தேவூர் தென்பால் திகழ்தரு தீவிற்
கோவார் கோலங் கொண்ட கொள்கையும்
தேவூர் - தேவூர் என்னும் திருத்தலம், தென்பால் - தென் பகுதி, திகழ்- மிகச் சிறப்பான, தீவி - கல், வெளிநாட்டு செடிவகை, கோவார் (கோ + வார்)
கோ - பசு, வார் - முலைக்கச்சு, கோலம் - வேடம், தோற்றம், கொள்கை - நிகச்சி
தேவூர் என்னும் திருத்தலத்தில் தென்பகுதியில் சிறப்புமிக்க மரமான கல்லில், பசுவின் முலையாக, அதாவது கன்றுக்கு பால் கொடுக்கும் வேடத்தில் தோன்றிய நிகழ்ச்சியும் என்று பொருள்.
தேவூர் திருத்தலம் பற்றிய தகவல்கள்
தேனமர் சோலைத் திருவா ரூரில்
ஞானந் தன்னை நல்கிய நன்மையும்
தே - கடவுள், இறைவன், அமர் - விரும்பி, இருக்கும், சோலை - அழகிய, திருவாரூரில் - திருவாரூர் என்னும் திருத்தலத்தில் , ஞாலம் - பூமி, தன்னை - இறைவனை, நல்கிய - அருள் செய்கின்ற, நன்மை - சிறப்பும்
இறைவன் விரும்பி இருக்கும் அழகிய திருவாரூர் எனும் திருத்தலத்தில், பூமியாக இறைவன் இருந்து அருள் செய்கின்ற சிறப்பும் என்று பொருள். பஞ்சபூத ஸ்தலங்களில் பூமி ஸ்தலமாக காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் விளங்குகிறது. திருவாரூர் சிதம்பரத்தை விடவும் மிகவும் பழமையான ஊர்.
இடைமரு ததனில் ஈண்ட இருந்து 75
படிமப் பாதம் வைத்தவப்பரிசும்
இடை - துறக்கம், தேவருலகம், இந்திரன், மருது - அர்ஜுனன், அதனில் - அதனால், ஈண்ட - மெய்யுறுதிப்பாடு, தீவிரமான, கடுமையான, படிமம் - தவம், பாதம் - மலை அடிவாரம், வை - தீவிரமான, கடுமையான, பரிசு - வெகுமதி
இந்திரனது வழிகாட்டுதல்படி அர்ஜுனன் கடுமையான மிகத்தீவிரமான தவத்தை இந்திரகீல பர்வத மலை அடிவாரத்தில் சிவனை நோக்கி இருந்தான். தீவிரமான கடுமையான தவத்திற்கு பரிசாக பாசுபதாஸ்திரத்தை சிவன் அளித்த நிகழ்ச்சி இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.
அர்ஜுனன் சிவனைக் குறித்து தவம் செய்து பாசுபதாஸ்திரம் பெற்ற கதை
ஏகம் பத்தில் இயல்பாய் இருந்து
பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்
ஏகம் பத்தில் என்பது காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருத்தலத்தை குறிக்கிறது.
ஏகாம்பரன் - (ஏகன் + ஆம் + பரன்) ஏகன் - ஒன்று, ஆம் - மாமரம், பரன் - உடல்
இயல்பு - சொற்கள் விகாரமில்லாமல் புணர்தல் என்கிற இலக்கணத்தை குறிக்கிறது. எடுத்துக்காட்டாக
வாழை + மரம் = வாழை மரம்
வாழை + பழம்= வாழைப் பழம்
மண் + குடம்=மட்குடம்
மரம் + வேர்=மரவேர்
இத் தொடர்களுள், முதலில் உள்ள ‘வாழை மரம்’ என்பதில் ‘வாழை’ நிலைமொழி. ‘மரம்’ என்பது வருமொழி. இவ்வாறு நிலைமொழியும் வருமொழியும் சேரும்பொழுது எந்தவித மாற்றமும் இல்லாமல் இயல்பாகச் சேருவதை (புணருவதை) இயல்புப் புணர்ச்சி என்பர். இதுபோலவே சிவனும் சக்தியும் எந்தவித மாற்றமும் இல்லாமல் இயல்பாகச் சேருவதை மாணிக்கவாசகர் இயல்பாய் என குறிப்பிடுகிறார். வாழை+பழம் = ‘வாழைப்பழம்’ என்பதில், ‘ப்’ என்னும் ஓர் எழுத்துத் தோன்றிப் புணர்ந்துள்ளது.மண்+குடம் = ‘மட்குடம்’ என்பதில் ஓர் எழுத்துத் திரிந்து புணர்ந்துள்ளது. மரம்+வேர் = ‘மரவேர்’ என்பதில் ஓர் எழுத்துக் கெட்டுப் புணர்ந்துள்ளது.
பாகம் என்றால் பாதி.
அதாவது காஞ்சிபுரத்தில், மாமரத்தின் கீழ் உமையவள் தவமிருக்க சிவன் தோன்றி உமையவளின் ஆசைப்படி தன்னுடைய உடம்பில் பாதியை தருவதாக வரம் அளிக்கிறார். இந்த நிகழ்ச்சியினால், காஞ்சிபுரத்தில் இறைவன் ஏகாம்பரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். ஏகன் - ஒன்று, ஆம் - மாமரம், பரன் - உடல். அதன்பின் திருவண்ணாமலையில் உமையவளை தன்னில் பாதியாய் சேர்த்து அர்த்தநாரீஸ்வரராக கார்த்திகை தீபம் அன்று ரிஷப வாகனத்தில் காட்சியளிக்கிறார். உமையம்மை சிவனின் இடப்பாகம் பெற்ற வரலாறு கீழ்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து
மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் 80
திருவாஞ்சியத்தில் என்பது ஸ்ரீவாஞ்சியம் என்கிற திருத்தலத்தை குறிக்கிறது. சீர் என்றால் இணையான, பெற - தோன்றி, மரு என்றால் வாசனை மிக்க, ஆர் என்றால் அரிய, குழல் என்றால் கூந்தல் , மகிழ்ந்த என்றால் விருப்பமுடன்
காசிக்கு இணையான ஸ்ரீவாஞ்சியம் எனும் திருத்தலத்தில் தோன்றி, அரிய நறுமணம் மிக்க கூந்தல் உடைய உமையாளொடு விரும்பி இருந்து அருள் செய்கின்ற தலம் என்று பொருள்.
பிரளய காலத்தில் உலகம் அழிந்த போது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து வியந்தனர். அது போலவே தப்பிய இடங்கள் வேறு எங்கெங்கே உள்ளன என்று தேடித் தென் திசைக்கு வந்தனர். அப்போது தான் காவிரிக் கரையில் திருவாஞ்சியம் என்னும் ஊரைக் கண்டு அதன் அழகில் மயங்கி லிங்க வடிவில் சுயம்புவாகச் சிவபெருமானும் ஞானசக்தியாகப் பார்வதி தேவியும் அவ்வூரிலேயே கோயில் கொண்டு விட்டனர். இந்த தலத்தை தான் மிகவும் நேசிப்பதாக சிவன் பார்வதியிடம் கூறியதாக புராணங்கள் சொல்கின்றன. திருவாஞ்சியம் தலவரலாறு கீழ்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
https://thiruvasagammeaning.blogspot.com/2020/04/blog-post_87.html
சேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப்
பாவகம் பலபல காட்டிய பரிசும்
சேவகன் - ஊழியஞ்செய்வோன், திண் - வலிமையான, சிலை - வில், பாவகம் - உருவம், பல - ஒன்றுக்கு மேற்பட்டவை
சிவனின் திருவிளையாடல்களில் முப்பதாவது படலமான மெய்க் காட்டிட்ட படலத்தை மேற்கண்ட இரண்டு வரிகள் மூலம் மிக அழகாக மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.
இறைவன் வலிமையான தோள்களை உடையவனாய், வில்லேந்திய படை சேவகனாய், தன் அடியவரை காப்பாற்ற, ஊழியம் செய்பவனாக, பலபல என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுவது பல்லாயிரக்கணக்கான உருவங்களை காட்டிய நிகழ்ச்சியை குறிப்பிடுகிறது. மெய்க் காட்டிட்ட படலம் கதை கீழ்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்
கடம் - யானை மதம், பூர் - நுழைதல், புகுதல், தன் - பேச்சில் குறிப்பிடப் படுகின்ற ஒருவர் அல்லது ஒன்று, இல் - இறத்தல், இடம் - குத்தி, யுத்தம் செய்தல், பெற - பிடிபடுதல்,
இருந்து - செயலறுதல், கீழே அழுந்துதல்
சிவனின் திருவிளையாடல்களில் முப்பதாவது படலமான யானை எய்த படலத்தை மேற்கண்ட ஒரு வரி மூலம் மிக அழகாக மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். உள்ளே நுழைந்த மதம் பிடித்த யானையை போரிட்டு குத்தி செயலிழக்கச் செய்து இறக்க வைத்த நிகழ்ச்சியை மேற்கண்ட ஒரு வரி மூலம் மிக அழகாக மாணிக்கவாசகர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பு: கடம்பூர் என்பது கடலூர் பக்கத்தில் இருக்கும் திருத்தலத்தை குறிப்பது அல்ல.
யானை எய்த படலம் கதை கீழ்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும்
ஈங்கு என்றால் சந்தனம், கோய் என்றால் மலை, மலை என்றால் அடிபட்ட இடம், வீக்கம்,
இல்- மாடு,பசு எழில் - குறிப்பு காட்டுதல், தோற்றம் காட்டுதல்
சதுரகிரி என்று அழைக்கப்படும் சந்தன மலையில் பசுவிடம் பால் குடிக்கும் போது தலையில் அடிபட்டு, பின் தன் உண்மைத் தோற்றத்தை காண்பித்து தன் அடியவருக்கு குறிப்பு சொன்ன நிகழ்ச்சியை இந்த வரிகள் மூலம் மாணிக்கவாசகர் சொல்கிறார். இங்கே குறிப்பிடப் பட்டுள்ள நிகழ்ச்சியை, சதுரகிரி மலை தல வரலாற்றில் தெரிந்து கொள்ளலாம். சதுரகிரி மலை தல வரலாறு கீழ்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: திருஈங்கோய்மலை அல்லது ஈங்கோய்மலை என்பது இப்போது திருவிங்கநாதமலை என்னும் பெயருடன் திருச்சி – நாமக்கல் சாலையில் உள்ள திருத்தலத்தை குறிப்பது அல்ல.
ஐயாறு அதனில் சைவன் ஆகியும் 85
ஐயாறு எனில் ஐயாறப்பன் திருவையாறு திருத்தலம், சைவன் என்றால் புலால் உண்ணாதவன்
சிவாச்சாரியார் ஒருவர் காசியாத்திரை சென்று உரிய காலத்தில் வர தாமதம் ஏற்பட, இறைவன், சிவாச்சாரியார் வடிவம் கொண்டு தம்மைத் தாமே பூசித்துக்கொண்டார். என்கிற நிகழ்ச்சியை மேற்கண்ட வரிகள் மூலம் மாணிக்கவாசகர் குறிப்பிட்டுள்ளார். ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு, தலவரலாறு கீழ்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும் (86வது வரி)
து - உணவு, இருத்தி - அக்கறையுடன், அருத்தி - பிச்சைகாரன், இரப்போன், உண்பி,
ஓடு - திருவோடு, இருந்தும் - ஆயினும், இருந்த போதிலும்,
மேற்கண்ட வரி சுந்தரரின் பசியைப் போக்குவதற்காக சிவபெருமான் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து சுந்தரருக்கு உணவு கொடுத்த நிகழ்ச்சியை குறிக்கிறது.
கடவுளாக இருந்த போதிலும் சுந்தரரின் மீது அக்கறை கொண்டு அவருக்கு தேவையான உணவை பெறுவதற்காக திருவோடு ஏந்தியவர் இறைவன் என மிக அழகாக ஒரே வரியில் மாணிக்கவாசகர் குறிப்பிட்டுள்ளார். சிநேகிதனுக்காக சிவபெருமானே பிச்சை எடுத்த அற்புதக்கதை கீழ்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
https://thiruvasagammeaning.blogspot.com/2020/04/blog-post_80.html?view=magazine
குறிப்பு: துருத்தி என்பது எந்த ஒரு திருத்தலத்தையும் குறிப்பது அல்ல.
Comments
Post a Comment