Skip to main content

சிவபுராணம் வரிகள் 66 - 70 விளக்கம்

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே

பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே

நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே


மாசற்ற - கருமையற்றமங்காத  சோதி - ஒளிமலர்ந்த  தோன்றிய, 

மலர்ச்சுடரே - மலர் என்றால் மிகப் பிரகாசமானசுடர் என்றால் ஒளி,

தேசன் - ஒளிமயமாயுள்ளவன்பெரியோன்தேன் - தேன்ஆர்அமுதே - ஆர் என்றால் அரியஆர்அமுதம் என்றால் அரியஅமுதம், புரம் - நகரம்ஊர்பாசம் மும்மலம்ஆணவமலம்,  பற்று இல்வாழ்க்கைஅறுத்தல் - நீக்குதல்இல்லாமற் செய்தல், 

பாரி - கொட்டுமுழக்குடன் புரியும் இராக்காவல்ஆரியன் -கழைக்கூத்தன், 

 நேசம் - ஆர்வம்நெஞ்சம் - மனம்வஞ்சம் - மாயைகபடம்பொய் , 

கெடுத்தல் - நீக்குதல்காணாமற் போகுதல், பே - பெரும்ஆது - தோணிகட்டுமரம்பேராது என்றால் பெரிய மிதவைதெப்பம்கட்டுமரம் என்று பொருள் . பே என்ற என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாக ஆசிரியர்பேராசிரியர்ஆணைபேராணை என்ற சொற்களை நாம் சொல்லலாம்நின்ற - நிலைத்த பொருள்எப்பொழுதும்,  ஆறு - நதிநீர் வழி


தீ என்பது எப்போது எரிந்தாலும் அதில் கரித்துகள்கள் (carbon) மற்றும் கருமை வருவதை தடுக்க இயலாதுஆனால் இறைவன் தீயாக இருந்தாலும்அதாவது அக்னியாக ஒளிர்ந்து கொண்டே இருந்தாலும் அதில் கருமை மற்றும் கரித்துகள்கள் இல்லாமல் மாசற்றவனாககருமை அற்றவனாகமங்காதபேரொளியாய் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான் என்று மாசற்ற சோதி  என்ற வரியில்  மாணிக்கவாசகர் கூறுகிறார்இறைவன் திருவண்ணாமலையில் அக்னியாக தோன்றியவன் ஆனதால் மாணிக்கவாசகர்  இங்கே, மலர்ந்த மலர்ச்சுடரே என்று குறிப்பிடுகிறார்அதாவது தோன்றிய பிரகாசமான ஒளியே என்று இறைவனை வர்ணிக்கிறார்மேலும் அவர் இறைவனைபெரியோனேஒளிமயமானவனேதேனேஅரிய அமுதமாக இருப்பவனே , சிவபுரம் என்கிற நகரத்தை சேர்ந்தவனே என்றெல்லாம் தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே என்ற வரியில் வர்ணிக்கிறார்தேன் என்று ஏன் சொல்லி இருக்கிறார் என்றால் அதற்கு இணையான வேறு திரவம் உலகில் இல்லைஅதுமட்டுமல்ல தேனை நம்ம செயற்கையாக உற்பத்தி செய்ய இயலாதுஎனவே மாணிக்கவாசகர்இங்கு இறைவனை தேனே என்று சொல்வது மிகப் பொருத்தமானதாகும்அதேபோல் அமுதம் என்று குறிப்பிடும் பொழுது வெறும் அமுதம் என்று குறிப்பிடாமல் அரிய அமுதம் என்று குறிப்பிட்டுள்ளார்அதாவது தேவர்களுக்கு கிடைத்த அமுதம் இவன் இல்லைஅதை விடவும் அரிய அமுதம் என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்மாணிக்கவாசகர் தேர்ந்து எடுத்துள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் மிக ஆச்சரியமாய் இருக்கிறதுஉலகத்தில் நமக்குத் தெரிந்த பொருட்களில்மிக உயரிய பொருட்களைக் கொண்டே மாணிக்கவாசகர் இறைவனை வர்ணித்திருக்கிறார்ஆணவம்கர்வம்இல்வாழ்க்கை போன்றவற்றையெல்லாம் அறுத்து அதாவது அவைகளை நம்முள் இல்லாமல் செய்கிறான் என்று “பாசமாம் பற்று அறுத்துப்  என்பதன் மூலம் சொல்கிறார் மாணிக்கவாசகர்பாரி என்றால் கொட்டுமுழக்குடன் புரியும் இராக்காவல்ஆரியன்  என்றால் கழைக்கூத்தன் என்று பொருள்மனிதர்களின் பிறவித் தளையை அறுத்துநம்மை பிறவிச் சூழலில் இருந்து விடுவித்த சந்தோஷத்துடன் சிவனவன் நடுஇரவில் கழைக்கூத்தாடுகிறான் என்று மாணிக்கவாசகர் வர்ணிக்கிறார்சிவன் நடுஇரவில் சாம்பலைப் பூசிக்கொண்டுகழைக்கூத்தாடுவதற்கான காரணம் புரிந்த பொழுதுநம்முடைய இறைவன் சிவன்நம் மேல்உயிர்கள் மேல் எத்தனை அன்புடன் இருக்கிறான் என்று புரிந்த பொழுது கண்ணீர் கசிந்ததுநம்மேல்,  உயிர்கள் மேல் அன்பாய் இருக்கும்,  அந்த அற்புதமான இறைவன்  மேல்நாமும் அன்பு செலுத்தக் கற்றுக் கொள்வோம்நம் குழந்தைகளுக்கும் இறைவன் மேல் அன்பு செலுத்தக் கற்றுக் கொடுப்போம்இறைவன் என்பவன்நம்முடனேநம்முள்ளேநமக்காக தாயாய் தந்தையாய்தோழனாய் தோழியாய்குருவாய் நமக்கு பலவிதமாக வழிகாட்டிக் கொண்டிருக்கிறான்அதனை நாமும் உணர்ந்து நம் குழந்தைகளுக்கும் உணர்வதற்கு சொல்லிக் கொடுப்போம்சிவபுராணத்தை திருவாசகத்தைகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்போம்திருவாசகம் என்ன கொடுக்கும்காசு கொடுக்குமாவீடு கொடுக்குமாகார் கொடுக்குமாஎன்று கேட்பவர்களுக்குஇவை அனைத்தும் உள்ள அனேகம் பேரை நம் வாழ்வில் சந்திக்கிறோம்ஆனால் இவர்கள் அனைவருமே ஒரு முழுமை அடையாமல்நிறைவு அடையாமல்இருப்பதைதான் நாம் பார்க்க முடியும்இறைவனை உணரும் பொழுதுமனம் அடங்கும், “வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க” என்கிற வரியின் பொருள் புரியும்இந்த நிறைவைதிருப்தியை எடுத்துச் சொல்வதற்கு வார்த்தைகளுக்கு வலிமை கிடையாதுஇதை அனுபவிக்கும் பொழுது மட்டுமே புரிந்து கொள்ள முடியும்இனி ஒவ்வொரு முறையும் “பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே” என்று பாடும்பொழுதுபடிக்கும் பொழுது நம் மனக்கண்முன்  நமக்காய் கழைக்கூத்து ஆடும் இறைவன் தெரியட்டும்இறைவனின் அன்பு புரியட்டும் .  இறைவன் நம் மேல் ஆர்வம் கொண்டு நம்முடைய கபடம்பொய்மாயை எல்லாவற்றையும் நீக்குகிறான் என்பதை நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட என்கிற வரியில் மிக அழகாக மாணிக்கவாசகர் சொல்லியிருக்கிறார்அதுமட்டுமல்லாது நாம் பிறவிக் கடலை கடப்பதற்காக மிகப்பெரிய தெப்பமாய்மிதவையாய் அவனுடைய பெருங்கருணை என்கிற பெரிய ஆற்றில் நமக்காக எப்பொழுதும் நின்று கொண்டிருக்கிறான் என்றுபேராது நின்ற பெருங்கருணைப் பேராறே என்கிற வரியில் மிக அழகாக பாடியிருக்கிறார் மாணிக்கவாசகர். “அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி” என்கிற வரிக்கு விளக்கமாக பெரும் நங்கூர கயிற்றினால்கப்பலைகரையில் நிலைநிறுத்த பிணைத்திருப்பது போல்,  நமது பிறவிஎண்ணங்கள் மற்றும் செயல்கள் என்கிற நங்கூர கயிற்றினால் பிணைக்கப்பட்டு நாம் பிறவிக் கடலை நீந்தி கடக்க முடியாமல்நம்மை கரையிலேயே நிலை நிறுத்தி வைத்திருக்கிறது என்று பார்த்தோம்பிறகு, “விலங்கு மனத்தால்” என்று பார்த்தோம் அதாவது மனம்எண்ணம் என்னும் தளைகளால்,விலங்கால் பிணைக்கப்பட்டு இருப்பதாகப் பார்த்தோம்பாராயணத்தின் மூலம்நாம ஜெபத்தின் மூலம் இந்த எண்ண தளைகளில் இருந்து விடுபட முயற்சி செய்வோம்அப்படி நம்முடைய எண்ண தளைகளில் இருந்துநாம் விடுபடும் பொழுது நம்மை காப்பாற்றி அழைத்துச் செல்லபெரும் கருணையோடு இறைவன் காத்திருக்கிறான் என்பதை மாணிக்கவாசகர் மிக அழகாக “பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே” என்கிற வரியில் சொல்கிறார்இதுவரை நாம் பார்த்த சிவபுராணம் வரிகள் மட்டுமேநம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் மிக அழகாகஎளிமையாக சொல்லிவிட்டது.  


Comments

Popular posts from this blog

ஏகன் அநேகன் இறைவன் வரிக்கு விளக்கம்

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ஏகன் என்றால் ஒருவன் , தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் என்று பொருள் . அநேகன் என்றால் பல உருவம் கொண்டவன் என்று பொருள் . சிவனை ஏகன் என்று சொல்லி , இதன் மூலம் சிவனை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்று அழகாக சொல்கிறார் மாணிக்கவாசகர் . அதுமட்டுமன்றி அநேகன் என்று சொல்வதன் மூலம் இறைவன் பல்வேறு வடிவமாக , எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார் . நமக்கு எல்லாம் தெரியும் , நம்முடைய சிவன் ,   ஒளி வடிவமாய் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறான் என்று . அறிவியல் பெருவெடிப்பு   தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது . அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம்   சொல்கிறது . எனவே அறிவியல் தத்துவத்தின் படி பார்த்தாலும் இறைவன் பல்வேறு வடிவமாக எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் . இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம் . ஏகன் என்கிற வ...

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் வரிக்கு விளக்கம்

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள் . பிறப்பறுக்கும் என்றால் பிறவித் தளையை அறுத்தல் என்று பொருள் . பெய் என்றால் மேலிருந்து பொழிதல் என்று பொருள் . பெய்கழல்கள் என்றால் நமக்கு மேலே இருந்து கருணை மழை பொழிபவனின் திருப்பாதங்கள் என்று பொருள் . அடுத்த பிறவி இல்லாமல் இருப்பது ஏன் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது என்று ஒருசிலருக்கு புரியாத புதிராக இருக்கிறது . இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு புரியுமாறு சொல்லவேண்டுமென்றால் , இன்னும் ஒரு 70 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . தண்ணீர் பற்றாக்குறை , மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஏட்டுக் கல்வி ,   அந்தக் கல்வியைப் பெற நாம் படும் துன்பங்கள் , நல்ல துணையை தேடி திருமணம் செய்து , பிறகு குழந்தை பிறந்த பிறகு அவர்களை நன்மக்களாக அடுத்த நூற்றாண்டில் வளர்ப்பதில் உள்ள கஷ்டங்கள் , உணவே மருந்தாக இருக்கும் நிலைமை மாறி மருந்தே உணவாக இருக...

பாண்டூர் வைத்தீஸ்வரன் ஆலயம் - கீர்த்தி திருஅகவல் கதை

பாண்டூர்   வைத்தீஸ்வரன்   ஆலயம் -சாந்திப்பிரியா- மிக்க நன்றி சாந்திப்பிரியா அவர்களே, உங்கள் தகவல் மிக மிக உபயோகமாக இருந்தது https://santhipriya.com/2018/04/மூன்றாவது-வைத்தீஸ்வரன்-ஆ.html மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில்  வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே  இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.  இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில்  இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது.    மஹாபாரத யுத்தம் முடிந்த  பின் எதற்காக பாண்டவ சகோதரர்...