Skip to main content

ஏகன் அநேகன் இறைவன் வரிக்கு விளக்கம்


ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
ஏகன் என்றால் ஒருவன், தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் என்று பொருள். அநேகன் என்றால் பல உருவம் கொண்டவன் என்று பொருள். சிவனை ஏகன் என்று சொல்லி, இதன் மூலம் சிவனை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்று அழகாக சொல்கிறார் மாணிக்கவாசகர். அதுமட்டுமன்றி அநேகன் என்று சொல்வதன் மூலம் இறைவன் பல்வேறு வடிவமாக, எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார். நமக்கு எல்லாம் தெரியும், நம்முடைய சிவன்,  ஒளி வடிவமாய் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறான் என்று. அறிவியல் பெருவெடிப்பு  தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது. அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம்  சொல்கிறது. எனவே அறிவியல் தத்துவத்தின் படி பார்த்தாலும் இறைவன் பல்வேறு வடிவமாக எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான். இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம். ஏகன் என்கிற வார்த்தைக்கு தமிழ் அகராதியில் மிக அழகானதொரு பொருள் அகத்துரைப்போன். அதாவது நமக்கு புரியும் வகையில், பேச்சுத்தமிழில் சொல்ல வேண்டுமென்றால் மனசாட்சி என்று பொருள். அநேகன் என்கிற வார்த்தைக்கு மற்றொரு பொருள் ஆன்மா.  இந்தக் கோணத்தில்
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க வரியின் முழுப் பொருள் என்னவென்று பார்த்தால், மன சாட்சியாய், ஆன்மாவாய் இருக்கிற இறைவன் திருவடி வாழ்க என்றும் பொருள் கொள்ளலாம். திருவாசகத்தின் முக்கிய சிறப்பு என்னவென்று பார்த்தால், திருவாசகம் முழுவதுமே தன்மை ஒருமையில் (First person singular) பாடப்பட்டிருக்கிறது. தன்மை இடத்தில் ஒருவரைக் குறிப்பது தன்மை ஒருமை எனப்படும். (.கா) நான் பேசினேன், யான் பேசினேன். தன்மை ஒருமையில் திருவாசகம் இருப்பதினால் யார் அதைப் படித்தாலும் பாடினாலும் அவர்களுக்கு பொருந்துவதாய் திருவாசகம் அமைகிறது என்பதுதான் திருவாசகத்தின் சிறப்பு. எனவே நாம் திருவாசகம் படிக்கும் பொழுது இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க, ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க, ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க என்ற படிக்கும்பொழுது என்  நெஞ்சில் இமைப்பொழுதும் நீங்காமல், ஆன்மாவாய், மனசாட்சியாய், என்னுள் இருக்கும் இறைவன் தாள் வாழ்க என்று  படிப்பவர் ஒவ்வொருவருக்கும் பொருந்துமாறு அமைகிறது.  ஏகன் என்கிற வார்த்தைக்கு தனித்தன்மை வாய்ந்தது என்கிற ஒரு பொருள் வரும்.  ஒவ்வொரு ஆன்மாவும் தனித்தன்மை உடையது என்கிற பொருளில், ஒவ்வொரு ஆன்மாவும் இறைவன் என்கிற பொருளில், தனித்தன்மை வாய்ந்த பல ஆன்மாக்களாய் இருக்கிற இறைவன் திருவடி வாழ்க என்று என்கிற பொருளிலும் நாம் பொருள் கொள்ளலாம். இந்த வரிக்கு என்று நம்மை இணைந்து விளக்கம் காண வைத்த அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் திருவடி பணிந்து வணங்குவோம்.

தினமும் மாலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரை நித்திய பிரதோஷம். இந்த பிரதோஷ வேளையில் சிவபுராணம் படிப்பது மிகவும் பயனளிக்கும். எனவே சிவபுராண பாராயண குழுவில் இருப்பவர்கள் தங்களால் முடிந்தால், நித்திய பிரதோஷ வேளையான 4:30 -6:00 ல் அரை மணி நேரமோ அல்லது அவர்களால் முடிந்த அளவு படிக்கவும். இது கட்டாயம் அல்ல. முடிந்தவர்கள் அந்த வேளையில் படிக்கவும். நிறைய அன்பர்கள் அந்த வேளையில் படிக்கும் பொழுது அது கூட்டுப்பாராயணம் ஆகவும்  அமையும். ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம்

Comments

  1. Your thought process and reaearch is very good (Sanath Kumar Jatahdharan)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கீர்த்தி திருஅகவல் விளக்கம் - 5 (வரிகள் 71- 86)

தேவூர் தென்பால் திகழ்தரு தீவிற் கோவார் கோலங் கொண்ட கொள்கையும் தேவூர்   - தேவூர் என்னும் திருத்தலம் , தென்பால்   - தென் பகுதி , திகழ் - மிகச் சிறப்பான ,   தீவி - கல் , வெளிநாட்டு செடிவகை , கோவார் ( கோ + வார் )   கோ - பசு , வார் - முலைக்கச்சு , கோலம் - வேடம் , தோற்றம் , கொள்கை - நிகச்சி தேவூர் என்னும் திருத்தலத்தில் தென்பகுதியில் சிறப்புமிக்க மரமான கல்லில் , பசுவின் முலையாக , அதாவது கன்றுக்கு பால் கொடுக்கும் வேடத்தில் தோன்றிய நிகழ்ச்சியும் என்று பொருள் . தேவூர் திருத்தலம் பற்றிய தகவல்கள்   தேனமர் சோலைத் திருவா ரூரில் ஞானந் தன்னை நல்கிய நன்மையும் தே - கடவுள் , இறைவன் , அமர் - விரும்பி , இருக்கும் , சோலை - அழகிய , திருவா ரூரில் - திருவாரூர் என்னும் திருத்தலத்தில் , ஞாலம் - பூமி , தன்னை - இறைவனை , நல்கிய - அருள் செய்கின்ற , நன்மை - சிறப்பும் இறைவன் விரும்பி இருக்கும் அழகிய திருவாரூர் எனும் திருத்தலத்தில் , பூமியாக இறைவன் இருந்து அருள் செய்கின்ற சிறப்பும் என்று பொருள் . ...

திருஅண்டப்பகுதி விளக்கம் வரிகள் 10 - 14

சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்   தெறியது வளியின் கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும் சூக்கம் - மிகவும் சிறிதாக , நுட்பமாக , தூலம் - விஷம் , சூறை - கழுத்தின் பின்குழி , மாருதம் - கோதை , பெண் , தெறி - விரலால் உந்துவது , வளி - சிறிது நேரம் , கொட்குதல் - மூர்ச்சித்தல் , மயக்கமடைதல்   பெயர் - தள்ளி விடுதல் , குழகன் - சிவன் , முழுவதும் - ஒப்பில்லாத பரம்பொருள் உலகத்தை காப்பாற்ற ஆலகால விஷத்தை மிகச்சிறியதாக , நுட்பமானதாக மாற்றி , அதை விழுங்கி , ஒப்பில்லாத பரம்பொருளான சிவன் சிறிது நேரம் மயக்கமடைந்தார் . உமையம்மை அந்த விஷத்தை விரலால் கழுத்தின் குழிப் பகுதியில் தள்ளிவிட்டார்   என்று மாணிக்கவாசகர் இங்கு குறிப்பிடுகிறார் . சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலுக்கு , 1977- ம் ஆண்டு காஞ்சி பெரியவர்   விஜயம் செய்தபோது , இக்கோவில் , விக்கிரகம் பற்றிய சிறப்புகளை எடுத்துக் கூறி அருளாசி வழங்கினார் . பள்ளி கொண்டிருக்கும் பரமேஸ்வரின் திருவுருவம் அபூர்வம் என்றும் , தாம் கண்ட கண்கொள்ளாக் காட்சியை அனைவரும் கண்டு தரிசிக்க ...

சிநேகிதனுக்காக சிவபெருமானே பிச்சை எடுத்த அற்புதம்!

சுந்தரரின் பசியை போக்க சிவபெருமானே திருவோடு ஏந்தி பிச்சை எடுத்த திருத்தலம் திருக்கச்சூர் ஆகும். சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது மறைமலைநகர். இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது  திருக்கச்சூர் . சிங்கபெருமாள் கோவிலில் இருந்தும் திருக்கச்சூருக்கு வரலாம். இங்கே பிரமாண்டமான ஆலயத்தில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் சிவனார். இவரின் திருநாமம்  ஸ்ரீகச்சபேஸ்வரர் . அம்பாள் ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மை. உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீதியாகேசப் பெருமான். சுந்தரர்  இந்தத் தலத்துக்கு வந்தபோது, பசியால் களைத்து மயக்கத்துடன் அமர்ந்தார். அப்போது வயோதிகராக வந்த சிவனார், என்ன வேண்டும் எனக் கேட்டார். ‘பசிக்கிறது. உணவுதான் வேண்டும்’ என்றார் சுந்தரர். உடனே திருவோடை எடுத்துக் கொண்டு, வயோதிகத் தோற்றத்திலேயே, வீடுவீடாகச் சென்று, ‘சிவனடியார் சுந்தரர் வந்திருக்கிறார். அன்னம் வழங்குங்கள்’ என்று கேட்டு, பிக்ஷை எடுத்து, உணவு கொண்டு வந்து கொடுத்தார். பிறகு பசியாறிய சுந்தரருக்கு, சிவனார், உமையவளுடன் ரிஷபாரூடராகக் காட்சி அளித்தார். கச்சபேஸ்வரர் மூலவராகவும் தியாகேசர் உ...