொக்கிஷம் திருவாசகம் என்பது புரிந்தது. ஏற்கனவே நாம் பலமுறை பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம் படித்திருக்கிறோம். ஆனால்  நாமே உணரும் பொழுது அந்த உணர்வை சொல்வதற்கு வார்த்தைகள் ஏதுமில்லை. வைரஸ் என்னும் தொற்றுநோய் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கீர்த்தித் திருஅகவலின் ஆறாவது வரியின் பொருளை  என்னுடை இருளை ஏறத்துரந்தும்நாம் இந்தத் தொற்று நோயான வைரஸின் பிடியிலிருந்து தப்பிக்க உபயோகப்படுத்தலாம். அந்த வரியின் பதப்பொருளை இங்கே கொடுத்துள்ளேன். என்னுடை  - உடுக்கையாவது, (என் - யாவது, உடை - உடுக்கை ) , இருள் -  துன்பம், நோய், வருத்தம், வேதனை, அறியாமை, பிறப்பு,  தொல்லை , ஏற - தீர, துரம் - ஓர் இசைக்கருவி. அதாவது உடுக்கை என்னும் இசைக்கருவி எல்லாவித துன்பங்களை நோய்களை அறியாமையை தீர்க்கும் என்று இந்த வரி மூலம் நமக்கு மாணிக்கவாசகர் சொல்கிறார். எனவே நாம் அனைவரும் உடுக்கையின் சத்தத்தை யூடியூப் மூலம் கேட்போம். தொற்று நோயிலிருந்து நம்மை காத்துக் கொள்வோம். 


தர்ப்பணம் அதனில் சாந்தம்புத்தூர்
வில்பொரு வேடற்கு ஈந்த விளைவும்
மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி
சொக்கது ஆகக் காட்டிய தொன்மையும்
அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் 35

தர்ப்பணம் - கண்ணாடி, சாந்தம்புத்தூர் - சாந்தம்புத்தூர் என்னும் திருத்தலம்,
வில் - வில், அம்பு, பொரு - விதம், அழகு, வேடற்கு - வேடன், ஈந்த - கொடுத்த, 
விளைவும் - நிகழ்ச்சி, மொக்கணி - குதிரைக்குக் கொள்ளுக்கட்டும் பை, அருளிய - காட்டிய, முழு - என்னும், தழல் - அக்னி, மேனி - வடிவம், சொக்கன் - சிவன், தொன்மை - தன்மை, இயல்பு,  அரி - திருமால், பிரம்மா - பிரம்மா, அளவு - பரிமாணம், அறி - கண்டுபிடித்தல் , ஒண்ணான் - சாத்தியமில்லாத  

சாந்தம்புத்தூர் என்னும் திருத்தலத்தில் கண்ணாடியில் காட்சியளித்து வில் கொடுத்த அழகு நிகழ்ச்சியும், குதிரைக்குக் கொள்ளுக்கட்டும் பையில், அக்னி வடிவமாக சிவன் காட்சி அளித்த தன்மையும், திருமாலுக்கும், பிரம்மாவிற்கும், பரிமாணம் இல்லாத அதாவது நீள, அகல,உயரம் மற்றும் காலத்தை கடந்து நின்றுந்து, அவர்களால் கண்டுபிடிக்க இயலாத, அவர்களுக்கு சாத்தியமில்லாத உருவமாய் நின்ற இறைவன்.

Comments

Popular posts from this blog

ஏகன் அநேகன் இறைவன் வரிக்கு விளக்கம்

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ஏகன் என்றால் ஒருவன் , தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் என்று பொருள் . அநேகன் என்றால் பல உருவம் கொண்டவன் என்று பொருள் . சிவனை ஏகன் என்று சொல்லி , இதன் மூலம் சிவனை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்று அழகாக சொல்கிறார் மாணிக்கவாசகர் . அதுமட்டுமன்றி அநேகன் என்று சொல்வதன் மூலம் இறைவன் பல்வேறு வடிவமாக , எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார் . நமக்கு எல்லாம் தெரியும் , நம்முடைய சிவன் ,   ஒளி வடிவமாய் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறான் என்று . அறிவியல் பெருவெடிப்பு   தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது . அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம்   சொல்கிறது . எனவே அறிவியல் தத்துவத்தின் படி பார்த்தாலும் இறைவன் பல்வேறு வடிவமாக எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் . இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம் . ஏகன் என்கிற வ...

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் வரிக்கு விளக்கம்

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள் . பிறப்பறுக்கும் என்றால் பிறவித் தளையை அறுத்தல் என்று பொருள் . பெய் என்றால் மேலிருந்து பொழிதல் என்று பொருள் . பெய்கழல்கள் என்றால் நமக்கு மேலே இருந்து கருணை மழை பொழிபவனின் திருப்பாதங்கள் என்று பொருள் . அடுத்த பிறவி இல்லாமல் இருப்பது ஏன் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது என்று ஒருசிலருக்கு புரியாத புதிராக இருக்கிறது . இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு புரியுமாறு சொல்லவேண்டுமென்றால் , இன்னும் ஒரு 70 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . தண்ணீர் பற்றாக்குறை , மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஏட்டுக் கல்வி ,   அந்தக் கல்வியைப் பெற நாம் படும் துன்பங்கள் , நல்ல துணையை தேடி திருமணம் செய்து , பிறகு குழந்தை பிறந்த பிறகு அவர்களை நன்மக்களாக அடுத்த நூற்றாண்டில் வளர்ப்பதில் உள்ள கஷ்டங்கள் , உணவே மருந்தாக இருக்கும் நிலைமை மாறி மருந்தே உணவாக இருக...

பாண்டூர் வைத்தீஸ்வரன் ஆலயம் - கீர்த்தி திருஅகவல் கதை

பாண்டூர்   வைத்தீஸ்வரன்   ஆலயம் -சாந்திப்பிரியா- மிக்க நன்றி சாந்திப்பிரியா அவர்களே, உங்கள் தகவல் மிக மிக உபயோகமாக இருந்தது https://santhipriya.com/2018/04/மூன்றாவது-வைத்தீஸ்வரன்-ஆ.html மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில்  வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே  இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.  இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில்  இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது.    மஹாபாரத யுத்தம் முடிந்த  பின் எதற்காக பாண்டவ சகோதரர்...