Skip to main content

Posts

Showing posts from September, 2020

சிவபுராணம் வரிகள் 91- 95 விளக்கம்

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து .   அல் - உடல் , பிறவி -   பிறப்பு , அறுத்தல் - நீக்குதல் , இல்லாமற் செய்தல் ,   ஓ - மடைமாற்றம் , பாதை மாற்றம் , அகத்தூய்மை   சொல்லற்கு - சொல் + அற்கு , சொல் -   உறுதிமொழி , அறிவித்தல் பறைசாற்றுதல் , அற்கு - காலத்தினால் அழியாத , எப்பொழுதும் அழியாத , நிலைத்து நிற்பவன் , அரிய - போற்றத்தக்கவன் , சொல்லி - என்று கூறி , கீழ் - பூலோகம் , மண்ணுலகம் ,   சொல்லிய பாட்டின்   -   பாசுரம் , பாடல்கள் , பொருள் - மெய்ப்பொருள் , தலைமைப் பொருள் ,   செல்வர் - அடைவர் , உள் - சிறப்பான , மேன்மையான , ஆர் - அரிய , எல்லோரும் - சகலரும் , அனைவரும் ஏத்தல் - போற்றித்துதித்தல் , பணிந்து - வணங்குதல் , நமக்கு மடைமாற்றம் செய்து , அதாவது அகத்தூய்மை செய்து , பாதை மாற்றி , ஆன்மா உடலுடன் பிறக்கும் பிறப்பை நீக்குபவன் இறைவன் என்று   ...